Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுடுகின்ற புதைமணல்கள் தொடர் - இந்திரஜித்
#27
<span style='font-size:25pt;line-height:100%'>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 4</span>

"நினைத்து பார்க்கிறேன் நெஞ்சம் இனிக்கிறது சிரித்து பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கிறது"

"சாமியின் அப்பா போனபின்பு எல்லா விடயத்திலும் ரமணனின் உதவி தேவைபட்டது. சாமி குடும்பத்துக்கும் ரமணன் குடும்பமும் முழுமனதுடன் சொன்னார்கள். அவர்களுக்கு உதவி பண்ணும் படி. அடிக்கடி மதுவை பார்க்க வைத்தியசாலைக்கு போவான் தகப்பன் இல்லாத குறை தெரியாமல் பார்க்கவேணும் என்று போவான்.."

"ஒரு நாள் அவன் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த போது.ஒரு நண்பன் பீடிகையுடன் ஆரம்பித்தான் ..

"டேய் ரமணா ஊரில் ஒருகதை அடிபடுகிறது ...

" என்னடா சொல்லு"

ம்ம்.. நீ சாமியின் தங்கையை காதலிக்கிறாய் என்று கதைக்கினம் ..என்று வெடி ஒன்றை கொழுத்தினான் ..அதை மற்றவனும் ஆமோதித்தான்.. நீ அடிக்கடி மதுவை வைதியாசாலை போய் சந்திப்பதாக கதைக்கினம் என்று சொன்னான் ..அதிர்ந்து விட்டான் ரமணன். என்ன இது புதிய பூதம் என்று யோசித்தபடி இருந்தான்.

ஒரு கிழமையால் வந்த அப்பா சொன்னார் தம்பி சவூதிக்கு போக ஒரு விசா இருக்கு போகவிரும்புறிங்களா என்று.... அவனும் சம்மதித்து விட்டான் ..

அதற்கிடையில் அவன் ஊரில் கோவில் திருவிழா ..அவன் கோவிலில் பிரதட்டை செய்வது வழக்கம்.. இந்தமுறை அவன் பிரதட்டை செய்யும் போது... தேரில் அன்று மது அவன் பின்னால் அடி அளித்தா எல்லோருக்கும் மெல்ல அவல் கிடைத்து விட்டது ..
ஆனால், அவள் அடி அளிப்பது புரியாத அவனோ.. உள்வீதி வெளிவீதி எல்லாம் பிரதட்டை முடிந்து.. எழும் போது தான் பார்த்தான் மதுவை ..வேர்த்து நீள்கூந்தலுடன் மண்ணின் அழுக்குடனும் சாறி யுடன் முதல் தடவையாக பார்க்கிறான் ..அந்த அழகும் முகத்தில் தெரியும் ஒரு ஆனந்தமும் அவனை என்னவோ செய்கிறது ..பரிதாபமாக பார்க்கிறான் ..

" நான் வெளி நாடு போவது அவவுக்கு தெரியாக்கூடாது கடவுளே என்று கும்பிட்டான் ..ஆனால் கடவுளின் முடிவோ வேறு அப்போதான் கோவிலுக்கு வந்த ரமணனின் அக்கா அவன் வெளி நாடு போவதை போட்டு உடைத்து விட்டா ..
அவள்முகம் மாறி விட்டது.. பக்கத்தில் வந்து சொன்னா இன்று எனகு இரவு வேலை என்னை இரவு கூட்டி கொண்டு போய் மாலாவீட்டில் விடுங்கோ என்று சொல்லிவிட்டு விறு விறு என்று போய்விட்டா...

மது வீட்டில் போய் விரதம் முடித்துவிட்டு.. மாலையில் மதுவையும் அழைத்துகொண்டு சைக்கிளில் போனான் அப்போ மது விம்மி அழுதபடி வந்தாள்..என்னவென்று கேட்கவில்லை அவன்.. மாலா வீட்டுக்கு வந்ததும் அழுகின்ற மதுவை பார்த்து என்ன விடையம் என்று கேட்டாள் மாலா...

" ம்ம் என்னை விட்டு போகபோறார் இவர் என்று.. ஓவென்று மாலாவை கட்டிபிடிது அழுதாள் மது"
அந்த பேதை மது ..ரமணனின் மனதும் புரியாமல் அவன் மௌனமும் புரியாமல் இருந்தாள்...

அப்போ தான் மாலா கேட்டா "என்ன இன்று மது நீங்க லீவுதானே ? ஏன் வந்திங்க ? என்று "

"ம்ம் இவருடன் பேசவேனும் ..இல்லாவிட்டல் நான் ஏதாவது செய்து விடுவேன்.. என்று மிகப்பிடிவாதமாக சொன்னாள் மது..

சரி என்று அன்று இரவு அங்கே தங்குவதாக சம்மதித்து விட்டனர்.. அவன் இரவு சாப்பிடும் வரை மௌனமாக இருந்தான்.. சரி படுப்போம் என்றபடி மாலாவும் கணவனும் தங்கள் அறையினுள் போய்விட்டார்கள் அவர்களை தனிமையில் விட்டுவிட்டு அவன் பயந்தபடியே ஆயிற்று

"அவன் பயந்தபடியே அவர்களை தனியேவிட்டு நண்பனும் மனைவியும் சாமியறை அருகில் துயில போகும் போது,மதுவிடம் நண்பனின் மனைவி ..

"மது பார்த்து ரமணன் வெளிநாடு போகமுதல் ஆளை ஒருவழி பண்ணுங்கோ... "என்று ஜாடையாக சொல்லிவிட்டு போனா...
மதுவும் ...ம்,ம் என்று சிரித்து விட்டு ரமணனை பார்த்தாள்..

ரமணன் மனசோ அலைபாயதொடங்கியது. ஒரு பாய் மட்டும் அவர்களுக்கு வைக்கபட்டும் இருந்தது என்ன செய்வது என்று பாய் அருகில் அமர்ந்தான்.. இருங்கோ முகம் கழுவி வாரேன் என்று சொல்லி மது துவாய் எடுத்து கொண்டு கிணத்தடிக்கு போனாள்.. திரும்பி வரும் போது,நைற்றி மாற்றி மிகவும் மாறி போய் இருந்தாள் மது...

அவளை பார்த்த ரமணனுக்கு ஏதோ இண்று மிகவும் பிடித்து இருந்தது...அருகில் அமர்ந்த மதுவில் ஏதொ வாசம்,அவனை அலைகழித்தது.. மெல்ல அதுகில் மலரின் வாசனையுடம் நை&டேய் சோப்பின் வாசமும் இன்றுவரை அவன்மனதில் இருக்கிறது.

பசுமையான நினவுகளாய்,அருகில் அமர்ந்த மதுவிடம்... ரம்ணன் மது என்னப்பா இன்று அழகாய் இருக்கிறிங்க? சொல்லுங்கோ என்ற போது அவள்முகத்தில் ஒர் அமானுஸ்ய அழகும் ஒளிர்ந்தது ...மெதுவாக அவன் கரங்களை பற்றிய மது இப்படியே இருக்கவேணும் போல் இருக்கு ஆயுள் முழுக்க என்று தழுதழுத்த குரலில்,சொன்னபோது அவனாலும் தாங்கமுடியவில்லை மெதுவாக அவன் மார்பில் சாய்ந்தமதுவை அவனால் தடுக்கும் மனபலம்,இல்லாது போயிற்று.

"மது நான் திரும்பிவரும் வரைக்கு எனக்காக காத்து இருபிங்களா "என்று கேட்டான்.. ரமணனின் வாயை பொத்தியது மதுவின் வளைகரங்கள்.கண்ணின் ஓரம் நீர்த்திவலைகள் என்னுயிர் இருக்கும் வரை உங்களுக்காக என் உயிர்பறவை துடித்து கொண்டு இருக்கும் என்று தழுதழுத்தபடியே, அவன் கன்னத்தில் முத்தமிடாள் மது.. அன்று இரவு பூராவும் அந்த இரு உயிகளும் தூங்கவே இல்லை.. மது தன்னை முழுமனதுடன் ரமணனுக்கு தன்னை அர்ப்பணம் செய்ய தயாராக இருந்தும்,
ரமணன் தன் மன உறுதியுடன் சொன்னான்..

"மது, என்று உன்கழுத்தில் ஊர் அறிய மாலை சூட்டுகிறேனோ அப்போதுதான் நாம் சேரவேண்டும். அதுவரை பொறுத்து இருப்பிங்களா?"
கடவுளே என்ன இது,என்ன கேள்வி நீங்கள் பயணம் போகமுதல் என்னை உங்களிடம் தரவிரும்புகிறேன், உங்களுக்கு மனம் ஒப்புகொள்ளவில்லை.. அது உங்களின் நேர்மையை சொல்லிவிட்டது என்று.. அவன்மடியில் படுத்தபடி அவன் முகத்தையே பார்த்தபடி எத்தனையோ கதைகள் அந்த இரவு முழுக்க பேசினார்கள் அவன் புறப்படும் அந்த நாளும் வந்தது..........

யாழ்பஸ் நிலையம் கொழும்பு புறப்படும் பஸ்க்கள் அருகே ரமணன் குடும்பத்தினர் இப்படி பயணம் அனுப்ப வந்து நிற்பவர்கள் பிரிவு துயருடன் என்று நிறைய நண்பர்கள் இருக்கும் போது, மது மட்டும் தனியாக வந்தா,அவளைக் கண்ட ரமணன் வேகமாக அவள் அருகே போய் என்னப்பைங்கே வேலை இல்லையா என்று கேட்டபடியே அவள் முகத்தை பார்த்தான் இல்லை நீங்கள் பயணம் போகும் போது பக்கத்தில் இருக்கவெணும் போல் இருந்தது, லீவு எடுத்து வந்தேன்.. என்று அன்புடன் சொன்ன மதுவை பார்க்க ரமனனுக்கு ஏதொ செய்தது,

அவன் தான் பிறந்த பழகிய ஓடிவிளையாடிய எல்லாம் விட்டு குடும்பத்தாரின் வேண்டுதலுக்கும் வற்புறுத்தலுக்கும் கல்யாணம் ஆகவேண்டிய சகோதரிகளுக்காகவும்,தன்னையே நினத்தபடி வாழப்போகும் அந்த மது என்ற ஜீவனை,பிரியவேண்டிவந்துவிட்டதே என்று மனதின் அழுகுரலையும் மீறி தன்னை கட்டுபடுத்த மிகவும் கஸ்ரப்பட்டான்.எல்லோரும் பஸ்ஸினுள் அமர தொடங்கினார்கள் அப்பா வாய் பேசமுடியாத அம்மா சகோதரிகள் கூடபடிக்கும் பல்கலைகழக நண்பர்கள் எல்லோரிடமும் பிரியமனம் இல்லாமல்,பிரியாவிடை பெற்றான் கடைசியாக மதுவின் அருகே வந்தான்.

மெதுவாக "நான் போகட்டுமா?" மது என்று அவள்கண்களை பார்த்தபடியே ,மென்று முழுங்கினான் அவன் அதுவரை தன்னை கட்டுபடுத்தியபடி,இருந்த மது தான் இருக்கும் இடம்,சூழ்நிலை எல்லாமே மறந்து விட்டாள் "தன்னை மறந்தாள் தன் நாமம் மறந்தாள் ,

*அப்படியே அவனை ஆழமாக அணைத்தபடி அவன் இதழ்களில் முத்தமிட்டாள்" ஒருநிமிடம் எல்லாமே அசையாமல் போனது அதிர்ச்சியில் எல்லோருமே உறைந்து விட்டார்கள்.அவன் அப்ப தான் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை குறைக்குமாப் போல்.. சரி தம்பி பஸ்ஸினுள்ளே ஏறுங்கோ,என்று குரல் கொடுத்தார்.. ஆனால் யாழ்நகர கலாச்சாரத்தில் இப்படி பகிரங்கமாக முத்தம் வாங்கிய முதல் ஆள் ரமணன் ஆக தான் இருக்க வேண்டும்.இதுவரை யார் சொல்லியும் நம்பாத அவன் குடும்பத்தினருக்கு நிஜம் புரிந்தது...!

கண்கள் கலங்க பஸ்ஸினுள்ளே அமர்கிறான்.கண்ணாடி ஜன்னல் ஊடாக அவன் கையை பிடித்தபடி மது அவளை தடுக்கதிராணி இன்றி எல்லொருமே கலங்கிவிட்டார்கள்.அப்பா சொன்னார் தம்பி பயப்படவேண்டாம் மதுவுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று தைரியம் சொன்னார் மெதுவாக புறப்பட்டது அவன் நீண்ட நெடும் பயணம் அவன் திரும்பிவரும் போது இந்தமுகங்கள் எல்லமே இருக்குமா?

விடைதெரியாத சூனிய வெளியினுள்ளே அவனை விதி அழைத்து செல்கிறது.. அதன் வலியகரங்கள் அவன் ஆசை வைத்த எல்லாமே உன்னிடம் இல்லை என்று சொல்லி சிரிப்பது போல் பிரமை வந்தது தலையை சிலுப்பியபடி திரும்பிபார்தால் கடிதம் போடுங்கோ என்று அழுத மதுவின் குரல் தேய்ந்து மறைந்தது ..நடைபிணமாக 3 நாட்களில் சவூதி அரேபியா வந்து சேர்ந்த்தான்... !

அவன் வந்தபோது குளிர்காலம் தொடங்கிவிட்டது.. அவனுக்கு முன்பே அந்த கொம்பனிக்கு வந்து விட்ட நிறையா தொழிலார்கள் அவனுடன் வேறுயாரும் வந்தாகளா என்று பார்க்க வந்தார்கள். மிக்க அன்புடன் தம்பி யோசிக்கதீர்கள் இப்படிதான் நங்களும் மனைவி பிள்ளைகள் எல்லொரையும் பிரிந்து வந்தபோது கலங்கி தான் போனோம். என்ன செய்வது வலிகளை விட வாழ்க்கை பிரிதகிவிட்டதே எண்ரு ஆறுதல் சொன்னபடியே கடிதம் எழுதும் தாள்கள் முத்திரை சோப் என்று அத்தியாவசிய பொருட்க்களுடன் அன்பால் திணறடித்தார்கள் முன்பின் பழக்கமில்லா அந்த உறவுகள்...!

பின்பு தான் தெரிந்து கொண்டான் அது புதிதாக வருபவர்களுக்கு கவலையை மறக்கவும் ஆறுதலாகவும் ஒரு பெரியா துணையாக இருக்க அந்த நண்பர்களே பிரதி உபகாரம் பாராமல் செய்யும் செயல் என்று உண்மையான நட்பின் பரிமாணம் எங்கும் இல்லை அது பெண்களே இல்லமால் இருக்கும் நண்பர்கள் மட்டுமே இருக்கும் இடத்தில் தான் இருக்கிறது...!

வந்ததும் 3 நாட்களுக்கு வேலை இல்லை ..அவனை பார்க்க வந்தவர்கள் புதியவிலாசம் கொடுத்தார்கள். வேலைக்கு போக அக்காமா வேலை அனுமதி பத்திரம் )கிடைக்கும் வரை அவன் தான் வேலை செய்யபோகும் கொம்பனியை சுற்றிபார்த்தான்.முழுவதுமே வெளிநாட்டவர்கள் தான்.இரவு கடிதம் எழுத உட்கார்ந்தான்.முதலில் மதுவுக்க அவன் குடும்பமா கடிதம் எழுதவேண்டும் என்று யோசித்தான்.சரி அப்பாவுக்கு எழுதும் கடிதத்த்தினுள்ளே மதுவுக்கும் வைப்போம் என்று தீர்மனித்தான்.வந்து சேர்ந்தவிபரத்தை அப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் எழுதிவிட்டு மதுவுக்கும் மடல் வரைய்ய தொடங்கினான் எப்படி ஆரம்பிப்பது? 10 முறை எழுதி எதுவுமே பிடிக்கமால் கிழித்து விட்டான் இறுதியில் .

<i>"என்னுடன் கலந்துவிட்ட என் மதுவுக்கு...

உயிரைவிட்டு வெறும் உடல் கூட்டுடன் உலாவும் உன் ரமணன் எழுதுவது... நலமா? உயிரே,ஏன்டா என்னை நேசித்தாய்.சிறுவயசு முதலே நான் உன்னுடன் தானே இருந்தேன்.. அப்போதெல்லாம் நண்பனின் சகோதரி என்று ஒர் எல்லையுடன் தானே பழகினேன்.எப்போ நமக்குள்ளே இப்படி ஒரு பந்தம் வந்தது? உன் அப்ப இறந்தபோது ஆறுதலாக தான் இருக்க நினைத்தேன். என்னை நம்பிய உன் அண்ணாவை நினைத்து மனதுக்குள்ளே உன் விருப்பத்தையெல்லாம் நிறாகரித்தேன்.

அதற்காக தான் அந்த கண்ணன் என்னை கடைசி நேரத்தில் உன் அன்பு மாளிகை அரசனாக்கி இப்போ பட்டினத்தார் வாழ்க்கையை தந்துவிட்டானோ? உன்னை பார்த்தபோது அருகில் இருந்தபோது வராத உணர்வுகள்.என்னை கொல்லுதடி.அன்பே எப்போது என்மடியில் நீ சரிந்து என்முகத்தை பார்த்தபடியே பேசாமலே ஒருவரை ஒருவர் பார்த்து மௌனமாக கரையும் அந்த ஆன்மார்த்தமான அந்த வேளை இனி எப்போ?உன்ஞாபங்கள்தான் ...என் மனவானில் சிறகடித்தபடி உன் இனிய முத்தம் என்னால் மறக்கமுடியவில்லை நீங்கள் என்னை முத்தமிட்டது இப்பொ ஊர் முழுக்க தெரிந்து இருக்கும் உங்கள் அம்மா என்ன கவலைபட்டாரா? உங்கள் அண்ணாவுக்கு எப்படியும் கடிதம் எழுதுவார்கள் என்று நினைகிறேன் பயப்பட வேண்டம்..கவலையை மறக்க வேலைக்கு போங்கோ.அண்ணா நான் இருக்கும் இடத்தில் இருந்து 1280 கீமி இல் இருப்பதக அறிந்தேன்.முடிந்தால் அவரை பார்ப்பேன் அவன் எங்கள் உறவுக்கு தடையாக இருக்கமாட்டான் என்று நினைகிறேன்.. நிறையா எழுத நினைக்கிறேன் விழிகளை ஈரம் மறைக்கிறது.உயிரே,உன்நினவுகளின் பசுமையுடன் இருக்கும் என்னை தூக்கமும் தழுவ மறுக்கிறது இந்தமடல் கிடைததும் பதில் மடல் அனுப்புங்கள் வழி மேல் விழிவைத்து காத்து இருக்கும் ...

உயிருடன் கலந்து விட்ட ..
உங்கல் ரமணன்...</i>

கடிதம் எழுதி அனுப்பிவிட்டு 3 நாட்களின் பின்பு அவன் புதிய வேலை ஆரம்பமானது.அவனின் திறமையை ஓரிரு நாட்களிலேஅவதானித்த மேலதிகாரி.அவனை அழைத்து கேட்டார் .

"உனக்கு பிடித்தால் உன் சம்பளம் அதிகரித்து வேறு வேலை தரட்டுமா? என்று கேட்டார் ..வரும் போது அவன் சம்பள ஒப்பந்தம் 800 ரியால்கள்.அவர் சொன்னார் 1350ரியால்கள் சம்பளம் அத்துடன் பிரேக்டவுன் மெக்கானிக் வாகனம் என்றுபதவி உயர்வுகளுடன் சலுகைகளுடன் அவன் யோசித்துவிட்டும் சரி என்றுதலையாட்டினான் ...

அன்னலும் அவன் மனது தவித்தது... அவன் தன் தங்கும் அறைக்கு வந்த போது... அன்று வியாழக்கிழமை அடுத்தநாள் வெள்ளிக் கிழமையாதலால் விடுமுறை நிறைய நண்பர்கள் அவனை பார்க்கவந்து இருந்தார்கள்,

"அதிலேஒருவர் தம்பி உங்கள் பொஸ் துவேசம் பிடித்தவன் கவனமாக இருங்கோ, என்று சொன்னார்.

"அப்பொழுது ரமணன்சொன்னான்.

அண்னை இன்று ஒரு புதிய விடையம் நடந்தது என்று ,,அவனை பொஸ் கேட்டதும் தான் சம்மதித்துவிட்டதாகவும் சொன்னான் ..

அவனை எல்லொருமே ஆச்சரியத்துடனும் திடுகிட்டுப் போய் பார்த்தார்கள் ...வந்து ஒரு கிழமைக்குள் இப்படி ஒரு சம்பளமா என்று ஆச்சரியபட்டார்கள்.அன்றில் இருந்து அவனை யாருமே மதிப்புடனே நடத்த தொடங்கினார்கள் ..இதுவரை எந்த இலங்கை தமிழருமே அந்த கொம்பனியில் இத்னை சம்பளத்துடனும், வசதியுடனும் ,வேலை செய்யவில்லை அவர்களால் வேறு நகரத்துக்கோ அவர்கள் உறவுகளையே பார்க்க முடியாது ..போக கொம்பனி அனுமதி கொடுக்கமாட்டாது.. அருகே இருந்தாலும் கடிதங்கள் தான் தொடர்பு வழி .

ரமணனுக்கு இப்படி ஒரு வேலை கிடைத்ததும் எல்லொருக்கும் சந்தோசம் .அவர்கள் உறவுகளை அவனாவது சந்தித்து வருவான் என்று எது கேட்டலும் செய்து கொடுத்தார்கள்.. அவனும் வேலையில் மிகவும் ஈடு பட்டான் ...செய்ய தொடங்கினான் அவனுடன் வேலை செய்த பிலிப்பீன் மெக்கானிகை விட அவனிடன் திருத்கவேலை செய்த வாகன சாரதிகலிடையே மிகவும் நல்லபெயர் பெற்றான்.

<b>தொடரும்.........</b>
inthirajith
Reply


Messages In This Thread
[No subject] - by inthirajith - 09-23-2005, 02:58 PM
[No subject] - by RaMa - 09-23-2005, 07:28 PM
[No subject] - by shanmuhi - 09-23-2005, 08:09 PM
[No subject] - by Rasikai - 09-23-2005, 08:25 PM
[No subject] - by இராவணன் - 09-23-2005, 10:00 PM
[No subject] - by KULAKADDAN - 09-23-2005, 10:59 PM
[No subject] - by inthirajith - 09-24-2005, 06:07 AM
[No subject] - by sankeeth - 09-24-2005, 08:51 AM
[No subject] - by Thala - 09-24-2005, 09:04 AM
[No subject] - by sooriyamuhi - 09-24-2005, 09:14 AM
[No subject] - by Senthamarai - 09-24-2005, 09:52 AM
[No subject] - by ANUMANTHAN - 09-24-2005, 02:23 PM
[No subject] - by inthirajith - 09-24-2005, 02:36 PM
[No subject] - by inthirajith - 09-24-2005, 02:38 PM
[No subject] - by அனிதா - 09-24-2005, 03:09 PM
[No subject] - by Nitharsan - 09-24-2005, 06:38 PM
[No subject] - by கீதா - 09-24-2005, 07:10 PM
[No subject] - by inthirajith - 09-24-2005, 09:38 PM
[No subject] - by shanmuhi - 09-25-2005, 12:42 PM
[No subject] - by hari - 09-25-2005, 01:33 PM
[No subject] - by inthirajith - 09-25-2005, 03:09 PM
சுடுகின்ற புதைமணல்கள் - by inthirajith - 09-25-2005, 09:28 PM
[No subject] - by inthirajith - 11-07-2005, 12:50 AM
[No subject] - by Birundan - 11-07-2005, 01:42 AM
[No subject] - by Rasikai - 11-07-2005, 01:54 AM
[No subject] - by SUNDHAL - 11-07-2005, 02:57 AM
[No subject] - by tamilini - 11-07-2005, 10:16 PM
[No subject] - by அருவி - 11-08-2005, 12:02 AM
[No subject] - by shobana - 11-08-2005, 12:26 PM
[No subject] - by MUGATHTHAR - 11-08-2005, 01:04 PM
[No subject] - by tamilini - 11-08-2005, 02:31 PM
[No subject] - by tamilini - 11-08-2005, 02:47 PM
[No subject] - by inthirajith - 11-08-2005, 03:13 PM
[No subject] - by Mathan - 11-08-2005, 09:02 PM
[No subject] - by அனிதா - 11-09-2005, 11:53 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 12:01 AM
[No subject] - by selvanNL - 11-10-2005, 12:47 AM
[No subject] - by Rasikai - 11-10-2005, 12:47 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 12:53 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 12:56 AM
[No subject] - by Rasikai - 11-10-2005, 12:58 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 01:05 AM
[No subject] - by Rasikai - 11-10-2005, 01:07 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 01:14 AM
[No subject] - by sri - 11-10-2005, 02:28 AM
[No subject] - by RaMa - 11-10-2005, 08:08 AM
[No subject] - by kuruvikal - 11-10-2005, 08:31 AM
[No subject] - by inthirajith - 11-12-2005, 12:07 AM
[No subject] - by sri - 11-12-2005, 02:51 AM
[No subject] - by RaMa - 11-12-2005, 03:20 AM
[No subject] - by SUNDHAL - 11-12-2005, 03:42 AM
[No subject] - by Rasikai - 11-12-2005, 05:35 AM
[No subject] - by ANUMANTHAN - 11-12-2005, 10:03 AM
[No subject] - by Mathan - 11-12-2005, 01:21 PM
[No subject] - by inthirajith - 11-12-2005, 03:20 PM
[No subject] - by shobana - 11-12-2005, 06:25 PM
[No subject] - by RaMa - 11-13-2005, 02:07 AM
[No subject] - by ANUMANTHAN - 11-13-2005, 11:24 AM
[No subject] - by inthirajith - 11-13-2005, 10:48 PM
[No subject] - by KULAKADDAN - 11-13-2005, 11:08 PM
[No subject] - by inthirajith - 11-13-2005, 11:18 PM
[No subject] - by inthirajith - 11-13-2005, 11:51 PM
[No subject] - by RaMa - 11-14-2005, 04:28 AM
[No subject] - by ANUMANTHAN - 11-14-2005, 06:10 AM
[No subject] - by sri - 11-16-2005, 12:46 AM
[No subject] - by vasisutha - 11-16-2005, 12:54 AM
[No subject] - by inthirajith - 11-16-2005, 09:27 AM
[No subject] - by inthirajith - 11-16-2005, 10:05 AM
[No subject] - by inthirajith - 11-16-2005, 08:36 PM
[No subject] - by inthirajith - 11-16-2005, 08:47 PM
[No subject] - by sri - 11-17-2005, 02:17 AM
[No subject] - by SUNDHAL - 11-17-2005, 04:21 AM
[No subject] - by inthirajith - 11-17-2005, 08:59 AM
[No subject] - by Niththila - 11-17-2005, 11:32 AM
[No subject] - by Rasikai - 11-17-2005, 06:26 PM
[No subject] - by அனிதா - 11-17-2005, 10:47 PM
[No subject] - by RaMa - 11-18-2005, 06:38 AM
[No subject] - by shanmuhi - 11-21-2005, 10:21 AM
[No subject] - by MUGATHTHAR - 11-21-2005, 10:42 AM
[No subject] - by inthirajith - 11-21-2005, 11:49 PM
[No subject] - by Mathan - 11-23-2005, 05:06 PM
[No subject] - by KULAKADDAN - 11-25-2005, 08:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)