11-12-2003, 05:57 PM
<img src='http://www.yarl.com/forum/files/nala.ajeevan.jpg' border='0' alt='user posted image'>
படம்..அஜீவனின் கமராவண்ணம்...!
கருமை கொள்
விற்புருவம்
இன்று
கரும் பென்சில் தீட்டிய
கருமுக்கோணமாகியது...!
உடல் கொள் செங்குருதி
தன்னிலை செப்பி நின்ற செவ்விதழ்
இன்று
சாயத்தால் பிரதியீடாகி
உடற் பலவீனம் காட்டுது...!
கார் மேகமாய்
பூச்சூடிப் புகழ் பெற்ற கூந்தல்
இன்று
இராசாயனத்தின் தேக்கிடமாகி
கத்தரியின் வித்தையிலே
பேய்க் கோலம் காட்டுது....!
ம்ம்ம்...
பெண்ணென்றால் தனியழகு - என்று
கவிகள் பல படித்ததுண்டு
இன்று
பெண் தன் தனியழகிழந்து
துணையழகு பெற்றதேன்...!
உண்மையில்
பெண் அழகுதானா.....?!
அன்றில் கம்பர் முதல்
வைரமுத்து வரை
முழுப் பித்தர்தானோ.....!
புரியாத புதிராச்சே...!
இன்று
எங்குதான் நேர்மையும்
இயற்கையும் தம் அழகு காட்டுது
அது அந்தக்காலம்
நம்ம பாட்டி காலம்
பாட்டி...பாட்டி...பாட்டி!
ஆனால்
கமரா மட்டும்
உண்மை சொல்லுது....!
படம்..அஜீவனின் கமராவண்ணம்...!
கருமை கொள்
விற்புருவம்
இன்று
கரும் பென்சில் தீட்டிய
கருமுக்கோணமாகியது...!
உடல் கொள் செங்குருதி
தன்னிலை செப்பி நின்ற செவ்விதழ்
இன்று
சாயத்தால் பிரதியீடாகி
உடற் பலவீனம் காட்டுது...!
கார் மேகமாய்
பூச்சூடிப் புகழ் பெற்ற கூந்தல்
இன்று
இராசாயனத்தின் தேக்கிடமாகி
கத்தரியின் வித்தையிலே
பேய்க் கோலம் காட்டுது....!
ம்ம்ம்...
பெண்ணென்றால் தனியழகு - என்று
கவிகள் பல படித்ததுண்டு
இன்று
பெண் தன் தனியழகிழந்து
துணையழகு பெற்றதேன்...!
உண்மையில்
பெண் அழகுதானா.....?!
அன்றில் கம்பர் முதல்
வைரமுத்து வரை
முழுப் பித்தர்தானோ.....!
புரியாத புதிராச்சே...!
இன்று
எங்குதான் நேர்மையும்
இயற்கையும் தம் அழகு காட்டுது
அது அந்தக்காலம்
நம்ம பாட்டி காலம்
பாட்டி...பாட்டி...பாட்டி!
ஆனால்
கமரா மட்டும்
உண்மை சொல்லுது....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

