11-12-2003, 11:14 PM
உயிரியின் வாழ்வில் மரணம் நிச்சயம்...மனிதனுக்கும் அது பொருந்தும்...நாம் வாழ்வது ஏதோ ஒன்றை சாதிப்பதற்காக என்றால் அது எமக்காக மட்டுமே...அதன் பின் எங்கள் மரணம் என்பது தேடுவாரற்றது.....போராளிகள் அப்படியானவர்கள் அல்ல....அவர்கள் வாழ்வதே மரணத்துக்காக இலட்சியத்துக்காக...அத்தகைய எண்ணம் கிடைப்பதே அரிது....வசதி வாய்ப்பைக் கண்டு மயங்கும் உள்ளங்களிடத்து மரணத்தின் நிச்சயம் தெளிவு பெற வாய்ப்பில்லை....மரணத்துக்குள் இலட்சியம் வகுத்து வாழ்பவனே இலட்சியவான்.....கடவுள் மகன் இயேசுவாகட்டும் இராமர் ஆகட்டும் கிருஷ்ணர்,கர்ணன் நபியாகட்டும் எல்லோரும் மரணத்தின் நேரமறிந்தே வாழ்ந்தனர்...இலட்சியம் அடைந்தனர்...ஆனால் சாதாரண மனித மிருகங்கள் ஆகிய நாங்கள் ஆணவத்தால் அதீத ஆசையால் மரணம் மறந்து சிரஞ்சீவியாக வாழும் எண்ணத்தில்...இறுதியில் மூப்போடு போராடி......வேதனை...அதிலும் சாதனைக்காய் போராடி போராளியாய்...மற்றவனின் விடிவுக்காய்...சுதந்திரத்துக்காய்....மரணித்தல் சாதாரணத்தைவிட பலமடங்கு மேல்...அதனால் தான் பண்டைத்தமிழன் போர்க்களத்தில் உயிர் நீத்த வீரர்களுக்காய் போர்ப்பரணி பாடி நினைவுக்கல் செதுக்கி வைத்தான்...ஆனால் இன்றைய தமிழன்...உள்ளதையும் தன் சிறுபுத்திக்கெட்டிய வகையில் தகர்க்க நிற்கிறான்.....!
எவராகினும் தாம் வகுத்த இலட்சியத்துக்காய் மரணிப்பவன் மாவீரனே......!
எவராகினும் தாம் வகுத்த இலட்சியத்துக்காய் மரணிப்பவன் மாவீரனே......!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

