09-29-2005, 06:56 PM
Mathan Wrote:narathar Wrote:இப்போது தமிழ் மணம் நடுத்துபவர் காசி மற்றும் மதி கந்தசாமி என்றல்லவா தமிழ் மணத்தில் இருக்கிறது.ஈழ நாதன் முதலானோர் நட்சத்திரப் பதிவாளர்களாக இருக்கின்றனர்.எவ்வாறு தேர்வு நடக்கிறது என்று தெரியாது.மற்றது இது யாழ்க் களத்தில் தொடங்கப் பட்டது என்றால் எவ்வாறு இப்போது தனித்து இயங்குகின்றது.கை நழுவி விட்டதா?
நாரதர்,
தமிழ் வலைப்பதிவுகள் யாழ் களத்தில் தான் தொடங்கப்பட்டது என்று சொல்லவரவில்லை, வலைப்பதிவுகள் வர தமிழில் ஆரம்பித்த போது அதில் யாழ்கள உறுப்பினர்கள் சிலரும் யாழ்களமும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது என்று சொல்லலாம். கள உறுப்பினர்கள் சிலர் அதனை ஆரம்பகாலத்திலேயே உள்வாங்கி கொண்டு வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தார்காள். யாழ் தளமும் வலைப்பூ அமைப்பதற்கான வசதியை யாழ்.நெட் மூலம் அளித்தது. அது தவிர சுரதா அண்ணாவின் எழுத்துரு மாற்றிகள் உள்ளிட்ட சில செயலிகளும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு மிகபெரிய உதவியாக இருந்தது.
இந்த தமிழ் வலைப்பதிவுகள் குறித்து பேச ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ என்ற பதிவுதான் நாளடைவில் தமிழ்மணமாக உருவெடுத்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இது உருவாகுவதற்கு காசி முக்கிய பங்காற்றினார் ..... அது அவரின் சொந்த பணத்தில் இயங்குகின்றது. அந்த தமிழ்மணத்தை வழி நடத்துபவர்களாக நிர்வாக குழுவில் காசி, மதி அக்கா, செல்வராஜ், அன்பு போன்றோர் இருக்கின்றார்கள்.
யாழில்.. தமிழில்.. சுரதா அண்ணா (யாழண்ணா) தான் குடில்கள் என்று blogs ஐ வரையறுத்தவர். பின்னரே திசைகள் மாறனால் அவை வலைப்பூக்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டன..! யாழ் அண்ணாவின் யுனிக்கோட் எழுத்துரு மாற்றிகளின் வரவோடு வலைப்பூக்கள் தமிழில் விருத்தி கண்டன..! முதன் முதலில் தமிழ் வலைப்பூக்களை (குடில்களை) வரிசைப்படுத்திய பெருமையும் சுரதா அண்ணாவையே சாரும்..! அத்தோடு காசி ஆறுமுகம் ஆரம்பம் முதலே வலைப்பூக்களில் அக்கறையோடு செயற்பட்டு வந்திருக்கிறார்...! அவர் தனது இணையத்தளம் ஒன்றிலும் வலைப்பூக்கள் பற்றி எழுதி சில உதாரணங்களையும் வெளியிட்டு இருந்தார்...! அதன் பின்னரே தமிழ்மணத்தை உருவாக்கினார்...! அதற்கு முன்னர் யாழுக்கு அப்புறமா திசைகளுக்கே வலைப்பூக்களை ஊக்குவித்த பெருமை சாரும்...! குறிப்பா மாறனை இந்த இடத்தில் பாராட்ட வேண்டும்..அவரும் திசைகளினூடு வலைப்பூக்களை வரிசைப்படுத்திய முக்கியமானவர்களில் ஒருவர்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

