10-02-2005, 12:29 PM
<b>ஆயுதப் படைகளில் சிறார் சேர்க்கப்பட்டால் 30 ஆண்டு சிறைத் தண்டனை </b>
[ஞாயிற்றுக்கிழமை, 2 ஒக்ரொபர் 2005, 05:48 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவில் ஆயுதப்படைகளில் சிறார் சேர்க்கப்பட்டால் தொடர்புடைய நபருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது.
இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.
18 வயதுக்குட்பட்டோர் குழந்தைகளாக இச்சட்டமூலம் வரையறை செய்துள்ளது.
சட்டவிரோதமாக சிறாரை வெளிநாட்டுக் கடத்திச் செல்வது, கணணிகளைப் பயன்படுத்தி சிறார் பாலியல் துஸ்ப்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடுவது, சிறார் பாலியல் துஸ்ப்பிரயோகம் நடைபெறும் இடங்களைத் தெரிவிக்க மறுப்பது, கொத்தடிமை முறை உள்ளிட்டவைகளுக்கும் பொருந்தும். இக்குற்றங்களில் ஈடுபடும் நபரை எவ்வித பிடியாணையுமின்றி கைது செய்ய சிறிலங்கா காவல்துறைக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இச்சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
http://www.eelampage.com/?cn=20491

::