09-26-2005, 03:02 AM
preethi Wrote:நான் கூறியதெல்லாம் யாழ்ப்பாணத்து சைவத்தைப் பற்றி, காஷ்மீர சைவம் போல, கன்னடரின் வீரசைவம் போல யாழ்ப்பாணத்துச் சித்தாந்த சைவமும், தனக்கேயுரித்த சில சிறப்பான விடயங்களைக் கொண்டுள்ளது. கணபதியை வணங்கும் காணபத்தியமும், சக்தியை வணங்கும் சாக்தமும், முருகனை வணங்கும் கெளமாரமும் சேர்ந்த ஒரு கலவை தான் யாழ்ப்பாணத்துச் சைவம்.
ஆறுமுக நாவலர் சைவமும், தமிழும் ஈழத்துச் சிவபூமியின் இருகண்கள் என்ற சொன்ன வாயாலேயே யாழ்ப்பாணத்துக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் என்றும் சொன்னார்.
பிள்ளையார், லக்ஸ்மி, சரஸ்வதி வழிபாடு, ஈழத்தின் சைவ சித்தாந்த பாரம்பரியத்துக்கு ஒப்பானதே என சுத்த ஈழத்துச் சைவனாகிய ஆறுமுக நாவலரே ஒப்புக்கொள்கிறார். அவரே தன்னுடைய சைவப் பிரகாச வித்தியா சாலையில் நவராத்திரி விழாவை நடத்தியுமிருக்கிறார்.
தமிழன் என்று சொன்ன பிராமணனை காட்டு என்றீர். பாரதியை காட்டினேன்.
நான் பாரதியை பிராமணனாக பார்க்கவில்லை என்று பிதற்றினீர்.
தமிழர் சைவர் என்றீர். ஈழத்து தமிழர் இந்து கடவுள்களான சரஸ்வதியையும் லக்ஷ்மியையும் வழிபடுகிறார்களே என்றால் உடனேயே எங்கள் யாழ்ப்பாண சைவத்தில் நாங்கள் எல்லாப் பரதேசி கடவுள்களையும் கும்பிடுவோம் என்கிறீர்.
துணைக்கு வேறு ஆறுமுகநாவலரையும் இழுக்கிறீர். ஆறுமுகநாவலர் லக்ஷ்மியை கும்பிட்டிருந்தால் அவர் இந்து. அவர் தன்னை சைவர் என்று சொன்னதன் அர்த்தம் சைவமும் இந்து சமயத்துள் அடக்கம் என்பதனாலாக இருக்கலாம். அவர் பிள்ளையாரை வழிபட்டிருந்தால் அவர் கணபதியரும் கூட. யாழ்ப்பாண சைவம் கலவை என்கிறீர். <b>அந்த கலவைக்கு பெயர் தான் இந்து மதம். </b>
போதாதற்கு வந்தேறு சமயமான இந்து சமயம் (பிராமணரால் கொண்டுவரப்பட்டது) தமிழோடு ஒன்றிக்கலந்தது. மற்ற சமயத்தவரெல்லாம் சிங்களவருக்கு துணைபோகும் துரோகிகள் போன்றவர்கள் என்கிறீர்.
preethi Wrote:அன்னியர்கள் தமிழர்களைப் பாரபட்சமாக நடத்திய போது. எங்களுடைய பண்பாட்டுச் சின்னங்களாகிய கோயிலகளை இடித்தழித்த போது, தமிழர்களைக் கேவலமாக நடத்திய போது சலுகைகளுக்காக தங்களுடைய சமயம் மாறி அன்று அன்னியர்களுக்கு பந்தம் பிடித்தவர்களுக்கும் , இன்று சலுகைகளுக்காக சிங்கள அடிவருடிகளாக இருக்கும் தமிழர்களுக்குமிடையில் பெரிய வேறுபாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
உங்களுக்கு கள்ளிறக்கவும், குப்பை அள்ளவும், மலம் கழுவவும் தான் மூன்றில் ஒரு பங்கு ஈழத்தமிழர் தேவை. ஆறுமுகநாவலர் தான் கட்டிய பள்ளிக்கூடங்களுக்கு இவர்களை விடமாட்டார். கிறிஸ்தவன் பள்ளிக்கூடத்துக்கும் விட்டு, அரசாங்க வேலையும் கொடுத்தான். உங்களுக்கு கைகட்டி, வாய் பொத்தி, மலம் கழுவி, குப்பை அள்ளா விட்டால், துரோகிகள்! இது தான் ஆறுமுகநாவலரின் முதலாம் சைவவினாவிடை உங்களுக்கு சொல்லிக் கொடுத்த சைவ சித்தாந்த மரபு!.
தமிழில் கிறிஸ்தவன் இயற்றிய காவியமான தேம்பாவணியையும் உமறுப்புலவரின் சீறாப்புராணமும் காவியங்களாக (கதைகள்) போற்றப்படுகின்றன. நீர், ஏதோ நீர் தான் பெரிய பண்டிதர் போல, இவை ஒன்றும் தமிழை மேம்படுத்தவில்லை. தமிழர் மதம் மாறிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் காவியம் எல்லாம் தமிழாகாது என்று பிதற்றுகிறீர். புத்தகாவியம் மணிமேகலை, தமிழின் ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. எந்த சைவ, இந்து காவியமும் இந்த சிறப்பு பெறவில்லை. சிவபுராணமோ, பெரிய புராணமோ இந்த சிறப்பை பெறவில்லை. ஆகவே தமிழும், சைவமும் சிறப்பான உறவை கொண்டிருப்பதாக சொல்பவர்கள் சமய சாதி வெறி தடித்த ஆறுமுகநாவலரின் வாரிசுகளே அன்றி மற்றவர்கள் அல்ல.
<b>
மொன்றியலில் (இரண்டாவது பெரிய ஈழத்தமிழர் தொகையை கொண்ட கனேடிய நகரம்) வாழ்ந்தாலும் தமிழரோடு சேர்வதில்லை வடஇந்தியரோடு தான் சேர்ந்து வாழ்கிறேன் என்கிறீர்.</b>
<b> ஈழ பிராமணரை சாதி சொல்லி பிரிக்கப்பார்த்தீர்.
இப்போது சமயத்தை காட்டி ஈழத்தமிழரை பிரிக்கப்பார்க்கிறீர்.</b>
<b>
என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம் நீர் இந்திய புலனாய்வு பிரிவுக்கு (றோ) தெரிந்தோ தெரியாமலோ வேலை செய்கிறீர் என்பதாகும்.. மற்றவர்கள் கவனிக்க.</b>

