10-03-2005, 06:52 PM
விமர்சனம்
'என் மனக் கவலைக்கெல்லாம்
உன் மடித் தலையணையே மருந்து'
காதலாய் பாராட்டும் கணவர்!
'அந்த நிறுவனத்தில்
எப்படி ஆர்டர் வாங்கினீங்க?'
அதிசயிக்கும் மானேஜர்!
'மகராசி.. உம் முகத்துக்காகத்தான்
தொடர்ந்து இருக்கேன்..'
கசிந்துருகும் வேலைக்காரி!
அத்தனை சமர்த்தும்
அடிபட்டுப் போய் விட்டது
ஆயாவிடமிருந்து வரமறுக்கும்
என் குழந்தையிடம்!
'என் மனக் கவலைக்கெல்லாம்
உன் மடித் தலையணையே மருந்து'
காதலாய் பாராட்டும் கணவர்!
'அந்த நிறுவனத்தில்
எப்படி ஆர்டர் வாங்கினீங்க?'
அதிசயிக்கும் மானேஜர்!
'மகராசி.. உம் முகத்துக்காகத்தான்
தொடர்ந்து இருக்கேன்..'
கசிந்துருகும் வேலைக்காரி!
அத்தனை சமர்த்தும்
அடிபட்டுப் போய் விட்டது
ஆயாவிடமிருந்து வரமறுக்கும்
என் குழந்தையிடம்!
....

