09-27-2005, 09:29 PM
விரக தாபம்
காதலும் கனலாய் என்னையே சுடும்
ஈதென்ன மாயமோ!
நாதர் மா தெனையே சோதித்தாரோ
நஞ்சமோஇவ் வஞ்சி வாழ்வு? ஐய்யோ!
நலியுதே என் அகமிகுதியு மலருடலே
நனிமெலிதல் அநீதி இதுவலவோ?
வனிதை யாளினெதிர் அழகுதுரை விரைவில்
வருவரோ அலது வருகிலரோ
வாரிச விகசித முக தரி சனமுற
வசமதோ கலவி புரிவது நிசமோ
மதுரமான அமுதமு
மலரினொடுமது கனியிரச மதிவிரச மடைவதென்ன!
தென்ற லென்றபுலி சீறல் தாளேன்
சீத நிலவே தீ தாய் விளைந்திடுதே!
வேன்றி யணைந்திடும் அவர்புயம் அணைந்தே
மேவி ஆவி எய்தல் எந்த நாள்?
காதலும் கனலாய் என்னையே சுடும்
ஈதென்ன மாயமோ!
நாதர் மா தெனையே சோதித்தாரோ
நஞ்சமோஇவ் வஞ்சி வாழ்வு? ஐய்யோ!
நலியுதே என் அகமிகுதியு மலருடலே
நனிமெலிதல் அநீதி இதுவலவோ?
வனிதை யாளினெதிர் அழகுதுரை விரைவில்
வருவரோ அலது வருகிலரோ
வாரிச விகசித முக தரி சனமுற
வசமதோ கலவி புரிவது நிசமோ
மதுரமான அமுதமு
மலரினொடுமது கனியிரச மதிவிரச மடைவதென்ன!
தென்ற லென்றபுலி சீறல் தாளேன்
சீத நிலவே தீ தாய் விளைந்திடுதே!
வேன்றி யணைந்திடும் அவர்புயம் அணைந்தே
மேவி ஆவி எய்தல் எந்த நாள்?

