Yarl Forum
பாரதியார் கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பாரதியார் கவிதைகள் (/showthread.php?tid=3327)



பாரதியார் கவிதைகள் - sakthy - 09-13-2005

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தூய நல்லறிவு வேண்டும்

பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியைப் போல
நண்ணிய நின்முனிங்கு
நசிந்திடல் வேண்டு மன்னய்[/b]


- கீதா - 09-13-2005

நல்ல கவிதை நன்றி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்


- Mathan - 09-13-2005

Confusedhock: ஜோதிகா இது பாரதியார் எழுதிய கவிதை


- sakthy - 09-13-2005

நீங்க பாரதியாருக்கு தான் நன்றி சொல்லனும் ஜோதிகா.அந்த முட்டாசு கவிஞனின் கவிதைகளை நேசிப்பவள் நான்.நீங்களும் படித்து பாருங்களேன்


- sakthy - 09-13-2005

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும் ,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,
காரியத்திலுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்
- பாரதி


- கீதா - 09-16-2005

quote="Mathan"]Confusedhock: ஜோதிகா இது பாரதியார் எழுதிய கவிதை[/quote]









எனக்கு பாரதியார் கவிதை என்று தெரியும்?
ஆனால் சக்தி தானே கொண்டு வந்து பாரதியார் கவிதை என்று போட்டார் சக்திக்குத் தான் வாழ்த்து சொன்னன் :roll: ?


- vasisutha - 09-26-2005

<img src='http://img76.imageshack.us/img76/1903/barathy19ce.gif' border='0' alt='user posted image'>


- Birundan - 10-03-2005

[size=18]பாரதியின் பாடல்தொகுதியில் வராதபாடல்கள்

மலர்:
வண்டு தேன் உண்ண வரில் இதழ் திறவேன்!

காந்தம்:
இரும்பெனை அணுகினால் யான் அதைத் தீண்டேன்

இயற்கைத் தெய்வம்:
மலரிலே வைத்ததேன் மலர்க்குரித் தன்று;
மலரிலே வைத்ததேன் வண்டினுக் குரியது!

இரும்பினை அணுகா திருப்பது காணின்
காந்தம் அன்று கருங்கல் அஃதே!

தீயிலே எரியா மரம் ஒன் றில்லை;
காதலில் இளகாக் கன்னிநெஞ் சில்லை;

துறத்தலே பெரிது; துறத்தலே பெரிது;
மறத்தலும் இறத்தலும் கடந்தநற் காதல்
தோன்றுநாள் வரையில் துறத்தலே பெரிது.

நன்றி ராணி 30/01/1994 இதழ்.
"காதலும் கன்னியர் விரதமும்" என்னும் நூலுக்கு முகவுரையாக பாரதியாரால் எழுதப்பட்ட பாடல். நூல் வெளிவராததால் இப்பாடல் பாரதியார் பாடல் தொகுப்பில் விடுபட்டுவிட்டது.

பாரதியின் விடுபட்ட மேலும் ஒரு கவிதை

சத்தியப் போர்

பந்தமுற்று எத்தனை நாள் - இந்தப்
பாரினில் ஈடழிதல்
தொந்தமில் லாத சுக - வாழ்வைத்
தோற்றுவிப்போம் வாராய்!
இந்த உடல் சதமோ - இது
என்றும் இறப்பதுவே
தந்தை மரிப்பவனே - பெற்ற
தாயும் இறப்பவளே

மக்கள் மனைவி பொருள் - யாவும்
மாயன் வினைப் பொருளே
துக்கந் தரும் இவற்றை - உடன்
தூவென்று தள்ளிவிடு
மிக்க வெம்புல் அடிமை - நீங்கி
மேதகு வாழ்வு பெற
சத்தியப் போர் செய்குவாய் - அட
இந்தியனே யெழுவாய்!

கத்தி வில் வாள் கதைகள் - எறி
கற்கள் சூலாயுதங்கள்
பித்தர்கள் தங்களுக்கு - வெகு
பெட்புடை ஆயுதங்கள்
சத்தியம், ஈகை, அருள் - பக்தி
சான்ற மனப் பெரியோர்
நித்தியமான வுயர் ஆத்ம
நேர்படையே கொள்ளுவார்

வெற்றி அடைந்து விட்டால் - இங்கு
வேண சுகங்களை நீ
பெற்று அரசாண்டிடுவாய் - புவி
பேணி யுயர்ந்திடுவாய்!

நன்றி ராணி 30.01.1994 இதழ். இப்பாடல் 1920_இல் பாரதியாரால் எழுதப்பட்டது. 1932_இல் "சுதந்திர சங்கு" இதழில் வெளியிட்டார்கள்.
1920_ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அப்போது இப்பாடலை பாரதியார் பாடியிருக்கிறார்.


- RaMa - 10-03-2005

நன்றிகள்


- sakthy - 10-03-2005

நன்றிகள் பிருந்தன். கொஞ்சம் நேரமின்மை காரணமாக தொடர முடியவில்லை .


- Mathan - 10-03-2005

Birundan Wrote:[size=18]பாரதியின் பாடல்தொகுதியில் வராதபாடல்கள்

தீயிலே எரியா மரம் ஒன் றில்லை;
காதலில் இளகாக் கன்னிநெஞ் சில்லை;

துறத்தலே பெரிது; துறத்தலே பெரிது;
மறத்தலும் இறத்தலும் கடந்தநற் காதல்
தோன்றுநாள் வரையில் துறத்தலே பெரிது.

நன்றி ராணி 30/01/1994 இதழ்.

"காதலும் கன்னியர் விரதமும்" என்னும் நூலுக்கு முகவுரையாக பாரதியாரால் எழுதப்பட்ட பாடல். நூல் வெளிவராததால் இப்பாடல் பாரதியார் பாடல் தொகுப்பில் விடுபட்டுவிட்டது.

ஆகா பாரதியார் காதல் கவிதைகளில் புகுந்து விளையாடியிருக்கின்றால் போல இருக்கு. இன்னும் வேறு கவிதைகள் இருக்கின்றனவா? அறிய தந்தமைக்கு நன்றி பிருந்தன்.


- அனிதா - 10-03-2005

நன்றிகள்...