09-29-2005, 06:19 PM
narathar Wrote:இப்போது தமிழ் மணம் நடுத்துபவர் காசி மற்றும் மதி கந்தசாமி என்றல்லவா தமிழ் மணத்தில் இருக்கிறது.ஈழ நாதன் முதலானோர் நட்சத்திரப் பதிவாளர்களாக இருக்கின்றனர்.எவ்வாறு தேர்வு நடக்கிறது என்று தெரியாது.மற்றது இது யாழ்க் களத்தில் தொடங்கப் பட்டது என்றால் எவ்வாறு இப்போது தனித்து இயங்குகின்றது.கை நழுவி விட்டதா?
நாரதர்,
தமிழ் வலைப்பதிவுகள் யாழ் களத்தில் தான் தொடங்கப்பட்டது என்று சொல்லவரவில்லை, வலைப்பதிவுகள் வர தமிழில் ஆரம்பித்த போது அதில் யாழ்கள உறுப்பினர்கள் சிலரும் யாழ்களமும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது என்று சொல்லலாம். கள உறுப்பினர்கள் சிலர் அதனை ஆரம்பகாலத்திலேயே உள்வாங்கி கொண்டு வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தார்காள். யாழ் தளமும் வலைப்பூ அமைப்பதற்கான வசதியை யாழ்.நெட் மூலம் அளித்தது. அது தவிர சுரதா அண்ணாவின் எழுத்துரு மாற்றிகள் உள்ளிட்ட சில செயலிகளும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு மிகபெரிய உதவியாக இருந்தது.
இந்த தமிழ் வலைப்பதிவுகள் குறித்து பேச ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ என்ற பதிவுதான் நாளடைவில் தமிழ்மணமாக உருவெடுத்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இது உருவாகுவதற்கு காசி முக்கிய பங்காற்றினார் ..... அது அவரின் சொந்த பணத்தில் இயங்குகின்றது. அந்த தமிழ்மணத்தை வழி நடத்துபவர்களாக நிர்வாக குழுவில் காசி, மதி அக்கா, செல்வராஜ், அன்பு போன்றோர் இருக்கின்றார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

