09-25-2005, 06:27 PM
kuruvikal Wrote:narathar Wrote:ம்...
வலைப்பூ அல்லது குடில் போடவேணும் எண்ட ஆசையில கன பேர் தொடங்கியிருந்தாலும்,சுயமான சிந்தனை படைப்புத்திறன் இதுகளைப் பொறுத்தே வந்து வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை தங்கி உள்ளது.அத்துடன் மதிப்பீடு செய்யும் முறையும் நல்ல வலைப் பதிவை இனங்காட்டும்.மேலும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு பதில் அழிப்பவர்களே தமது பதிவை ,சிந்தனையய் வளர்த்துக் கொண்டு மேலும் வாசகர்களை உள் வாங்குகின்றனர்.
எனது அனுபவத்தில் பல வலைப் பதிவாளர்கள் ஆளமான சிந்னை உடயவர்களாக இருக்கின்றனர்,அவ்வாறு என்னைக் கவர்ந்தவர்களின் வலைப் பதிவுகளயே நான் வாசிக்கிறேன்,சும்மா வெட்டி ஒட்டுவது அல்லது ஆங்கிலத்தில் இருக்கும் தகவல்களை மொழி மாற்றி எழுதுவது என்பவற்றை வாசிப்பது கிடயாது.ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கலாம்.
தணிக்கை அற்ற கருத்துச் சுதந்திரம்,மற்றும் எவரும் கருத்திடலாம் என்பவையே பலரை வலைப் பூக்களின் பால் நகர்த்தியுள்ளது எனலாம்.
நல்ல வளமான கருத்து..தமிழ் வலைப்பூக்களை விட ஆங்கில வலைப்பூக்களில் அதிகம்.... நிறைய நிறைய கருத்தியல் சிந்தனைகள் தமிழர்களதை விட நிறைந்து கிடக்கிறது..சுதந்திரமும் அதிகம்...! நாங்கள் அவைதான் படிக்கிறது...! ஆங்கிலம் தெரியாத ஆக்கள் தான் தமிழில எழுதிறது... தமிழ் படிக்கிறது...! மொத்தத்தில் தமிழ் வலைப்பூக்கள் வேஸ்டாகத்தான் தெரியுது..ஆங்கிலத்தோட ஒப்பிடேக்க...! ஆங்கிலந் தெரிஞ்சவ..அங்க போகலேமே..! வளமா சிந்தனைச் சிற்பிகள் ஆகிடுவியள்..!
வலைப்பூக்களைப் பார்த்தா தெரியும்...ஒரு குறிப்பிட்ட சிலரே எல்லாத்துக்கும் பதில் எழுதுகிறார்கள்...அதுமட்டுமன்றி...வலைப்பூக்களிலும் கொசிப்புக்கு குறைவில்ல..யதார்த்ததை உள்வாங்க மறுப்பவர்களுக்கு கருத்துச் சொல்லிப் பயனில்லை...ஏதோ சண்டைக்கு தொடங்கின தலைப்புப் போல இருக்கு இது...! இதுதான் யாழ் களத்தின் தலைவிதி...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவியாரே உம்முடன் கருத்தாடும் எண்ணம் எனக்கில்லை ஆனால் நீர் நான் எழுதி உள்ளதை மேற்கோள் காட்டி திரித்து எழுதி உள்ளீர்.இதுவே உமது வழமையான பாணி.
தமிழோ,ஆங்கிலமோ சுயமானா எழுத்தும்,சிந்தனையுமே வலைப் பதிவிடுதலின் நோக்கம்.அதை விடுத்து வெட்டி ஒட்டலும்,மொழி பெயர்ப்பும் அல்ல(இது விக்கிமீடியா மற்றும் ஆவணக் காப்பு இனயத்தளங்கள் செய்யும் வேலை).
விமர்சன ரீதியாக இடப்படும் தலைப்புக்கள் எல்லாம் சண்டைக்குத் தொடங்கினது என்று நினைத்து எழுதும் உம் போன்றவரால், ஆரோக்கியமான கருத்தாடல்கள் தனி நபர் பிரச்சனைகளாகத் திசை திருப்பப்படுவதே யாழ்க் களத்தின் தலை விதியாகி இருக்கிறது.இத் தலை விதியை மாற்ற தனி நபர் தூற்றல் இன்றி எழுதுவீர்கள் உங்கள் கருதுக்களை. :evil:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 