10-02-2005, 04:54 PM
"<b>அந்த நதிக்கரைக்கு - என்னை
அழைத்துச் செல்லுங்கள்
ஆன்மா துடிக்கிறது - அங்கே
அழைத்துச் செல்லுங்கள்
ஓடிக் களைத்துவிட்டேன் - உறவில்
உள்ளம் சலித்துவிட்டேன்
பாடி அலுத்துவிட்டேன் - பெரும்
பாரம் சுமந்துவிட்டேன்
ஓயாமல் அடிக்கின்ற தென்றல் - கொஞ்சம்
ஒயிலாகச் செல்கின்ற ஆறு
சாயாமல் இருக்கின்ற புன்னை - அது
தமிழ் பேசி வரவேற்கும் என்னை
மலைதொட்டு அடிக்கின்ற சாரல் - எந்தன்
மடிதொட்டு நனைக்கின்ற தூறல்
தூரத்தில் நதியோடும் சத்தம் - எந்தன்
துயரத்தில் பங்கேற்கும் தித்தம்
இதயத்தில் என்னென்ன வேட்கை - இது
இடைவேளை இல்லாத வாழ்க்கை
வாழ்வோடு போராட்டம் இங்கே - இதில்
வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கே ?
என்னோடு குயில்பாட வேண்டும் - அந்த
குயிலோடு நான்பாட வேண்டும்
கண்ணோடு இமைமூட வேண்டும் - நான்
காற்றோடு சுதிசேர வேண்டும்
-வைரமுத்து (சிகரங்களை நோக்கி..)</b>
அழைத்துச் செல்லுங்கள்
ஆன்மா துடிக்கிறது - அங்கே
அழைத்துச் செல்லுங்கள்
ஓடிக் களைத்துவிட்டேன் - உறவில்
உள்ளம் சலித்துவிட்டேன்
பாடி அலுத்துவிட்டேன் - பெரும்
பாரம் சுமந்துவிட்டேன்
ஓயாமல் அடிக்கின்ற தென்றல் - கொஞ்சம்
ஒயிலாகச் செல்கின்ற ஆறு
சாயாமல் இருக்கின்ற புன்னை - அது
தமிழ் பேசி வரவேற்கும் என்னை
மலைதொட்டு அடிக்கின்ற சாரல் - எந்தன்
மடிதொட்டு நனைக்கின்ற தூறல்
தூரத்தில் நதியோடும் சத்தம் - எந்தன்
துயரத்தில் பங்கேற்கும் தித்தம்
இதயத்தில் என்னென்ன வேட்கை - இது
இடைவேளை இல்லாத வாழ்க்கை
வாழ்வோடு போராட்டம் இங்கே - இதில்
வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கே ?
என்னோடு குயில்பாட வேண்டும் - அந்த
குயிலோடு நான்பாட வேண்டும்
கண்ணோடு இமைமூட வேண்டும் - நான்
காற்றோடு சுதிசேர வேண்டும்
-வைரமுத்து (சிகரங்களை நோக்கி..)</b>
....

