Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பிய தடைக்கு கடும்கண்டனம்
#1
ஐரோப்பிய ஒன்றியத் தடைக்கு 'யாழ் பொங்கு தமிழ் பிரகடனம்' கடும் கண்டனம்
[வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2005, 16:49 ஈழம்] [யாழ். நிருபர்]
இலங்கையில் தமிழர்களின் பிரதிநிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச அரசியல் பணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதற்கு தற்போது நடைபெற்று வரும் யாழ். பொங்கு தமிழ் நிகழ்வின் பிரகடனம் கண்டனம் தெரிவித்துள்ளது.


யாழில் தற்போது நடைபெற்று வரும் யாழ். பொங்கு தமிழ் நிகழ்வில் பிரகடன உரையை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் செயலாளர் கோகுலன் வெளியிட்டார்.

தமிழீழத் தமிழினம் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு, சிறிலங்கா சுதந்திரத்துக்குப் பிந்தைய ஆட்சிக்காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகள் ஆகியவை அதில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும் அமைதிப் பேச்சுகளும் தோல்வியடைந்த வரலாறும் சுட்டிக்காட்டப்பட்டு இன்றைய போருமற்ற சமாதானமும் அற்ற சூழல் அந்தப் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய தடைக்கு தமிழ்ச் சமூகமானது தனது அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ள அந்தப் பிரகடனம், ஐரோப்பிய ஒன்றியப் பிரகடனம் ஒரு பக்கச்சார்ப்பானது என்றும் பொங்குதமிழ் பிரகடனம் சாடியுள்ளது.

பிரகடன வெளியிட்டுக்கு முன்பாக உரையாற்றிய யாழ்ப்பாண மாணவர் பேரவையின் தலைவர் விஜயரூபன் தனது உரையில் தெரிவித்ததாவது:

தமிழர் தங்களது உரிமையை தங்களது இராணுவ வலிமை மூலம் வென்றெடுக்க முடியும். ஆனால் சர்வதேச சமூக அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு பேச்சுகளை நடாத்த நாம் முன்வந்துள்ளோம். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை அறிக்கையானது மனிதாபிமானமற்றது. நீதியற்றது,

தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதச் செயல்களை ஜனநாயகச் செயலாக அங்கீகரித்துள்ளது அறிக்கை.

தமிழ் மக்களின் மீதான சிங்களப் பேரினவாத இனப் படுகொலைகளை நியாயப்படுத்தி அளிக்கப்பட்டுள்ள நற்சான்றுப் பத்திரம் அது.

மனிதநேயமற்ற தன் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இந்த உலகப் பரப்பில் வாழும் ஏனைய இனங்களைப் போல பாரம்பரிய வாழ்விடம் கொண்டும் கலாசார விழுமியங்கள் கொண்டும் வாழுகிற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.


www.puthinam.com
Reply


Messages In This Thread
ஐரோப்பிய தடைக்கு கடும்கண்டனம் - by வினித் - 09-30-2005, 12:03 PM
[No subject] - by msuresh - 09-30-2005, 12:07 PM
[No subject] - by selvam - 10-06-2005, 09:18 AM
[No subject] - by selvanNL - 10-23-2005, 12:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)