![]() |
|
வலைப்பூ, நுகர்வும் சில சிந்தனைகளும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: வலைப்பூ, நுகர்வும் சில சிந்தனைகளும் (/showthread.php?tid=3231) |
வலைப்பூ, நுகர்வும் சில சிந்தனைகளும் - narathar - 09-21-2005 ஒரு வருடத்திற் முன் உருப்பெற்ற தமிழ் மணத்தில் மலர்ந்த வலைப் பூக்கள் பற்றி கள உறுப்பினர்கள் என்ன நினைக்கிறீங்க.இது தகவல் இணய யுகம் தந்த புதிய இலக்கிய வடிவமா அல்லது கணணி முன் நேரத்தைச் செலவிடும் , தமக்கென ஒரு அடயாளத்தைத் தேடும் சுய புராணிகளின் புலம்பலா, ம் ம்ம் என்கின்ற வலைப் பதிவை இலங்கையில் இருந்து எழுதும் மு.மயூரன்...... தமிழ் வலைப்பதிவுகள், சிற்றிதழ் மேட்டிமையையும், வணிக இதழ் அதிகாரத்தையும் உடைத்துச் சாதித்தது இதனைத்தான். அதாவது, ஒருவரின் கருத்து, எந்த விதமான வடிகட்டலுக்கும், தேர்வுக்கும், தரப்படுத்தலுக்கும் நேரத்தாமதத்துக்கு ஆளாகாமல் பொது வாசிப்புக்கு காட்சிப்படுத்தப்படுவது. எல்லாத்தரப்பு வாசர்களுக்கு முன்னாலும், எல்லாத்தரதிலுள்ள எழுத்துக்களும் ஒரேவரிசையில் காட்சிப்படுத்தப்படும் பெரும் சனநாயக மாற்றத்தினை தமிழ்மணம் சாதித்தது. என்று கூறுகிறார்.இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதையும்,மேலும் வலைப் பதிவை இடும் ஈழவர்களையும் இத் தலைப்பில் மற்றவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் விமர்சனமாகவும் முன் வையுங்களே...... மயூரனின் முழு பதிவும் இங்கே பதியப்படுகிறது,ஆள் மற்றவை எழுதப் பின் நிக்கிற விசயங்களையும் எழுதுறார் போய் இங்க படித்துப் பாருங்க...... http://mauran.blogspot.com/2005/08/blog-post_27.html <span style='color:red'>அச்சிதழ்களின் அதிகாரம் -வலைப்பதிவுகளின் வருகை [தமிழ் மணம் தனது முதல் அகவையை கடந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் வலைப்பதிவுகளின் வருகை , அதன் வகிபாகம், காலமாற்றத்தில், தமிழ் எழுத்துப்படைப்புக்களின் வரலாற்றுப்போக்கில் எப்படி இருக்கிறது என்பது பற்றிய சில குறிப்புக்களை இப்பதிவு முன்வைக்கிறது. விரிவான ஆய்வுகளுக்கு இவை பயன்படலாம்] அதிகாரங்களுக்கெதிரான இடையறாத போராட்டமாக வரலாறு நகர்கிறது. தமிழ் கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் வரலாறும் இவ்வாறுதான். போதாமைகளும், அதிகாரங்களும் அதற்கான மாற்றுக்களும் கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் படிநிலை வளர்ச்சிப்போக்கை தீர்மானித்தன. எழுதத்தொடங்கியதும், காகிதத்தில் அச்சிடத்தொடங்கியமையும் எல்லாமே இவ்வாறான போகக்கில் தான் அறிமுகமாகின. கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் தொழிநுட்ப சாத்தியங்கள், அவ்வூடகத்தின் உள்ளடக்க வடிவத்தில் பலமான தாக்கத்தினை ஏற்படுத்தியது. நல்ல உதாரணம் எழுத்தறியாக்காலத்து செய்யுள்கள். அச்சறியாக்காலத்து காவியங்கள். அச்சோடு வந்த உரைநடை இலக்கியம். பேசாப்படங்கள் வானொலி நாடகம் கருத்து தெரிவிப்பு பல வடிவங்களையும் எட்டி விட்டதால், எழுத்து ஊடகங்கள் என்ற தனிக்கிளை பற்றியே பேசவேண்டியிருக்கிறது. குறித்த கால இடைவெளியில் வெளிவரும் அச்சு வெளியீடுகள் அறிமுகமானதோடு இதழியல் ஆரம்பிக்கிறது. தமிழில் இதழியலை ஆரம்பகாலத்தில் உள்வாங்கிக்கொண்டவர்கள் பெருந் தனவந்தர்களே. ஏனெனில் அவர்கள்தான் அச்சுச்சாதனங்களை, அந்த உற்பத்திக்கருவிகளை கொள்வனவு செய்யக்கூடியவர்களாய் இருந்தார்கள். ஆனால், அக்காலத்தில் அச்சுக்கு நூல்களை தயார்படுத்தக்கூடியவர்களாக இருந்தவர்கள், "பெரும் படிப்பாளிகளே" இந்த படிப்பாளிகள், தத்தமது கருத்துக்களை பரப்பவும், பிடித்தவற்றை அச்சேற்றவும் மிகுந்த ஆர்வத்துடன் இயங்கியமையால், அச்சுத்துறை வர்க்கச்சாயலை விடவும், படிப்பாளிகளின் கருத்தியல் சாயலை கொண்டிருந்தது. நாவலர் திருக்கோணமலை த கனகசுந்தரம்பிள்ளை வ.வே.சு ஐயர் அகிலேசபிள்ளை கிறிஸ்தவ வெளியீடுகள் பாரதியார் எழுத்தறிவும், எழுதும் பழக்கமும் மேன்மேலும் பரவலானதோடு, சாதாரண மக்களால், இந்த அச்சிதழை ஆளும் படிப்பாளிகளது அதிகாரத்தை உணர முடிந்தது. அச்சியந்திர சாலைகளின் உரிமையாளர்கள், இத்தகைய பரவலான மக்கள் கூட்டத்துக்கான வெளியீடுகளை செய்ய ஆரம்பித்தனர். படிப்பாளிகளின் அதிகாரம் இங்கே மாற்றீட்டுக்குள்ளானது. அச்சு வெளியீடுகளின் நோக்கம் இயந்திர சாலைகளின் முதலாளிகளது வர்க்கச்சாயலை பெற ஆரம்பித்தது, வெகுமக்கள் பரப்பில் எது அதிகம் விலைபோகுமோ, அதுவே அச்சியந்திரங்கள் உமிழ அனுமதிக்கப்பட்ட வெளியீடுகளாக பெரும்பாலும் இருந்தது. இந்த மாற்றம், பிரபல இதழ்களின் வருகைக்கு, பின்னர் வணிக மயபடுத்தப்பட்ட இதழ்களின் வருகைக்கு காரணமானது. இது புதிய அதிகாரத்தை வெளியீட்டுத்துறையில் ஏற்படுத்தியது. வணிக இதழ்களின் முதலாளிகள், விலைபோகாச்சரக்குகளை, விளிம்புநிலை கருத்துக்களை, தீவிரமான ஆக்கங்களை நிராகரிக்கத்தொடங்கினர். இவ்வணிக இதழ்களின் அதிகாரத்தை உடைத்துக்கொண்டு சிற்றிதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. அச்சியந்திரங்கள் பரவலானமை, அச்சுச்செலவில் ஏற்பட குறைவுகள் இதற்கு உதவியாயிற்று. மேசை வெளியீடுகளை சாத்தியப்படுத்திய கணிப்பொறியின் வருகையோடு இதழியல் அதிகமாக பரவலானது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு சிறுதொகை வாசகர்களை மட்டுமே இலக்காக கொண்டு, குறித்த கருத்துப்போக்கு தொடர்பான உரையாடல்களை மட்டுமே செய்துகொண்டு ஏராளம் சிற்றிதழ்கள் வரவாரம்பித்தன. வணிக இதழ்கள், மேம்போக்கு ரக பிரபலத்தன்மையையும், நாயக வழிபாட்டையும், மேலோட்டமான எழுத்துக்களையும் வைத்துக்கொண்டு பகட்டாய், ஒளி வெள்ளமாய் வெளிவந்து அத்தகைய மனநிலையை பலதளங்களிலும் கட்டமைக்க, இதற்கு மாற்றாய் வந்த சிற்றிதழ்கள், ஒரு வித மேட்டிமைத்தனத்தையும், இன்னொரு விதமான பிரபல வழிபாட்டையும், உருவாக்கியது. இந்த மேட்டிமைத்தனத்தின், அறிவு அதிகாரத்தின், அறிவுச்சாதி (உயர்சாதி?) ஆதிக்கத்தின் பிரபலத்தன்மை, தன்னை ஒரு trend ஆக நிலைப்படுத்தி, புதுவித குழுமவாதத்தையும், "பிரபலசிற்றிதழ்" போக்கையும் கொண்டுவந்து சேர்த்தது. சிற்றிதழ்களும், நவகாலனிய, பின் முதலாளிய அமைப்புக்களுக்கு வளைந்து கொடுத்து காலச்சுவடு போன்ற, பிரபலத்தை, வணிகத்தை மையமாகக்கொண்ட பிரபலசிற்றிதழ்களாக வடிவெடுத்தது. குழுமவாதத்தின் பயனாக (கருத்து வேறுபாடு என்ற மாயத்தோற்றத்தோடு) இவ்வாறான "பிரபல" சிற்றிதழ்கள் உடைந்து பெருகின. இவை பிரபல அறிவாளிகளது பெயர்களை, அவர்களது அந்தரங்கங்கள் பற்றிய அலசல்களை, அவர்களது குடுமிப்பிடி சண்டைகளை பெரிது படுத்தி அதுவே சீரிய இலக்கிய சூழல் என்ற மாயத்தோற்றத்தினை உண்டு பண்ணி, பணத்தையும், பிரபலத்தைய்ம் உழைத்துக்கொண்டன. மூன்றாவது மனிதன் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, இத்தகைய இதழ்களை படிப்பவர்கள் சந்தித்துக்கொண்டால், மு.பொ வுக்கும் சிவசேகரத்துக்குமான சண்டைற்றி அலசுவர். இவ்விரு எழுத்தாளருக்கு இடையான கருத்து மோதலை மூன்றாவது மனிதன் தனது பரபரப்புக்கு பயன்படுத்தியது. சீரிய எழுத்துச்சூழலில் சிற்றிதழ்கள் இத்தகைய பரபரப்பை பரப்பி, தமது "நாயகத்" தன்மையை நிலை நிறுத்திக்கொண்டன. பெயர்களை வைத்து வியபாரம் பண்ணின. இலக்கிய சந்திப்புக்களில் இத்தகைய சீரிய இலக்கிய "நாயகர்" களின் பெயரை எடுத்து விளாசுபவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். இந்நாயகர்களின் பெயர்களை மனப்பாடம்பண்ணி அதிகமதிகம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளும் ஆர்வக்கோளாறுகளை அனைவருமே அடிக்கடி சந்திப்பீர்கள். இது, காலச்சுவடு போன்ற போக்குகளின் விளைவு. இது நடப்பிலுள்ள எழுத்துலகத்தை ஆட்டிப்படைக்கும் புதிய அதிகாரம். அதிகார வர்க்கம். ஒரு பொடிச்சி என்ற வலைப்பதிவர் தனது வலைப்பதிவை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்- " <b>ஒரு Columnist (பத்தி எழுத்தாளினி) உருவாகுகிறார்! பராக்! பராக்! எல்லாவிடங்களிலும் பார்த்தால் அரசியல். இலக்கிய அரசியல். அவன் இவன், எக்ஸில் உயிர்நிழல், பின்நவீனத்துவம், செயமோகன், அ.மார்க்கஸ்சு, விடியல், அடையாளம், ரவிக்குமார், காலச்சுவடு உயிர்மை குழப்பமோ குழப்பம்! என்னதான் செய்யிறது? பதிப்பு வசதி இருக்கெண்டிறாங்கள், பதியுங்கோவன் உங்கட எழுத்தையெண்டிறாங்கள். பாவி மக்கள் ஒன்று புரிஞ்சுக்கிறாங்கள் இல்ல, அதுகளுக்கெல்லாம் ஒரு சின்னப் பெட்டை காசுக்கு எங்க போவாள்? இதுகளை எல்லாம் எவங் யோசிக்கிறாங்? 2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள.... ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாதுசிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்க ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல."</b>புதிதாய் ஏற்பட்ட இவ்வதிகாரத்தையும், அதற்கெதிரான ஆயுதத்தையும், அதிகாரத்துடனான மோதலையும், உடைப்பையும் இதவிட இயல்பாய் விளக்க முடியாது. ஆங்கிலத்தில் வலைப்பதிவுகள் தோன்றியமைக்கு பல காரணங்கள் கற்பிகப்படுகின்றன. ஆனால் தமிழில் வலைப்பதிவுகளின் (blogs) அதிவேக பரவலுக்கு இந்த அதிகார உடைப்புத்தான் காரணம். இவ்வுடைப்பினை செய்வதில் வலைத்தளங்கள்(web sites) தோற்றுப்போனது. எல்லா அதிகார உடைப்புக்களும் புதிய தொழிநுட்ப போக்கினை கையிலெடுத்துக்கொள்ளும். நீராவி எந்திரங்களை முதலாளியப்புரட்சி பயன்படுத்தியதைப்போல. இணையத்தின் பாய்ச்சலை, தளையறு மென்பொருள் புரட்சி பயன்படுத்திக்கொண்டதைப்போல. இணையத்தையும், அதன் தெரிவுச்சுதந்திரத்தையும், முடிவுறா கொள்ளளவையும், வேகத்தையும், rss feed எனப்படும் செய்தியோடை தொழிநுட்பத்தையும் தமிழ் பெற்றுக்கொண்ட யுனிகோட் குறிமுறை எனும் வரப்பிரசாதத்தையும் இந்த வலைபதிவுப்புரட்சி கையிலெடுத்துக்கொண்டது. தமிழ் மணம் போன்ற திரட்டி ஒன்றின் வருகையோடு இவ்வதிகார உடைப்பு மேலும் கூர்மையடைகின்றது. தமிழ் வலைப்பதிவுகள், சிற்றிதழ் மேட்டிமையையும், வணிக இதழ் அதிகாரத்தையும் உடைத்துச் சாதித்தது இதனைத்தான். அதாவது, ஒருவரின் கருத்து, எந்த விதமான வடிகட்டலுக்கும், தேர்வுக்கும், தரப்படுத்தலுக்கும் நேரத்தாமதத்துக்கு ஆளாகாமல் பொது வாசிப்புக்கு காட்சிப்படுத்தப்படுவது. எல்லாத்தரப்பு வாசர்களுக்கு முன்னாலும், எல்லாத்தரதிலுள்ள எழுத்துக்களும் ஒரேவரிசையில் காட்சிப்படுத்தப்படும் பெரும் சனநாயக மாற்றத்தினை தமிழ்மணம் சாதித்தது. இதழ்களது, இதழாசிரியர்களது தேர்வுகள் இல்லை. பிரபல பெயர்களின் ஆதிக்கம் குறைவு. தலைப்புக்களும், உள்ளடக்கமுமே நாம் ஒரு ஆக்கத்தை படிக்கச்சொடுக்குவதற்கு காரணமாயிற்று. ஒவ்வொரு ஆளுமையும், ஒவ்வொரு தனிமனித தேடலும் ரசனையும், எல்லாத்தரப்பு கருத்துக்களும், இன்னொரு மனித இடையீடு இன்றி வாசகருக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இது எல்லாவிதமான மேட்டிமைத்தனங்களையும் குழுவாதங்களையும் உடைக்கிறது. எழுத்தின் தரம், என்ற மாயத்தோற்றம் உடைந்து தகவலும், செய்திகளின் உடனடித்தன்மையும், முக்கியத்துவம் பெறுகிறது. எழுத்தின் தரம், தேடலின் செறிவு தெரிவுக்கான ஒரு கூறாக மாத்திரமே மாறிப்போகிறது. முகுந்த் fire fox இன் அண்மைய தமிழ் படுத்தலைப்பற்றி எழுதினால், அங்கே எனக்கு தகவல்களே தேவை. இன்னொருவருக்கு தேவைப்படாமல் போகலாம். ஆனால் முகுந்த்து நான் ஒரு வாசகன் அதிகமாக கிடைத்துள்ளேன். மைக்ரோசொப்டின் மிகப்பிந்திய நேர்மையீன நகர்வைப்பற்றிய வெங்கட்டின் பதிவை நான் ஆவலோடு காத்திருப்பேன். சுந்தர ராமசாமிக்கு அது தேவையற்றதாக இருக்கலாம். குர் ஆனின் ஒரு சுலோகத்துக்கு இப்படி ஒரு அர்த்தப்படுத்தலும் இருக்கிறதா என்று ஆர்வத்தோடு நான் நல்லடியாரைப்படிப்பேன். ஆனால் மானுஷ்யபுத்திரன் எனும் அப்துல் ஹமீது தனது உயிர்மை எனு பிரபல இதழில் அதை போடமாட்டார். அவர் அதை கடந்துவிட்டிருப்பார். நான் எதை வாசிக்கவேண்டும் எனும் அதிகாரத்தை கையிலெடுத்துவிட்டிருப்பார். ஷ்ரேயா அக்கா எழுதும் வாழ்வின் அன்றாட சம்பவங்களை ஆசையாய் படிக்கும் வாய்ப்பு காலச்சுவட்டில் எனக்கு கிட்டப்போவதில்லை. சிற்றிதழ்கள், பல்வேறு போதாமைகளை கொண்டிருக்கிறது. அச்சுச்செலவு. மட்டுப்பாடான பக்க எண்ணிக்கை போன்றன தாண்ட முடியாத சிக்கல்க்ளாகிப்போகின்றன. குறித்த வடிவ எழுத்துக்களே, குறித்த கருத்து நிலைகள் சார் எழுத்துக்களே மறுபடி மறுபடி வருகின்றன. வடிவ உடைப்பு என்பது அங்கே குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுவதுபோலத்தான். ("கவிதையில்" உடைப்பு, "சிறுகதையில்" புதுமை தான் நடக்கிறது) (G)கூகிள் ட்டோக் பற்றி நான் எழுதி அனுப்பினால், இலங்கையில் தயாராகும் லினக்ஸ் வழங்கல் பற்றி அறிமுகக்கட்டுரை அனுப்பினால் எந்த சிற்றிதழும் அதை மினக்கட்டு அச்சடிக்க வேண்டும் என்ற அவசியமிலை. ஆனால் அந்த தகவல்கள் தேவைப்படும் வாசகர்கள் இருக்கின்றனர். எல்லோருடைய எல்லா எழுத்துக்களும் எல்லோருக்கும் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இடையில் நின்று தடுக்கவும் தேர்வுசெய்யவும் ஆளில்லை. ஒருசெக்கன் நேரம் கூட பிந்துவதற்கு வாய்ப்பில்லை.( சரீங்க ஒரு மணித்தியாலம்...! இப்பசரியா?) ஆக்கத்தின் அளவுபற்றி கணக்கில்லை. வழங்கப்பட்ட தொடுப்புக்களூடாக மேலும் விரிகிறது தேடல் பல்லூடக வழங்குகை, தெரிவிப்பு சாத்தியங்களை அதிகரிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வாசகர்களின் உடனடியான துலங்கல் பின்னூட்டமாய், நேரப்பிந்துகை ஏதுமற்று எழுத்தாளரை வந்தடைகிறது. கெட்ட வார்த்தையாகக்கூட. வாசகர் எழுத்தாளரை தனிப்பட உடனடியாக தொடர்புகொள்கிறார். எழுத்தாளர் வாசகரோடு இணையத்தில் மடலாடுகிறார். அணுக முடியா எழுத்தாள "நாயகர்" கள் மறைந்துபோய், வாசக- படைப்பாளி உறவு மேலும் நெருக்கமாகிறது. எழுத்தாளரின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு வாசக ஊடாட்டம் அதிகரிக்கிறது. இது இன்னுமொரு உடைப்பு. வரலாற்றுப்போக்கில் இடைமாறுகட்டம் தெளிவாய் தெரிகிறது. வேகம் குறைந்ததாய், பழைய அதிகாரமாய் இதழ்கள் பின்னுக்குப்போகின்றன. அதிவேக தொழிநுட்பத்தோடு எழுத்துக்கள் கைகோர்த்து தளைகளை அறுக்கின்றன. கூடவே, புதுத்தளையறுப்பு, வலைப்பதிவுத்தலைமுறை, தனது அதிகாரங்களை தன்னோடு உருவாக்கி, வளர்க்கிறது. தனது உடைவுக்காக. அடுத பதிவில்...</span> Re: வலைப் பூ, நுகர்வும் சில சிந்தனைகளும்....... - vasisutha - 09-21-2005 narathar Wrote:ஒரு வருடத்திற் முன் உருப்பெற்ற தமிழ் மணத்தில் மலர்ந்த வலைப் பூக்கள் பற்றி கள உறுப்பினர்கள் என்ன நினைக்கிறீங்க... தமிழ் மணம் என்றும் இணையத்தளம் உள்ளதா? அதன் இணைய முகவரி தரமுடியுமா? Re: வலைப் பூ, நுகர்வும் சில சிந்தனைகளும்....... - narathar - 09-21-2005 vasisutha Wrote:narathar Wrote:ஒரு வருடத்திற் முன் உருப்பெற்ற தமிழ் மணத்தில் மலர்ந்த வலைப் பூக்கள் பற்றி கள உறுப்பினர்கள் என்ன நினைக்கிறீங்க... http://www.thamizmanam.com/tamilblogs/archive.php - narathar - 09-21-2005 'வலைப்பூக்கள்' என்று கவித்துவமாக அழைக்கப்படும் வலைப்பதிவுகள்(Weblogs, in short 'Blogs') இன்று தமிழில் புதிய எழுத்து முயற்சிகளுக்கு அடிகோலி வருகின்றன. பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்களோடு, எழுத்தாளர்கள் என்று அடையாளம் காணப்படாத பலரும் இணையம் அளித்த கொடையால் தங்கள் படைப்புகளை, சிந்தனைகளை, பல்துறை அனுபவங்களை, இன்னும் எதையெல்லாம் தங்கள் சக தமிழருடன் பகிர்ந்துகொள்ள ஆசைப் படுகின்றனரோ அவற்றையெல்லாம் வலைப்பதிவுகளாகப் பதிப்பித்து வருகிறார்கள். நூல்கள், மாத/வார/நாள் இதழ்களோடு இன்னுமொரு வாசிப்பு அனுபவத்தை இந்த வலைப்பதிவுகள் இணையத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கின்றன. இந்தத் தளம், இந்த வலைப்பதிவுகளை எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும். உங்கள் வருகைக்கு நன்றி. -தமிழ்மணம்.காம் http://www.thamizmanam.com/tamilblogs/index.php - vasisutha - 09-21-2005 நன்றி நாரதர் - sinnakuddy - 09-21-2005 http://tamilblogs.blogspot.com/ - kuruvikal - 09-23-2005 தமிழ் வலைப்பூக்களின் கூகிள் வரிசைப்படுத்தல்... (2004) http://valaippoo.yarl.net/archives/navan/p...age_rank_1.html (இதில் உங்கள் வலைப்பூவின் நிலை அறிய.. குறித்த பக்கத்திற்கு சென்று... ctrl + F கீ களை ஒரே நேரம் அழுத்தி...fண்டில் உங்கள் வலைப்பூ பெயரை இட்டுப் பார்க்கலாம்..!) - narathar - 09-23-2005 என்னக் கவர்ந்த இன்னொரு வலைப்பதிவாளர்,'பெட்டை' தூள் கிளப்பிறா,இவ எழுதுறத இங்க போட்டா ,இராவணன் இல்லாட்டி யாழினின்ட கத்திதான் வரும் இங்க போய் படியுங்க http://peddai.blogspot.com/2004/10/blog-post_18.html <span style='font-size:25pt;line-height:100%'>காத்திருப்புக்களும் கனடாப் பெட்டையளும் </span> ஒரு சில பந்திகள் கீழே, <b>ஆனா? சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தான் என்னவோ எண்டிற மாதிரி ஏன் எங்கள வம்புக் கிழுக்கோணும்? இந்த ஈரோப் முழுக்கிலும் தம்பட்டம் அடிச்ச வச்சிருக்கிறாங்கள் எங்களப் பற்றி (அதுதான் கனடாப் பெட்டையளப்பற்றி). முந்தியொருக்கா எனக்கு மின்னஞ்சல்ல ஒண்டு வந்தது லண்டன்ல புலிகளத் தடை செய்ததப்பற்றி. “கனடாப் பெட்டையள் -புலிகள் தடை தொடர்பாக” (Canada Girls' Opinion on Tigers' Ban” எண்டொரு அறிவார்ந்த தலைப்போட. ரொம்ப கௌரதையா இருந்திச்சு, கொஞ்சம் பெருமையா இருந்திச்சு. அதோட, கொஞ்சம் அசந்துபோய் என்னடா சொல்லுறாளுகள் எண்டு போய்ப் பாத்தா அங்க புல்லில மூண்டு பெட்டையள் குந்தியண்டு இருக்கினம். அவையளுக்குமேல வட்டம்போட்டு அந்த வட்டத்துக்குள் அவையள் கதைக்கிற மாதிரி வசனம் போட்டிருக்கு. ஒருத்தி சொல்றா ‘என்னடி பசுமதி அரிசியை (<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo-->பான் பண்ணிப்போட்டங்களாம்” எண்டு. எப்பிடி? இதென்ன நக்கல்! (சிரிப்பு வந்ததுதான்). பெடியள் சிலபேர் ரைம் செலவளிச்சி இப்பிடி எங்கள பரிசுகேடாக்கோணுமா? பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லையெண்டிறத எவ்வளவு அழகா சொல்லுறாங்கள்? அதிலும் சமையலோட முடிச்சுப் போட்டாங்கள் பாருங்க அதுதான் ஆகிலும் ehhhhhh (நற! நற!) ! இப்படியெல்லாம் ஒரு பின்புலத்தில ஒரு மாதிரி வாழ்க்கை போகேக்க (அது தா...னாப் போகும்), என்ர தூரத்து சொந்த அண்ணாப் புள்ளையார் ஒருத்தர் ஈரோப்பில எங்கையோ ஒரு நாட்டில இருந்து என்னோட கதைக்கிறார். அவருக்கு பிடிச்ச சிநேகா, அவருக்க பிடிச்ச மும்தாசு, ... கூடவே “கனடாவில பெட்டையள் அவ்வளவு செரியில்லையாம் என?”. என்னட்டயே அபிப்பிராயம் வேற கேட்டா எனக்குள்ள இருக்கிற பெட்டைக்கு எப்பிடி இருக்கும்? அவள் பாட்டுக்கு நாசமே எண்டு பறையாமக் கிடக்கிறாள். அவளிட்டப்போய் இப்பிடி ஒரு கேள்வி கேட்டா...? பெடியங்கள் மட்டும் திறமோ எண்டு சுதி ஏறிச்சு அவளுக்கு. அவர் அதுக்குத்தான் “எங்கட தங்கச்சியாக்களப் பற்றித் தெரியும்தானே, ஆனா” எண்டார். இதுக்குப் பேர்தான் பிரிச்சு வைச்சு கதை எடுக்கிறதெண்டிறது. நான் நல்லமெண்டா எனக்கு வாறப் புளுகில அடுத்தவளவையப் பற்றி சொல்லுவன் எண்டு! இந்த தந்திரத்தையெல்லாம் ஒரு புத்திசீவியா உருவாகிக்கொண்டு வாற (தெரியும்தானே) ஒரு பெட்டையிட்ட விட்டா எப்பிடி? “ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல இங்க ஒரு பெட்டையளும் ஒருத்தரையும் துவக்கால சுடையில்ல” எண்டன். அதுக்குப்பிறகு அண்ணை ஒண்டும் பறையேல்ல. இப்பிடி ஆளாளுக்கு வருவாங்கள். கனடாப் பெட்டையளைப்பற்றி ஒரு “மாதியான” அபிப்பிராயம் (நீங்கள் ஏதும் கேள்விப்பட்டனிங்களா?)- கனடாப் பெட்டையள் பாலியல் தொழில் செய்யினம் (2000 ஆம் ஆண்டு ஒரு பெரிய பிரச்சினை வந்ததென்னெண்டா ரொறன்ரோவில இருக்கிற ஒரு துவேசப் பத்திரிகை ஒண்டு தமிழீழ.விடுதலைப்.புலிகள் காசு சேக்கிறது தமிழ் பெட்டையள தொழிலுக்கு அமத்தித்தான் எண்டு எழுதிப்போட்டுது. பெட்டையும் பஸ் பிடிச்சு எதிர்ப்புச் கோசம் போடப் போனவதான், ஆனா போய் முடியிறக்கிடல கூட்டம் முடிஞ்சுது (உண்மையா)); கனடாப் பெட்டையள் நீலப் படம் நடிச்சிருக்கினம் (சோபாசக்தியின்ர பகுத்தறிவு பெற்ற நாள் சிறுகதையில பொடிப்பிள்ளையார் ஒராள் போய் கேப்பர், அண்ணை கனடாப் பெட்டையள் நடிச்ச படம் ஏதும் வந்திருக்கோ எண்டு); கனடாப் பெட்டையள் கனபேரோட சுத்திறாளவை. அட! அட! அட! ஒவ்வொரு ஒவ்வொரு நாடுகள்ள இருந்து வாற தொலைஅழைப்புகளுக்குள்ளாலதான் எனக்கு இதெல்லாம் தெரிய வந்ததே (அதென்னமோ சமூக நலன்களத் தவிர வம்பெண்டிற சாமனே பெட்டைக்குப் பிடிக்கிற இல்ல). -மொத்தத்தில அண்ணைமாற்ற பிரச்சினை எங்கையிருந்தாலும் தங்கட இனப் பெண்ணோட கற்புப் பற்றித்தான். அவையள் தங்கட விருப்பத்துக்கு ஒரு பக்கம் மும்தாசுவையும் தங்கட பொண்டாட்டி சிநேகமா மாரி எண்டும் ஒரு போமிலா வச்சிருப்பினம். ஆனா தங்கட பெண்களோட கற்பப்பற்றி ஒரு பக்கத்தில நடக்கும் ஆராய்ச்சி. இதெல்லாம் பெட்டைக்கு ரென்சன்தாற விசயம் (இப்ப வந்து எனக்கு கார்ட் கொஞ்சம் வீக்). உண்மையா ஒரு பெட்டை அல்லது ஒரு பெடியன் அல்லது யாரோ அவையன்ர சொந்த வாழ்க்கையை வாழ்றதில (அல்லது வாழாம இருக்கிறதில) யாருக்கு என்ன வந்தது? ஒரு மகாகவிஞன் அவன் தோண்டாட்டி என்ன, தோண்டினா என்ன? ஜே.ஜே.க்கு ஒரு விமர்சகன் வந்து விமர்சிச்சாப் பிறகு என்ன நடக்கும்? கனடாவில பெட்டையள் எப்பிடி இருந்தா உங்களுக்கு என்ன? (கேட்டாளே ஒரு கேள்வி! போட்டாளே ஒரு போடு!)</b> - nallavan - 09-23-2005 தமிழ்மணம் என்றொரு வலைப்பக்கத் திரட்டி இருப்பது வசிசுதாவுக்குத் தெரியவில்லையென்பது ஆச்சரியம்தான். கடந்த ஒருவருடமாக தமிழ்மணத்திரட்டியில் அங்கத்துவமாயிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து படியெடுத்துப்போட்டே யாழ்க்களத்தில் பல பதிவுகள் வந்தது. இந்த நிலையில் யாராவது தமிழ்மணம் பற்றிக் கதைத்ததுண்டா? இல்லையென்பது வேதனையான விசயம்தான். ஒருவேளை தமிழ்மணத்தைச் சரியாக அறிமுகப்படுத்தி யாழ்க்கள வாசகர்கள் அங்கே நிறைய வாசித்திருந்தால் இங்கே நடக்கும் மதவடி அரட்டைகள் குறைந்து நல்ல ஆரோக்கியமான விவாதங்கள் நடந்திருக்கக்கூடும். வாசகர்களுக்கும் பரந்துபட்டுச் சிந்திக்கும் ஆற்றல் வந்திருக்கக்கூடும். இவ்வளவுக்கும் இங்கிருக்கும் சிலர் தொடர்ச்சியாக வலைப்பதிந்தவர்கள்தாம். அவர்களின் வலைப்பக்கங்களும் தமிழ்மணத்திரட்டியில் உள்ளது. - kuruvikal - 09-23-2005 nallavan Wrote:தமிழ்மணம் என்றொரு வலைப்பக்கத் திரட்டி இருப்பது வசிசுதாவுக்குத் தெரியவில்லையென்பது ஆச்சரியம்தான். ஏன் வலைப்பூக்களில மதவடி அரட்டை நடக்கவே இல்லை என்றியளா...இல்ல அது வலைப்பூ அரட்டை என்றியளா..??! பின்னூட்டல்களை வாசிங்கோ தெரியும்...அரட்டையா...அசிங்கமா திறம் என்று...! எல்லாத்திலும் எல்லாம் இருக்கத்தான் செய்யும்...! எதுவும் 100% சுத்தம் என்றில்ல...! குறை என்று பார்த்தா எங்கும் பார்க்கலாம்..குறைக்குள்ளும் நிறைவைப் பார்க்கப் பழகனும்...நாங்கள் தான்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 09-23-2005 சில வலைப் பதிவுகளில் யாழ்க் களமும் ,அங்கத்தவர்களும் பேசு பொருளாகவும் வந்துள்ளனர்.சில பதிவுகளில் யாழ் உறுப்பினர்கள் பின்னூட்டம் இட்டும் உள்ளனர். நான் கூட இவற்றைத் தற்செயலாகத் தான் கண்ணுற்றேன்,இங்கே நெடு நாளாக எழுதுவோரோ ,வலைப் பதிவுடும் உறுப்பினர்களோ இவற்றைப் பற்றி எதுவும் இங்கே ஏன் எழுதவில்லை என்பது புதிராகவே இருந்தது,இவர்கள் இரு வேறு உலகங்களில் உள்ளனரா என்றும் எண்ணத் தோன்றியது.இதில் வசி தமிழ் மணத்தைப் பற்றி தெரியாமல் இருந்தது ஆச்சரியம் இல்லை.இன்னும் வலைப் பதிவுகளில் மும் முரமாக இருக்கும் உறுப்பினர் எவரும் இங்கே இத் தலைப்பிற்குள் கருத்து எதுவும் எழுதவில்லை ,சில வேளை யாழ்க் களத்தில் எழுதுவது அவர்களுக்கு எதாவது பிரச்சனையோ தெரியாது? - KULAKADDAN - 09-23-2005 நாரதர் நீங்கள் யாரை குற்றம் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் யாழ் களத்துக்கு எவ்வளவு காலம் பழையவர்/ எவ்வளவு காலம் புதியவர் என்பது எனக்கு தெரியாது. கீழே உள்ள இரண்டு இணைப்புக்கள் உங்களுக்கு இங்கு வலைப்பதிவுகள், தமிழ் மணம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டதை சான்று பகரும். இதைவிட கவிதைபகுதியிலும் எங்கோ ஓரிடத்தில் தமிழ் மணம் பற்றியும் அதன் இணைப்பும் உள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=225 http://www.yarl.com/forum/viewtopic.php?t=2427 வசி மிக பழைய உறுப்பினர். அவர் மேற்சொன்ன தலைப்புக்களை பார்க்கவில்லையா என்பது எனக்கு தெரியாது? நான் வலைப்பதிவில் இடும் அனைத்தையும் இங்கும் பிரதியிடுவேன் அது படமாகிலும் சரி, வேறு ஆக்கங்கள் ஆகினும் சரி அதேபோன்றே குருவிகள், தமிழினி அக்கா, கவிதன், ஆகியோரும் செய்கிறனர். சண்முகி அக்காவின் வலைப்பதிவில் உள்ள ஆக்கங்கள் இங்குள்ள பலராலும் களத்தில் அடிக்கடி அறிமுகப்படுத்தபடுகிறன. அதை நீங்கள் எனது வலைப்பதிவையும் என்னால் ஆரம்பிக்கப்பட்ட தலைப்புக்களையும் பார்த்துபுரிந்துகொள்ளலாம். இவையெல்லாம் உங்களுக்கு தெரியாது போனது துரதிஷ்டமே - KULAKADDAN - 09-23-2005 Quote:பதிவை இடும் ஈழவர்களையும் இத் தலைப்பில் மற்றவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் விமர்சனமாகவும் முன் வையுங்களே.... http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=225 .. - narathar - 09-23-2005 நன்றி குளம் தகவல்களுக்கு , வசிக்கே தெரியாட்டி புதிய உறுப்பினரான எங்களுக்கு எப்படித் தெரியும்,அத்தோடு நீங்கள் எல்லாரும் எங்க போட்டியள் .இப்படி ஒரு தலைப்பு முன்னமும் இருக்குது எண்டு உங்கள மாதிரி மூத்த உறுப்பினர்கள் சொன்னாத்தானே தெரியும். - vasisutha - 09-23-2005 என்ன என்னுடைய தலை உருள்ற மாதிரி இருக்கிறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->யாழில் சிலர் போடும் வலைப்பதிவுகளின் முகவரிகளை பார்த்து சில வலைப்பூக்கள் படிப்பது உண்டு.. ஆனால் தமிழ்மணம் என்று ஒரு தளம் இருப்பது தெரியாது.. அதைத்தான் கேட்டேன்.. :roll: :roll: - KULAKADDAN - 09-24-2005 narathar Wrote:,என்ன கேக்க விருப்புறியள் நாரதர்? - sinnakuddy - 09-24-2005 KULAKADDAN Wrote:மன்னர் மந்திரி இளவரசி பட்டத்து ராணி குடும்பாமாய் வேற சொந்தஙகள் கொண்டவையை காணலெண்ட மாதிரி சிறியவை பெரியவை குளம் போன்ற மற்ற பழைய ஆக்களை களத்திலை காணக்கிடைக்கவில்லை போலை...அதாலை நாரதர் எங்கை போட்டியளெண்டு கேக்கிறாராக்கும்.... <!--emo&narathar Wrote:,என்ன கேக்க விருப்புறியள் நாரதர்? --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 09-24-2005 அப்படி என்ன தான் புதுசா இருக்கு :roll: கட்டுப்பாடு தணிக்கையிருக்கது. விமர்சனம் விவாவதம் கருத்தாடல் இருக்காது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 09-25-2005 sinnakuddy Wrote:KULAKADDAN Wrote:மன்னர் மந்திரி இளவரசி பட்டத்து ராணி குடும்பாமாய் வேற சொந்தஙகள் கொண்டவையை காணலெண்ட மாதிரி சிறியவை பெரியவை குளம் போன்ற மற்ற பழைய ஆக்களை களத்திலை காணக்கிடைக்கவில்லை போலை...அதாலை நாரதர் எங்கை போட்டியளெண்டு கேக்கிறாராக்கும்.... <!--emo&narathar Wrote:,என்ன கேக்க விருப்புறியள் நாரதர்? அதேதான் சின்னக் குட்டி :wink: - narathar - 09-25-2005 kurukaalapoovan Wrote:அப்படி என்ன தான் புதுசா இருக்கு :roll: கட்டுப்பாடு தணிக்கையிருக்கது. விமர்சனம் விவாவதம் கருத்தாடல் இருக்காது. <!--emo& கட்டுப் பாடு தணிக்கை இல்லைத்தான்,ஆனால் விமரிசனம்,கருத்தாடல் பின்னூட்டங்களினூடக ஒரளவு இருக்குது,அதை கட்டுப்படுத்துவது வலைப் பூவை நிறுவியவர். |