09-29-2005, 09:34 AM
kurukaalapoovan Wrote:செல்வன் என்ன அப்படி நன்றி சொல்லி திருத்துறீங்கள் உங்களுக்கு என்ன நடந்தது?
äட் யார் உங்களில பிழை பிடிக்க எண்டு அவர் விட்ட பிழைகள் எண்டு பந்தி பந்தியா எழுதி அதோடை ஒப்பிடேக்கை உதெல்லாம் சின்விசயம் எண்டு ஒரு பிடிபிடிக்க வேணும்.
2 நாளில என்னத்தில ஆரம்பிச்சதென்றே இல்லாமல் எங்கையோ கொண்டுபோய் விடவேணும். அதிலதான் உங்கடை கெட்டித்தனம் இருக்கு.
ஜநா, மனிதஉரிமை, புலிகள், வன்னி, பாரதியர், நாவலர், குஸ்பு எண்டு எல்லாரை இழுத்துப்போட்டு கொஞ்சப்படங்களையும் இணைச்சு நடத்தவேணும் காரசாரமா கருத்தாடல்.
என்ன குறுக்ஸ் இன்னும் கனக்க பினாத்தல்களை விட்டுட்டியள் ......பப்பில தண்ணியடிக்கிறது,சீர்திருத்தம் எண்டு சீரழிக்கிறது,பெண்ணியம் பேசி விபச்சாரம் செய்யிறது,
சரி விசயத்திற்கு வருவம்.
இங்கே அண்மையில் இந்திய அரசாங்கம் யுரோப்பியன் யுனீயனோட செய்துகொண்ட மிகப்பெரிய அயர்பஸ் ஏற்றுமதி ஒப்பந்தமும்,அதை கை யெழுத்திட பிளயர் சென்றதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.சர்வதேச அரசியல் நியாயத்தின் படி நடத்தப் படுவதில்லை அது நலன் சார்ந்ததாகவே நடத்தப் படுகிறது.இன்றய நிலவரத்தின்படி நாங்கள் எவ்வளவு தான் கூக்குரலிட்டாலும் சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்வல்லவை சந்தை,வர்த்தகம் சார்ந்த நலங்கள்,சர்வதேச வர்த்தகப் பாதைகள், இவற்றைப் பாதுகாக்கும் இராணுவ வல்லாதிக்கம்,அதனை நிலை நிறுத்தும் கேந்திர தளங்கள்.
சுற்றிச் சுற்றி இறுதியில் நாம் வந்தடைவது திருகோணமலைத் துறை முகத்தையும்,பலாலி விமானத் தளத்தையும் தான்.இவை தானே சர்வதேச அரசியலின் துருப்புச் சீட்டுக்கள்.

