09-29-2005, 06:46 PM
நாரதர்,
நீங்கள் குறிப்பிட்ட நட்சத்திர பதிவாளர் குறித்து சொல்லாமல் விட்டுவிட்டேன். இந்த வலைப்பதிவுகளுக்கான தளம் வலைப்பூ என்ற பெயரில் புளொக்கரிலும் பின்னர் யாழ்நெட்டிலும் இயங்கிய போது அதில் தமிழில் வலைப்பதிபவர்கள் வாரம் ஒரு முறை ஆசிரியராக இருந்து சிறப்பித்தார்கள். காசி, மதி, சந்திரவதனா அக்கா உள்ளிட்ட சிலர் தமிழில் வலைப்பதிபவர்களில் ஒருவரை வாராவாரம் வலைப்பூ ஆசிரியராக இருக்கும்படி கேட்டுகொள்வார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் வலைப்பூ தளத்திற்கான பாஸ்வேட்டை நடத்துனர்களிடம் இருந்து பெற்றுகொண்டு அந்த தளத்தில் ஒரு வாரம் எழுதுவார்கள், அந்த ஒருவாரத்தில் மற்றய வலைப்பூக்கள் அவற்றின் குறைநிறைகள் தவிர வேறுபலவிடயங்களும் அந்த வார ஆசிரியரின் கோணத்தில் அலசப்படும். அதற்கு பின்பு அடுத்ததாக இன்னொருவர் வருவார். அப்போதெல்லாம் புனைபெயரில் அல்லாமல் தமது பெயரில் வலைபதிபவர்களே வலைப்பூ ஆசிரியராக இருந்திருக்க வேண்டும்.
தற்போது தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவாளராக தமிழில் வலைபதியும் யாரும் இருக்கலாம், புனைபெயரில் இருக்க கூடாது என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. தமிழ்மண நட்சத்திர பதிவாளரை காசி, மீனாக்ஸ், பத்ரி, சந்திரவதனா அக்கா, மதி அக்கா கொண்ட குழு தேர்ந்தெடுக்கின்றது. அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் தன்னுடைய வலைப்பதிவிலேயே கருத்துக்களை எழுதலாம், அவை தமிழ்மணம் வலைப்பதில் நட்சத்திரபதிவு தலைப்பின் கீழ் இணைக்கப்படும். முன்பு போல் நேரடியாக தாய்தளத்திலேயே எழுதுவது இல்லை.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>