Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்று தான் கோட்டையில் புலிக்கொடி ஏறுமோ
#1
கோட்டை அதிர்ந்தது! கோட்டை அழிந்தது!
கொடிவர் பாசறை எரிந்தது
வாட்டிய துன்பம் வடிந்தது: வரிப்புலி பூட்டுக்கள் உடைத்தது
வேங்கைகள் பாய்ந்தன : வீழ்ந்தது கோட்டை
வியப்புடன் எழுந்தனர் மக்கள்
தாங்கிய கொடியினைத் தளபதி ஏற்றினான்
தமிழரின் தலைகள் நிமிர்ந்தன

என்று தான் கோட்டையில் புலிக்கொடி ஏறுமோ
என்றவன் நினைவு நாளன்று
வென்றனர் புலிகள் : வியத்தகு வீரம்
விளைத்தனர் விடுதலைப் புலிகள்
வன்னியும் மன்னார் திருமலை மட்டு
நகரதும் வென்றிடும் தமிழா!
அந்நியர் ஓடி அகலுவர் : வீதியில்
ஆடடா பாடடா தமிழா!

புதுவை இரத்தினதுரை
Reply


Messages In This Thread
என்று தான் கோட்டையில் புலிக்கொடி ஏறுமோ - by mayooran - 09-26-2005, 12:50 PM
[No subject] - by ப்ரியசகி - 09-26-2005, 02:42 PM
[No subject] - by RaMa - 09-26-2005, 04:00 PM
[No subject] - by அனிதா - 09-26-2005, 04:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)