11-12-2003, 02:38 PM
ஒரு திரைக் கலைஞனாவதற்கு பல் வேறு தரப்பட்ட தொழில் நுட்ப வல்லுனர்களின் பேட்டிகளை வாசிப்பது,அவாகளது கண்ணோட்டத்தில் ஒரு திரைப்படத்தை பார்ப்பது ஆகியவை ஒரு கலைஞன் வளர்வதற்கு மிக அத்தியாவசியமானது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மாவின் பேட்டி பலருக்கு நிச்சயம் உதவும்.
AJeevan
[b]<span style='font-size:25pt;line-height:100%'>''ஒளியை நான் காதலிக்கிறேன்!''</span>
<span style='font-size:21pt;line-height:100%'>ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேட்டி</span>
<img src='http://www.vikatan.com/av/2003/nov/16112003/p40a.jpg' border='0' alt='user posted image'>
'' 'இருள் என்பது மிகக் குறைந்த ஒளி' என்று சொன்ன பாரதியாரின் கண்கள்தான் தமிழின் மிகச் சிறந்த காமிரா'' என்கிற ரவிவர்மன், இளைய தலைமுறை காமிராமேன்களில் கவனத்துக்குரியவர். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என்று பறந்து பறந்து பணிபுரிகிறார். தனது காமிராவுக்காக உலக விருது பெற்ற முதல் ஆசியர் இவர்தான்...
''முதன் முதலாக ஆசியா கண்டத்திலிருந்து ஒரு காமிராமேன் வாங்கின உலக விருது உங்களோடது. எப்படி சாத்தியம் ஆச்சு?''
'' 'சாந்தம்' படத்துக்காகத்தான் 23-வது EME DES third continent உலக விருது கிடைச்சது. அடிப்படையில் அந்தப் படத்தோட கதை எனக்குப் பிடிச்சிருந்தது. இரண்டு நண்பர்கள். பக்கத்துப் பக்கத்து வீடு. இவனோட சாப்பாட்டை அவன் சாப்பிடுவான். அவனோடதை இவன் சாப்பிடுவான். இவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு அரசியல்வாதியால பிரச்னை வந்து பெரிய சண்டையா மாறுது. இந்த அடிப்படைக் கதைக்கும் எனக்கும் பெரிய ஒற்றுமை உண்டு. என் அப்பா ஒரு அரசியல் கட்சியில் இருந்தார். அவர் தேர்தல்ல நின்னா யாரும் எதிர்த்து நிக்கமாட்டாங்க.. ஆனா சிலர் சதி பண்ணி அப்பாவுக்கு எதிரா அவரோட நண்பரையே நிக்க வெச்சாங்க... பிரச்னை வந்து சண்டை ஒரு கொலை வரைக்கும் போச்சு. இந்த நிகழ்ச்சிக்கும் 'சாந்தம்' படத்துக்கும் பெரிய ஒற்றுமை... அந்தப் படத்தை ஷ$ட் பண்ணும்போது, ஏதோ என்னோட வாழ்க்கையையே நான் திரும்பப் பார்ப்பதுபோல இருந்தது...
படம் எடுக்கும்போதே 'ரவி... டெல்லிக்கு டிக்கெட் எடுக்கலாமா?'ன்னு.. யூனிட்ல எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க... விருது கிடைக்கும்னு அசாத்திய நம்பிக்கை. ஆனா படத்துக்கு ஸ்டேட் அவார்டு கிடைக்கலை. சென்ட்ரல் அவார்டு கிடைக்கலை. ஆனா இன்ப அதிர்ச்சியா இன்டர்நேஷனல் அவார்டே கிடைச்சது... நியூஸ் கேள்விப்பட்டதும் ஒரு மணி நேரம் வீட்டுக்குள்ளே தன்னந்தனியா டான்ஸ் ஆடினேன். என்னோட ஆன்மா நிறைஞ்ச நிமிஷம் அது..''
''ஒரு காமிரா மேனாக அடிப் படையில் உங்கள் காதல் எதன் மீது?''
''நிச்சயமாக காமிரா மீது இல்லை. அது வெறும் இயந்திரம் அவ்வளவுதான். என்னுடைய காதல் எல்லாம் 'ஒளி' மீது தான். வெளிச்சம்தான் இந்த உலகத்தின் மிகப்பெரிய அற்புதம். அதிகாலை விடிய லின்போது வருகிற வெயிலைப் பாருங்க... என்ன ஒரு பிரமாதமான மூட் அது. காலை வெயிலும் மாலை வெயிலும் ஒரே மாதிரிதான். ஆனால் அவை இரண்டுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்? இந்த உலகத்தில் எல்லாவற்றுக்குமே ஒளிதான் உயிர்... நான் ஒளியை தீவிரமாகக் காதலிக்கிறேன்.''
''நீங்க பிரமிச்ச காமிராமேன் யார்?''
''பி.சி. ஸ்ரீராம்... அவர் இந்த ரூம்ல இப்படித்தான் லைட் போடுவாருன்னு நினைச்சா அப்படி படத்தில இருக்காது. மரபுகளை உடைப்பதே அவர் ஸ்டைல். ஒரு ஷாட்ல வெவ்வேறு இடத்தில இருந்து வெளிச்சம் நதி மாதிரி உருகி வழியும். அப்புறம் இன்டலிஜென்ட் திங்க்கிங்... 'அலைபாயுதே' படத்தில ஒரு ஸீன்... மாதவனும், ஷாலினியும் ரிஜிஸ்தர் ஆபீஸ்ல திருட்டுக் கல்யாணம் செஞ்சுக்குவாங்க... கையெழுத்துப் போடறபோது அந்த ஷாட்டை பி.சி. சார் இருட்டுல சில்-அவுட்ல காமிப்பார். கல்யாணம்னா வெளிச்சம் வெள்ளமா பாயும்தானே? ஆனா பி.சி. சார் அதை இருட்டுல காமிப்பார். ஏன்னா அது திருட்டுக் கல்யாணம்...''
''இதுவரைக்கும் எத்தனை படங்கள் முடிச்சிருக்கீங்க?''
''பன்னிரண்டு படங்கள். ஒரு மலையாளப் படம். மூணு இந்தி, ஒரு ஆங்கிலம், ஒரு தமிழ். 'ஃபைவ் ஸ்டார்'தான் தமிழ்ல செஞ்சது. என்னோட மலையாளப் படங்களைப் பார்த்துட்டு மணிரத்னம்தான் தமிழ்ல வாய்ப்பு கொடுத்தார். நான் வொர்க் பண்ண டைரக்டர்கள் எல்லாம் நல்ல டைரக்டர்ஸ். ப்ரியதர்ஷன், ராஜீவ்குமார், ஜெயராஜ், ஷாஜி கைலாஷ், இந்தியில ஜாவேத் அக்தரோட மனைவி ஹனி ராணி... இப்ப ரேவதியோட இந்திப் படம் செஞ்சுட்டிருக்கேன்...
அமிதாப்பச்சன் 'செட்'டுக்கு வரும்போதெல்லாம் நான் பெரும்பாலும் 'க்ரேனில்' இருப்பேன். 'என்னைவிட உயரமா நீ' என்று கிண்டல் பண்ணுவார். தோள் மீது கை போட்டு ஒரு நண்பன் மாதிரி பழகுவார். முதல்நாள் ஷாட் முடிந்ததும், காத்திருந்து அடுத்த நாள் எப்படிப்பட்ட காட்சியமைப்பு என்று வீட்டுப் பாடம் கேட்கிற மாணவன் மாதிரி கேட்டுக்குவார். பெரிய ஹீரோ, மாபெரும் நடிகர்ங்கிற பந்தாவெல்லாம் அவர் தலைக்குள்ளே உட்காரலை..''
''ஒரு காமிராமேன் பங்குக்கு இங்கே சரியா கவனிப்பு இருக்கா?''
''ஒரு படம் முதல் ஷாட்ல இருந்து, 'பேக் அப்' சொல்ற கடைசி ஷாட் வரைக்கும் அந்தப் படத்தோட காமிராமேன்தான் ஹீரோ. பேக் அப் சொன்ன அடுத்த நிமிஷத்தில இருந்து காமிராமேன் ஜீரோ. இதுதான் இப்போதைய நிலைமை.''
- நா. கதிர்வேலன்
--------------------------------------------------------------------------------------------------------
http://www.yarl.com/cgi-bin/frame/smartfra...dhavikatan.com/
நன்றி:விகடன்