09-25-2005, 12:38 PM
<b>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 3</b>
'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னை போல் பாவை தெரியுதடி"
அந்தநிலவொளியில் அவன் கைகளை மதுவின் பக்கம் ஊன்றிவைத்தபடி பேசிக்கொண்டு இருந்தான். திடிரென்று ஏதோ ஊர்வது போல் இருந்தது திடுக்கிட்டு பார்த்தான் மதுவின் விரல்கள் கொழுகொம்பை தழுவும் கொடிபோல் அவன் விரல்களை பற்றி இருந்தன.
விரல்களை பிரிக்க நினைத்தாலும், அந்த பேதையின் ஆறுதலுக்காக அப்படியே அசையாமல் இருந்தான் அவன்.
மதுவுக்கோ 'அந்த இரவு அப்படியே அசையாமல் நீண்டு கொண்டே போனால் நல்லது'.. என்ற நினைப்பில்,
"இப்படியே பேசிக்கொண்டே இருக்கவேணும் போல் இருக்கு "
அப்போ மாலா நண்பனின் மனைவி சொன்னா
''கைகளை பிடிக்க ஒருவர் இருந்தால் காலம் முழுக்க இப்படியே பேசிகொண்டே இருக்கலாம் தான்'' என்று சிரித்தபடியே சொல்ல..
"ம்ம் உண்மை தான் "என்று மது காதல் மயக்கத்துடன் சொன்னா.
அதிகாலை 3.00 மணிவரை பேசிக்கொண்டு இருந்துவிட்டு உறங்கச் சென்றார்கள்.
'காலையில் அப்பாவின் கராஜ்க்கு போகவேணும், நிறைய வேலை இருக்கு. அப்பாவும் பாவம் தானே' என்று நினைத்தபடியே உறங்கச் சென்ற ரமணனுக்கு நித்திரையே வரவில்லை..
சிறுவயசு முதலே பாடசாலை விடுமுறையில், பாடசாலை முடிந்த நேரத்தில் எல்லாம் அப்பாவின் கராஜ்ஜில் தான் நிற்பான். அவன் சிறந்த மெக்கானிக்கும் கூட.. அதனால் அப்பா கொழும்பு போனால், அல்லது அவரால் முடியாதபோது எல்லாம் கராஜ்ஜை அவன் தான் பார்த்துக் கொள்ளுவான்.
நித்திரை வராமல் அவன் படுக்கையில் புரண்டபோது கதவை திறந்து கொண்டு வந்த மது
''என்ன நித்திரை வரவில்லையோ'' என்று கேட்டபடி பக்கதில் வந்து அமர்ந்தா..
"ம்ம்'' ஏதோ நினைப்பில் இருந்த ரமணன் சொன்னான்.
''எனக்கும் தான் நீங்கள் இருக்கும் போது ஏதோ நிம்மதியா இருக்கு சந்தோசத்தில் நித்திரையும் வரவில்லை''
அவன் அதைக் கேட்டு சிரித்து விட்டு
''எனக்கு அப்பாவை பற்றி தான் சிந்தனை நான் வெளிநாடு போனால் அவருக்கு ஒருவரும் உதவி இல்லையே என்று தான் யோசிக்கிறேன்''
இருவரும் பேசியபடியே இருக்க பொழுதும் விடிந்தது.
நித்திரை முடிந்து எழும்பிவந்த மாலா.
"என்ன எதிர்காலம் பற்றி கதைத்துக் கொண்டு, தூக்கம் இல்லாமல் இருந்திங்களோ" என்று சிரித்தபடியே கேட்க..
''ம்ம்'' என்று சொன்னா மது.
ஆனால் அது உண்மையில்லை என்பது அவனுக்கும் தெரியும், இருந்தாலும் மதுவின் ஆசையை ஏன் கெடுப்பான் என்று மெல்ல முறுவலித்தான் ரமணன்.
இப்படியே பொழுதுகள் போனது.
ஒரு நாள் அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான். அவர்கள் எல்லாரும் அவன் கூட படித்தவர்கள். வீட்டில் கடைக்குட்டிகள். 8 நண்பர்களும் சேர்ந்தால் ஊரே பார்த்து வியக்கும். இப்படி ஒரு ஒற்றுமையா? என்று.
யாராவது உறவினர்களின் திருமணமா இல்லை அந்திமசடங்கர் கோவில் திருவிழாவா, எல்லாவற்றிலும் அவர்கள் சேர்ந்து வந்தால் யாரும் கவலையே படாமல் பொறுப்பை அவர்கள் கையில் ஒப்படைத்துவிடுவார்கள்.
அவர்களும் ரமணன் தலைமையில் பொறுப்பாக செய்து முடித்து கொடுத்து விடுவார்கள்.
அவர்களுடன் பேசிகொண்டு இருந்தபோது எல்லோரும் சாமி பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள். 'அவன் இல்லாமல் 7 பேர் ஆகிவிட்டோம்' என்று..
அப்போ அங்கே ஓடிவந்த சாமியின் அக்கா
"ரமணா ஓடிவாங்கோ எங்கள் அப்பா நெஞ்சுவலியில் துடிக்கிறார். உங்களை வர சொல்லி அழுகிறார்௪'' என்றதும் பதறி துடித்தபடி எல்லோரும் ஓடினார்கள். போகும் போதே வழியில் வந்த வாடகை காரையும் பின்தொடர சொல்லிவிட்டு போனான் ரமணன்.
"வா ரமணா" உடம்பெல்லாம் வேர்த்தபடி சாமியின் அப்பா சரிந்து கிடந்தார்.
''என்ன அப்பா செய்யுது'' கவலையுடன் கேட்டன்.
அதற்கிடையில் கார் வந்தது..
''யாரும் வரவேண்டாம் நான் ரமணனுடன் போகிறேன்'' சாமியின் அப்பா சொன்னார்.
மருத்துவம் படிக்கும் ரமணனுக்கு புரிந்துவிட்டது 'சிவியர் ஹாட் அற்றாக்'தான் என்று.. காரில் அவன் மடியில் படுத்தபடியே வந்தார்.
வைத்தியசாலைக்கு மற்ற நண்பர்கள் சைக்கிளில் பின்தொடர்ந்தார்கள்.
சிகிச்சைக்காக போகும் போது வைத்தியரிடம்..
''நான் ரமணனின் மடியில் படுக்கப்போறேன்''
வைத்தியர் 'சரி' என்று சிகிச்சையை ஆரம்பிக்கும் போது வெட்டி வெட்டி இழுக்க தொடங்கியது சாமியின் அப்பாவுக்கு
''ரெண்டாவது அற்றாக் வந்துவிட்டது'' என்று வைத்தியார் பதறியபடி சொன்னார்.
''அட்றினல் இஞ்ஜெக்சனை எடுங்கோ'' என்று பதட்டதுடன் சொல்ல.. சாமியின் அப்பாவின் உடல் அடங்கியது ரமணனின் மடியில்.
அதிர்ச்சியில் உறைந்துவிட்டான் ரமணன்.. அழக்கூட திராணியில்லாமல் சிலையாகிவிட்டான். வெளியில் எல்லோரும் நிற்கிறார்கள். அவனோ பேயறைந்தவன் போல் நம்பமுடியாமல்..
வைத்தியர் செய்த முதலுதவிகள் ஒன்றுமே பலனளிக்காமல் சாமியின் அப்பா போய் விட்டார்.
சாமி, அவன் அம்மா,அக்கா, மது... எல்லோரையும் ரமணன் கையில் விட்டு விட்டு போய்விட்டார்.
வெளியில் வந்தவன் அழக்கூடமுடியாமல் பிரமைபிடித்தவன் போல் இருப்பதை பார்த்த எல்லோருக்கும் புரிந்து விட்டது.
இனி என்ன செய்வது.. எல்லா ஏகாதசிக்கும் ரமணன் வராமல் சாப்பிடாத ஜீவன்.. என்ன சமைத்தாலும் ரமணனுக்கும் வை என்று சாமியின் அம்மாவிடம் கட்டளை போடும் ஜீவன்.. உரிமையில் பசிக்குது என்று போனால் அடுக்களை வரை அனுமதித்த அன்பு ஆன்மா அவனை விட்டு பிரிந்தது அவனால் நம்பமுடியாவில்லை.
எத்தனையோ மரணங்களை பார்த்தவன். குண்டு துளைத்த எத்தனையோ நண்பர்களை சுமந்தவன். தன் தோளிலே மரித்த உடலங்களை சுமந்தவனால் அன்று முடியவில்லை..
அவர் உயிருடன் வந்த காரிலேயே உயிரற்ற மனிதராக கொண்டுவந்தான். குய்யோ முறையோ என்று அழும் சாமி குடும்பத்தவருக்கு தேறுதல் எப்படி சொல்வது.
வேலைக்கு போன மதுவை கூட்டி கொண்டு வர சொல்லி யாரோ சொன்னார்கள்..
அந்த துக்கத்திலும் ரமணனை போக சொல்லி அழுதார்கள் சாமியின் அம்மா.
நண்பனின் மோட்டார் சைக்கிளில் மதுவை கூட்டி கொண்டு வர புறப்பட்டான்.
வைத்தியசாலைக்கு போனவனை கண்டதும் வெள்ளை உடையில் தேவதையாக நின்ற மது முகம் மலர
''என்ன அதிசயம்'' என்று ஆச்சரியத்துடன் கேட்டா.
''இருங்கோ வாறேன்'' என்று சொல்லிவிட்டு விபரம் சொல்லி அனுமதி பெற்று மதுவை வரும் படி கேட்டான்.
''என்ன ஏதும் பிரச்சனையா??சொல்லுங்கோ இதுவரை உங்கள் முகம் இப்படி இருந்தது இல்லையே"
என்று மது அழத்தொடங்கினா.
''ஒன்றுமில்லை நான் கொழும்பு போகவேணும் அதுதான் உங்களுடன் பேசவேணும் வாங்கோ'' என்று கூட்டிகொண்டு வந்தான்.
வரும் போதே வீட்டு வாசலில் நிறைய சனம் நிற்பதை பார்த்த மதுவுக்கு ஏதோ நடக்க கூடாத சம்பவம் என்று புரிந்துவிட்டது.
அவனை விட்டு உள்ளே ஓடினா மது..
மரணவீட்டுகாரியங்களை கவனிக்கதொடங்கினான் ரமணன். சாமிக்கு தந்தி அடிக்க ஒரு நண்பன், இப்படி ஒவ்வொருவரிடம் வேலைகளை பகிர்ந்து கொடுத்து தன் தகப்பனார் என்று தன் குடும்பம் என்று கண்கள் கலங்கியபடியே வேலைகளை கவனித்தான்.
அப்போ தான் விபரம் அறிந்து வந்த நண்பனின் மனைவி மாலா அழுதபடி சாமியின் அப்பா அருகே போனார். சிறிது நேரத்தில் அருகே வந்த மாலா ரமணா ஒருவிடயம்
என்று ஒரமாக அழைத்துச் சென்று
''கொஞ்சம் ஒதுங்கி இருங்கோ ரமணன். உரிமையில்லாத நீங்கள் செய்வதை பார்த்து விட்டு உறவினர்கள் கோபத்தில் பிரச்சனைகள் பண்ணலாம்'' என்று மது சொல்லிட
அவன் டக்கன்று மதுவை பார்தான்.
அந்த சோகத்திலும் அவனை பற்றி யோசிக்கிறா மது. உண்மைதான் என்பது போல்
அவனும் மெல்ல ஒதுங்கிய படி ஒரு மரத்தின் கீழே அமர்ந்தான்.
அவன் குடும்பதினரும் வந்துவிட்டார்கள்.
சாமியின் அம்மா சொல்லி அழும் குரல் கேட்டது.
''உங்களை நேசித்த என் மடியை விட ரமணன் மடி தான் உங்களுக்கு நிம்மதியோ'' என்று...
அவனால் அதை கேட்டதும் தாங்க முடியவில்லை. ஆனால் மதுவின் யோசனை படியே ஒதுங்கியே இருந்து விட்டான்.
சாமி அப்பாவின் காரியங்கள் எல்லாம் முடிந்து உறவுகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார்கள். அந்தவீட்டில் எஞ்சி நின்ற ஒரு ஜீவன் அவன்தான்.
ரமணனின் வீட்டுகாரர் தான் சமையல் சாப்பாடு எல்லாம்.
ஒரு கிழமையின் பின்பு
"வேலைக்கு போகவில்லையா மது?''என்று கேட்டான்.
நிமிர்ந்து பார்த்த மதுவின் விழிகளிலே நீர்த்துளி..
"எழும்புங்கோ வாங்கோ'' என்று வலுக்கட்டாயமாக அழைத்து சென்றான் வேலைக்கு.
மெல்ல மெல்ல மதுவின் அப்பாவை மறந்து, எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள். சாமி தான் பாவம். அழுது அழுது கடிதம் எழுதி இருந்தான்.
அவனால் வரமுடியாத சூழுல்.. என்ன செய்வது? பணத்துக்காக பாலை வனம் போனவன் அவன். வெய்யிலும் குளிரும் அரபிக்காறனின் தொல்லை வேறு கசக்கிப் பிழிவான். வேலையில் "யல்லா யல்லா" தான்.
யாரையுமே மனிதர்களாக அவர்கள் மதிப்பதில்லையே.. வாழ்க்கையை தொலைத்தமனிதர்கள் அங்கே.
அது ஒரு ஜென்மதண்டனை.
<b>-தொடரும்-</b>
ம்ம் யாரவது உங்கள் விமரிசனம் சொல்லுங்களேன் மேற்கொண்டு எழுத தூண்டுதலா இருக்கும்

inthirajith