09-28-2005, 09:20 PM
Mathan Wrote:படங்களுக்கு நன்றி நாரதர்.
இப்படி சேதமாகி இருக்கே .... ஓடுபாதையும் சேதமாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஓடு பாதை சேதமாகவில்லை,விமானம் ஓடு பாதையில் இருந்து விலகவும் இல்லை.விசாரணைகள் நடை பெறுகின்றன விரைவில் காரணம் தெரியும்,முடிவு தெரிந்ததும் இணைக்கிறேன்.இதைப் போல் பல சம்பவங்கள் நடந்திருக்கு,விமானப் பயனங்கள் இப்போது சர்வசாதாரணம் ஆகிவிட்ட படியால் ,விமானம் பறப்பது எவ்வளவு சிக்கலான தொழினுட்பத்தால் என்பதுவோ,பொறிமுறைகளில் பிழைகள் வரலாம் என்பதுவோ ஆச்சரிடப்படக் கூடிய விடயம் ஆகி விட்டது.மேலும் விமானத்தில் உள்ள பொறிமுறைகள் ஒன்று பிழைத்தால் இன்னொன்று என்கின்ற அடிப்படையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால்,விபத்துக்கள் நடைபெறாமையால் இவை வெளியில் தெரிவதில்லை.அதற்காக விமானப் பயனம் அபாயகரமானது என்றில்லை,வீதி விபத்துக்களிலும்,இரெயில் விபத்துக்களிலும் அதிகமானோர் இறக்கின்றனர்.விமான விபத்துக்கள் செய்தியாவதால் ,மற்றவை தெரிவதில்லை.ஒவ்வொரு பிழை வரும் தருணமும் ஆராயப்பட்டு ,பிழை வந்தற்கான காரணங்கள் அறியப் பட்டு,அவை நிவர்த்தி செய்யப் படுகின்றன.இதனாலேயே விமானப் பயணம் ஆனது தொடர்ந்தும் பாதுகாப்பானதாக இருக்கிறது.

