09-28-2005, 05:04 PM
narathar Wrote:சில வலைப் பதிவுகளில் யாழ்க் களமும் ,அங்கத்தவர்களும் பேசு பொருளாகவும் வந்துள்ளனர்.சில பதிவுகளில் யாழ் உறுப்பினர்கள் பின்னூட்டம் இட்டும் உள்ளனர். நான் கூட இவற்றைத் தற்செயலாகத் தான் கண்ணுற்றேன்,இங்கே நெடு நாளாக எழுதுவோரோ ,வலைப் பதிவுடும் உறுப்பினர்களோ இவற்றைப் பற்றி எதுவும் இங்கே ஏன் எழுதவில்லை என்பது புதிராகவே இருந்தது,இவர்கள் இரு வேறு உலகங்களில் உள்ளனரா என்றும் எண்ணத் தோன்றியது.இதில் வசி தமிழ் மணத்தைப் பற்றி தெரியாமல் இருந்தது ஆச்சரியம் இல்லை.இன்னும் வலைப் பதிவுகளில் மும் முரமாக இருக்கும் உறுப்பினர் எவரும் இங்கே இத் தலைப்பிற்குள் கருத்து எதுவும் எழுதவில்லை ,சில வேளை யாழ்க் களத்தில் எழுதுவது அவர்களுக்கு எதாவது பிரச்சனையோ தெரியாது?
நாரதர்,
வலைப்பூவை அதன் ஆரம்பகாலங்களிலேயே உள்வாங்கிய பல யாழ்கள உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன் தமிழில் வலைப்பூ பிரபல்யம் அடைய தொடங்கிய போது மோகன் அண்ணாவும் www.yarl.net எனும் தளத்தின் மூலம் வலைப்பூ அமைக்க கூடிய வசதியை வழங்கினார். அப்போது ஆரம்பமான பெரும்பாலான வலைப்பூக்கள் புளொக்கர் அல்லது யாழ் நெட் மூலம் அமைக்கப்பட்டவை. இப்படி தமிழில் அமைக்கப்பட்ட வலைப்பூக்கள் அல்லது குடில்களை அறிமுகம் செய்வதற்காகவே யாழ் களத்தில் இணையம் பிரிவில் சுரதா அண்ணாவினால் குடில்கள் என்ற தலைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
குடில்கள் http://www.yarl.com/forum/viewtopic.php?t=160
அப்போதெல்லாம் தமிழ்மணம் என்று ஒரு தளம் இருக்கவில்லை, இந்த தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஒரு தாய்தளமாக <b>வலைப்பதிவுகளுக்கான வலைப்பதிவு</b> என்ற பெயரில் ஒரு தாய்தளம் http://www.valaippoo.blogspot.com/ என்ற முகவரியில் இயங்கி வந்தது, அது பின்னர் மூவபிள் டைப் வசதிக்காக http://valaippoo.yarl.net என்ற முகவரிக்கு மாற்றப்பட்டது. இந்த வலைப்பதிவுகளுக்கான தாய்தளத்தில் வாரம் ஒருவர் ஆசிரியராக இருந்து மற்ற வலைப்பதிவுகளை அறிமுகம் செய்ததுடன் அவற்றின் குறை நிறைகள் உட்பட வேறுபல விடயங்களையும் பேசினார்கள். இந்த தாய்தளத்தின் முதல் ஆசிரியராக இருந்து சிறப்பித்தவர் மூத்த யாழ் கள உறுப்பினர் சந்திரவதனா அக்கா என்று நினைக்கின்றேன். அதற்கு பின்பு ஈழவன் என்ற பெயரில் களத்தில் இப்போதும் எழுதும் நண்பர் ஈழநாதன் கூட ஆசிரியராக இருந்திருக்கின்றார். இந்த தாய்தளம் தான் இப்போது வளர்ந்து தமிழ்மணம் இணைய தளமாக உருவெடுத்திருக்கின்றது. அண்மையில் கூட தமிழ்மணத்தில் ஈழநாதன் மீண்டும் ஆசிரியராக இருந்தார் என்று நினைக்கின்றேன்.
இந்த வலைப்பூக்கள் மற்றும் தமிழ்மணம் குறித்து பலதடவைகள் பல இடங்களில் பேசப்பட்டிருக்கின்றது. வலைப்பதிவுகளில் இருந்து எத்தனையோ பதிவுகள் யாழில் இணைக்கப்பட்டிருக்கின்றன. சந்திரவதனா. ஈழநாதன், சயந்தன், கறுப்பி, முத்து, வெங்கட், சுந்தர் உட்பட பலரின் பல பதிவுகளை நான் களத்தில் இணைத்திருக்கின்றேன்.
நம்முடைய நண்பர் திரிஷா புகழ் <b>சயந்தன் சாரல்</b> என்ற பெயரில் வலைபதிகின்றார், அதில் இருந்து அவரின் யாழ் சென்று வந்த அனுபவங்களை களத்தில் இணைத்திருந்தேன்.
சாரல் http://sayanthan.blogspot.com/
அரசியல் மட்டுமன்றி வேறுபல விடயங்களும் பேசும் <b>ஈழநாதனின் பதிவுகள்</b> .......
அகவிதைகள் http://www.kavithai.yarl.net/
படிப்பகம் http://padippakam.blogspot.com/
படைப்பு http://padaippu.blogspot.com/
ஈழத்து இலக்கியங்களின் வரலாற்றுப் பதிவு http://www.eelanatham.yarl.net/
சலனச்சுருள் http://www.salanasurul.blogspot.com/
இதுதவிர சந்திரவதனா, குருவிகள், குளக்காட்டான், தமிழினி, நளாயினி, ஹரி, சியாம் உட்பட இன்னும் பல பதிவுகள் இருக்கின்றன.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

