10-03-2005, 01:46 AM
[size=18]பாரதியின் பாடல்தொகுதியில் வராதபாடல்கள்
மலர்:
வண்டு தேன் உண்ண வரில் இதழ் திறவேன்!
காந்தம்:
இரும்பெனை அணுகினால் யான் அதைத் தீண்டேன்
இயற்கைத் தெய்வம்:
மலரிலே வைத்ததேன் மலர்க்குரித் தன்று;
மலரிலே வைத்ததேன் வண்டினுக் குரியது!
இரும்பினை அணுகா திருப்பது காணின்
காந்தம் அன்று கருங்கல் அஃதே!
தீயிலே எரியா மரம் ஒன் றில்லை;
காதலில் இளகாக் கன்னிநெஞ் சில்லை;
துறத்தலே பெரிது; துறத்தலே பெரிது;
மறத்தலும் இறத்தலும் கடந்தநற் காதல்
தோன்றுநாள் வரையில் துறத்தலே பெரிது.
நன்றி ராணி 30/01/1994 இதழ்.
"காதலும் கன்னியர் விரதமும்" என்னும் நூலுக்கு முகவுரையாக பாரதியாரால் எழுதப்பட்ட பாடல். நூல் வெளிவராததால் இப்பாடல் பாரதியார் பாடல் தொகுப்பில் விடுபட்டுவிட்டது.
பாரதியின் விடுபட்ட மேலும் ஒரு கவிதை
சத்தியப் போர்
பந்தமுற்று எத்தனை நாள் - இந்தப்
பாரினில் ஈடழிதல்
தொந்தமில் லாத சுக - வாழ்வைத்
தோற்றுவிப்போம் வாராய்!
இந்த உடல் சதமோ - இது
என்றும் இறப்பதுவே
தந்தை மரிப்பவனே - பெற்ற
தாயும் இறப்பவளே
மக்கள் மனைவி பொருள் - யாவும்
மாயன் வினைப் பொருளே
துக்கந் தரும் இவற்றை - உடன்
தூவென்று தள்ளிவிடு
மிக்க வெம்புல் அடிமை - நீங்கி
மேதகு வாழ்வு பெற
சத்தியப் போர் செய்குவாய் - அட
இந்தியனே யெழுவாய்!
கத்தி வில் வாள் கதைகள் - எறி
கற்கள் சூலாயுதங்கள்
பித்தர்கள் தங்களுக்கு - வெகு
பெட்புடை ஆயுதங்கள்
சத்தியம், ஈகை, அருள் - பக்தி
சான்ற மனப் பெரியோர்
நித்தியமான வுயர் ஆத்ம
நேர்படையே கொள்ளுவார்
வெற்றி அடைந்து விட்டால் - இங்கு
வேண சுகங்களை நீ
பெற்று அரசாண்டிடுவாய் - புவி
பேணி யுயர்ந்திடுவாய்!
நன்றி ராணி 30.01.1994 இதழ். இப்பாடல் 1920_இல் பாரதியாரால் எழுதப்பட்டது. 1932_இல் "சுதந்திர சங்கு" இதழில் வெளியிட்டார்கள்.
1920_ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அப்போது இப்பாடலை பாரதியார் பாடியிருக்கிறார்.
மலர்:
வண்டு தேன் உண்ண வரில் இதழ் திறவேன்!
காந்தம்:
இரும்பெனை அணுகினால் யான் அதைத் தீண்டேன்
இயற்கைத் தெய்வம்:
மலரிலே வைத்ததேன் மலர்க்குரித் தன்று;
மலரிலே வைத்ததேன் வண்டினுக் குரியது!
இரும்பினை அணுகா திருப்பது காணின்
காந்தம் அன்று கருங்கல் அஃதே!
தீயிலே எரியா மரம் ஒன் றில்லை;
காதலில் இளகாக் கன்னிநெஞ் சில்லை;
துறத்தலே பெரிது; துறத்தலே பெரிது;
மறத்தலும் இறத்தலும் கடந்தநற் காதல்
தோன்றுநாள் வரையில் துறத்தலே பெரிது.
நன்றி ராணி 30/01/1994 இதழ்.
"காதலும் கன்னியர் விரதமும்" என்னும் நூலுக்கு முகவுரையாக பாரதியாரால் எழுதப்பட்ட பாடல். நூல் வெளிவராததால் இப்பாடல் பாரதியார் பாடல் தொகுப்பில் விடுபட்டுவிட்டது.
பாரதியின் விடுபட்ட மேலும் ஒரு கவிதை
சத்தியப் போர்
பந்தமுற்று எத்தனை நாள் - இந்தப்
பாரினில் ஈடழிதல்
தொந்தமில் லாத சுக - வாழ்வைத்
தோற்றுவிப்போம் வாராய்!
இந்த உடல் சதமோ - இது
என்றும் இறப்பதுவே
தந்தை மரிப்பவனே - பெற்ற
தாயும் இறப்பவளே
மக்கள் மனைவி பொருள் - யாவும்
மாயன் வினைப் பொருளே
துக்கந் தரும் இவற்றை - உடன்
தூவென்று தள்ளிவிடு
மிக்க வெம்புல் அடிமை - நீங்கி
மேதகு வாழ்வு பெற
சத்தியப் போர் செய்குவாய் - அட
இந்தியனே யெழுவாய்!
கத்தி வில் வாள் கதைகள் - எறி
கற்கள் சூலாயுதங்கள்
பித்தர்கள் தங்களுக்கு - வெகு
பெட்புடை ஆயுதங்கள்
சத்தியம், ஈகை, அருள் - பக்தி
சான்ற மனப் பெரியோர்
நித்தியமான வுயர் ஆத்ம
நேர்படையே கொள்ளுவார்
வெற்றி அடைந்து விட்டால் - இங்கு
வேண சுகங்களை நீ
பெற்று அரசாண்டிடுவாய் - புவி
பேணி யுயர்ந்திடுவாய்!
நன்றி ராணி 30.01.1994 இதழ். இப்பாடல் 1920_இல் பாரதியாரால் எழுதப்பட்டது. 1932_இல் "சுதந்திர சங்கு" இதழில் வெளியிட்டார்கள்.
1920_ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அப்போது இப்பாடலை பாரதியார் பாடியிருக்கிறார்.
.
.
.

