09-25-2005, 10:41 AM
Quote:லக்ஷ்மியையும், சரஸ்வதியையும், பிள்ளையாரையும் வழிபடும் தமிழர்கள் தங்களை சைவர்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் இந்துக்கள். பிள்ளையாரை கடவுளாக கொண்ட கணபதியம், சைவம் போல, ஆறு இந்து மதப்பிரிவுகளில் வேறு ஒன்றாகும்.
<b>இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகள் எல்லாம் ஒன்று பட்டுத்தான் இந்து மதம் என்று இன்று அழைக்கப்படுகிறது. ஆதி சங்கரர் காலத்திலேயே பல பிரிவுகள் இணைக்கப் பட்டு விட்டன. சைவ, வைணவச் சண்டைகள் முடிந்து பல நூற்றாண்டுகளகி விட்டன.
நான் கூறியதெல்லாம் யாழ்ப்பாணத்து சைவத்தைப் பற்றி, காஷ்மீர சைவம் போல, கன்னடரின் வீரசைவம் போல யாழ்ப்பாணத்துச் சித்தாந்த சைவமும், தனக்கேயுரித்த சில சிறப்பான விடயங்களைக் கொண்டுள்ளது. கணபதியை வணங்கும் காணபத்தியமும், சக்தியை வணங்கும் சாக்தமும், முருகனை வணங்கும் கெளமாரமும் சேர்ந்த ஒரு கலவை தான் யாழ்ப்பாணத்துச் சைவம்.
ஆறுமுக நாவலர் சைவமும், தமிழும் ஈழத்துச் சிவபூமியின் இருகண்கள் என்ற சொன்ன வாயாலேயே யாழ்ப்பாணத்துக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் என்றும் சொன்னார்.
பிள்ளையார், லக்ஸ்மி, சரஸ்வதி வழிபாடு, ஈழத்தின் சைவ சித்தாந்த பாரம்பரியத்துக்கு ஒப்பானதே என சுத்த ஈழத்துச் சைவனாகிய ஆறுமுக நாவலரே ஒப்புக்கொள்கிறார். அவரே தன்னுடைய சைவப் பிரகாச வித்தியா சாலையில் நவராத்திரி விழாவை நடத்தியுமிருக்கிறார்.
இதெல்லாம் நவீன மிஷனரிமாரின் விதண்டாவாதம், பெண்தெய்வ வழிபாடு(mother Goddess) பற்றியோ அல்ல்து கன்னி மேரியைக் கடவுள் என்றோ, உருவ வழிபாடு பற்றியோ பைபிளில் எதுவுமில்லை, யேசுநாதர் கூறியதுமில்லை. Pagan வழிபாட்டில் பழக்கப் பட்ட ரோமர்களை Apostle Paul கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றிய போது அவர்களிடமிருந்து கத்தோலிக்க சமயத்தில் நுழைந்தது தான் இந்த தாய்க் கடவுள் ( Mother Goddess) வழிபாடு. அதன் பின்பு தான் கன்னி மேரி கடவுளாகக் கருதப்பட்டார், கத்தோலிக்கத்திலுள்ள சடங்குகளும், புனிதர்கள் வழிபாடும் பைபிளில் இல்லை. எல்லாம் ரோமர்களின் pagan religion இலிருந்து வந்தவை தாம்.
அதனால் நாங்கள் எவரும் கன்னி மேரியைக் கடவுளாகக் கருதும் எவரும் கிறிஸ்தவர்கள் இல்லை என்று சொல்வதில்லை. காலத்திற்கேற்ப மதங்களில் மாற்றம் ஏற்படுவதும், வழிபாட்டு முறைகள் மாறுவதும் சாதாரண விடயம்.
Quote:இந்து மதம், சைவம், மட்டுமல்ல கிறிஸ்தவமும், இஸ்லாமும், புத்த சமயமும் கூட தமிழுடன் பிரிக்கமுடியாதபடி கலந்துவிட்டன. ஏதோ சைவமும், இந்து சமயமும் தமிழுடன் சிறப்பான உறவு இன்றும் கொண்டிருப்பதாக காட்டுபவர்கள், மற்ற சமயத்தவரை இரண்டாம்தர தமிழர் என்று காட்டுவது போல அமைகிறது. தமிழரிடம் சைவமும், இந்து சமயமும், காலத்தால் முற்பட்டு வந்திருந்தாலும், மற்ற சமயங்களும் இன்று தமிழுடன் கலந்து விட்டன
[b]தமிழர்கள் பலரும் பல்வேறு சமயத்தைத் தழுவிக் கொண்டார்கள். சில தமிழர்கள் ஜெகோவாவின் சாட்சிகளாகவும், ஈரானில் உருவான பஹாய் சமயத்தைக் கூடக் கடைப்பிடிக்கிறார்கள். அதற்காக தமிழரின் பாரம்பரியத்தைப் பாரசீகப் பாரம்பரியம் என்றோ பைபிளின் பாரம்பரியம் என்றோ கூறமுடியுமா?
உதாரணமாக SPAIN நாட்டை எடுத்துக் கொள்வோம், தமிழருக்கும், கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாத்துக்கும் உள்ள தொடர்பை விட துருக்கர்களுக்கும், இஸ்லாம் மதமும் ஸ்பெயின் நாட்டுடன் நெருங்கிய நீண்டகாலத் தொடர்பு கொண்டிருந்தன. ஸ்பெயினின் கட்டிட, கலை,கலாச்சார வளர்ச்சிக்கு துருக்கர்களினதும் , இஸ்லாத்தினதும் பங்களிப்பு கணக்கிட முடியாது. யாராவது ஸ்பானியரிடம் ஸ்பெயினின் பாரம்பரியம், இஸ்லாமும், துருக்கியரின் கலாச்சாரம் என்று சொல்ல முடியுமா? எந்த ஸ்பானியராவது அதைக் கேட்டுக் கொண்டிருப்பார்களா? அவர்கள் சொல்வதெல்லாம் ஸ்பெயின் கிறிஸ்தவப் பாரம்பரியம் கொண்ட கிறிஸ்தவ நாடு என்பது தான், பல நூற்றாண்டுகளான துருக்கத் தொடர்பையும், இஸ்லாமியப் பங்களிப்பையும்அவர்கள் கணக்கிலெடுப்பதில்லை.
பிரான்சில் 10% இஸ்லாமியர்கள், முழு ஐரோப்பாவிலும் 20% முஸ்லிம்கள் (with Albania, Turkey and Bosnia), அமெரிக்காவில் முஸ்லிம்களின் தொகை 12% இன்னும் வளர்ந்து வரும் மதம், இன்னும் ஐரோப்பாவின் கலாச்சாரப் பாரம்பரியமும், அமெரிக்காவின் பாரம்பரியமும் கிறிஸ்தவப் பாரம்பரியமும், பைபிள் கலாச்சாரம் தானே தவிர இஸ்லாமியப் பாரம்பரியமோ, குரான் கலாச்சாரமோ அல்ல.
அமெரிக்காவில் Bible belt என்று தான் என்று சில மாநிலங்களைக் குறிப்பிடுகிறார்கள், சிக்காகோவில் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் அதற்காக South side Chicago வை யாரும் QURAN BELT என்று அழைப்பதில்லை.
தமிழர்கள் பல மதங்களுக்கு மாறியிருக்கிறார்கள், மாறிக்கொண்டிருக்கிறார்கள், மாறுவார்கள் ,ஆனால் தமிழரின் பாரம்பரியம் சைவம் என்பதை மறுப்பவர்கள், ஐரோப்பியருக்கு ஒரு நீதி, தமிழருக்கு ஒரு நீதி சொல்பவர்கள்.
இத்தாலி நாட்டில் பல இன, பல மத மக்கள் வாழ்கிறார்கள், இத்தாலியின் அரசியலமைப்பு இத்தாலி ஒரு கிறிஸ்தவ நாடு, இத்தாலியின் பாரம்பரியம் கிறிஸ்தவ பாரம்பரியம், என்று சொல்லா விட்டாலும் அது கிறிஸ்தவ நாடு தான், அது கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்ட கிறிஸ்தவ நாடில்லை என்று யாரும் வாதாடுவதில்லை. ஏனென்றால் இந்த விதண்டாவாதத்துக்கு தமிழரிடையில் நவீன மிஷனரிமார் உள்ளது போன்று அவர்களிடம் இல்லை. யாராவது லத்தீனும் கிறிஸ்தவமும் பிரிக்க முடியாதென்று சொன்னால் யாரும் மூச்சுக் காட்ட மாட்டார்கள், சைவமும், தமிழும் பிரிக்க முடியாதென்றால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்
Quote:தமிழில் நாம் இன்று பயன்படுத்தும் குத்துக்கள், கால்தரிப்பு, அரைத்தரிப்பு, முழுத்தரிப்பு போன்றவற்றை ஐரோப்பிய மொழிகளில் இருந்து தமிழுக்கு அறிமுகப்படுத்திய வீரமாமுனிவர் எனப்படும் இத்தாலிய பாதிரி பெஸ்கி, முதல் தமிழ் கிறிஸ்தவ இலக்கியமான தேம்பாவணியை இயற்றினார். கண்ணதாசனின் யேசு காவியம் அண்மைக்கால கிறிஸ்தவ இலக்கியமாகும். தமிழின் ஐம்பெரும் இலக்கியங்களில் ஒன்றான மணிமேகலை, புத்தசமயத்து இலக்கியமாகும். மணிமேகலை ஒரு புத்த துறவியாவார். இதே போல தமிழில் இஸ்லாமிய இலக்கியங்களும் உள்ளன. உமறுப்புலவர் 13 ம் நு}ற்றாண்டில் இயற்றிய 5000 பாடல்களை கொண்ட சீறாபபுராணம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
[b]வீரமாமுனிவரைப் பற்றி நானும் வாசித்துள்ளேன். (Inernet is amazing <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ). வீரமாமுனிவர் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழில் காதல் கொண்டு தமிழனாக மாறி, மேல் நாட்டுப் பாதிரியார்களின் ஆடையைத் துறந்து காவியுடுத்தி ஒரு சைவத் துறவி போல் வாழ்ந்தார். அவருடைய பரமார்த்தகுருவும் சீடர்களும், தேம்பாவணியும், மற்றும் உமறுப் புலவரின் நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ், சீறாப் புராணம் எல்லாமே, தமிழில் முன்பேயிருந்த வழக்கத்தை தழுவி அவரவரின் மதத்துக்காக எழுதப்பட்டதேயல்லாமல் அவர்கள் தமிழில் எதும் புதிதாகக் கண்டு பிடித்தவையல்ல.
தேம்பாவணியின் செய்யுள்களில் தேவார வாசம் நிறைய உண்டு. உமறுப் புலவரின் புராணமும், பிள்ளைத் தமிழும் சைவத்தில் முன்பே உள்ள பிள்ளைத் தமிழ் வழக்கையும், புராணங்களின் வழக்கையும் தழுவி எழுதப்பட்டது.
அவர்களின் தமிழ்ப் பற்றையும், தமிழ்த் தொண்டையும் நான் ஒன்றும் குறைத்து மதிப்பிடவில்லை ஆனால் தமிழரின் தொனமையான பாரம்பரியத்தில் தமிழரின் எந்தவொரு பிற்கால, பரதேசிகளின்( Foreigners) மதங்களையும் விட தமிழரின் வைணவமும், சைவமும் தமிழுடன் இரண்டறக் கலந்து விட்டன, அவை பிரிக்க முடியாதவை என்பது தான் என்னுடைய வாதம்.
புத்த சமயத்துக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது, இன்று ஈழத்தில் தமிழ்ப் பெளத்தர்கள் இல்லாதிருந்தாலும் கூட, என்னைப் பொறுத்த வரையில் புத்த சமயத்துக்கும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கும் உள்ள தொடர்பு கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாமுக்குமுள்ள தொடர்பை விட அதிகமானதாகும்.
இன்று பல இந்தியர்கள் ஆங்கில இலக்கியத்தில் வல்லமையுள்ளவர்களாக, ஆங்கில எழுத்துத் துறையில் ஓளிவீசுகிறார்கள். வீரமாமுனிவர் தமிழில் கொண்ட காதலால் தேம்பாவணி இயற்றியது போன்று அவர்களும் ஆங்கிலத்தில் உள்ள புலமையால். ஆங்கில இலக்கியத்தில் நோபல் பரிசு கூட வாங்குகிறார்கள், அதற்காக இந்தியக் கலாச்சாரத்துக்கும் அல்லது இந்தியர்களுக்கும், ஆங்கிலத்துக்குமுள்ள தொடர்பு பிரிக்கமுடியாது என்று சொன்னால் எப்படியோ அப்படித் தான் இறக்குமதி செய்யப் பட்ட மதங்கள் தமிழ்ப் பாரம்பரியத்தில் சம உரிமை கொண்டாடுவது.
தமிழர் என்ற முறையில் சாதி, சமய வேறுபாடற்ற முறையில எல்லாத் தமிழர்களுக்கும் தமிழ்க் கலாச்சாரத்தில் பங்குண்டு அதை நான் மறுக்கவில்லை. ஆனால் யாரும் தமிழுக்கும் சைவத்துக்கும் உள்ள பிணைப்பைக் கேள்வி கேட்பது நியாயமற்றது மட்டுமல்ல வெறும் சிறு பிள்ளைத்தனமான குறும்புச் செயலும் கூட.
Quote:ஈழத்து இந்துக்கள் ஐயர்களை ஐயா என்று மதிப்புடன் அழைப்பார்கள். அவர்கள் மனம் புண்படும்படி தாங்கள் எழுதியதெல்லாம் போதாதா என்று கேட்கிறீர்களா
[b]நான் இந்து சமயத்தைப் பிராமணர்களின் ஏக சொத்தாக நினைக்கவில்லை. அதை விட நான் எதிர்ப்பதெல்லாம் ANTI TAMIL பிராமணரைத் தான். தமிழை வெறுக்கும், தமிழைத் தமிழன் கட்டிய கோயிலுக்குள் விடாமல், தமிழை இகழ்ந்து கொண்டே தமிழரின் தலையில் மிளகாய் அரைக்கும் பிராமணர்களைத் தான் நான் எதிர்த்தேன், இனியும் எதிர்ப்பேன். பலர் அந்த \"ஐயா\" என்ற மரியாதைக்கு அருகதையற்றவர்கள், இனிமேலாவது அவ்ர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதானியுங்கள் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.</b>
Quote:இந்து மதத்தின் பெயரால் இடம்பெற்ற வழக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட பலரும் .இந்து மதத்தின் பெயரால் இடம்பெற்ற பாதிப்புகளை பற்றி
எழுதுகிறார்கள். சாதிமுறையை இஸ்லாம் தமிழருக்கு அறிமுகப்படுத்தவில்லை. கிறிஸ்தவம்அறிமுகப்படுத்தவில்லை. புத்த சமயமோ, சமண சமயமோ அறிமுகப்படுத்தவில்லை. இந்து சமயம் அறிமுகப்படுத்தியது. சமயம் மாறியவர்களும் அவர்கள் வழித்தோன்றல்களும் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியவில்லை. அதனால் இந்து சமயத்தை குறை கூறுகிறார்கள். ஈழத்து இந்து சமய பெரியார்கள், சாதிமுறையை எதிர்த்து \"அதை கைவிடுங்கள்\" என்று கேட்கவில்லை. மாறாக ஆறுமுகநாவலர் போன்றவர்கள், வெளிப்படையாகவே முதலாம் சைவவினாவிடை போன்ற சமய நு}ல்களில், சாதிமுறை தீண்டாமையை ஆதரித்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களால் இந்து சமயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
<b>சாதி முறை தமிழரின் சைவ சமயத்தில் இருக்கவில்லை. அது பிராமணர்களாலும் அவர்களின் மனு சாஸ்திரத்தாலும் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டது.
\"சங்கநிதி பதுமநிதியிரண்டும் தந்து தரணியொடு
வானாளத் தருவரேனும், மங்குவாரவர் செல்வம் மதிப்போமல்லோம்,
மாதேவர்க் காந்தரல்லாராகில்
\"அங்கமெலாம் அழுகொழுகு தொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்,
கங்கை வார் சடைக்கரந்தார்க் கன்பராகில்,
அவர் கண்டீர் நாம் வணங்கும் கட்வுளாரே\"
என்ற நாவுக்கரசர் தான் உண்மையான சைவத்தின் சாதி வெறியற்ற முகத்தைக் காட்டுகிறார். ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பல சித்தர்களின் சமயமும் சைவம் தான்.
நாவுக்கரசர் சொல்கிறார் \"உடலெல்லாம் அழுகும் தொழு நோயுள்ளவர்களாக, மாட்டை வெட்டித் தின்னும், புலையராக இருந்தாலும் கூட, கங்கையைச் சடையில் சூடிய சிவபெருமானை வழிபடுபவர்களாக இருந்தால் அவர்கள் தான் எங்களுக்குக் கடவுள். இது தான் சாதி வெறியில்லாத சைவம்.
சைவத்தில் சிவனுக்குச் சமமாகப் போற்றப்படும் 63 நாயன்மார்களில் எல்லா சாதியினரும் அடங்குவர். சைவமும் சிவனும் சாதிப் பாகுபாடு காட்டியதில்லை.அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெற்றான் சாம்பன் (நந்தன்) பிறப்பினால் புலையர் சாதி. அதேபோல் கண்ணப்பன் காட்டில் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த வேடன். திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர், திருநீலகண்ட நாயனார் குயவர், சுந்தரமூர்த்தி நாயனார் பரத்தையர் குலத்தில் பிறந்த பரவையாரைத் திருமணம் செய்தவர். அதிபத்த நாயனார் நுளையர் (மீன் பிடிப்பவர்) திருமூல நாயனார், ஆனாய நாயனார் இருவரும் இடையர், ஏனாதி நாயனார் சான்றார், கலிய நாயனார் செக்கார். எஞ்சியவர்கள் அரசர், அந்தணர், ஆதிசைவர், வேளாளர் என வெவ்வேறு வகுப்பினராக இருந்தார்கள்.
சைவத்தில் சாதியுண்டென்று பரசமயம் மாறியவர்களால் ஏன் இன்னும் சாதியைத் தங்களிடமிருந்து விட்டொழிக்க முடியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் சமயம் மாறிய கிறிஸ்தவர்கள் இன்னும் தங்களிடையிலுள்ள சாதிப் பாகுபாட்டிற்குச் சைவத்தைக் குறை கூறுவது தான். அப்படியென்றால் இந்து சமயத்தை விட்டுப் போகத் தெரிந்தவர்களால் இந்து சமயம் அறிமுகப் படுத்திய சாதியை மட்டும் விட முடியவில்லையா?.
பல கிறிஸ்தவர்கள் இந்துக்களை விட சாதி வெறியர்கள். இந்து சமயத்தின் சாதியைக் குற்றம் சாட்டி, புத்த சமயத்துக்குப் போன இந்தியாவின் தாலித்துகள் இன்னும் வெறும் புத்த சமயத் தாலித்துகள் தான் ஒன்றும் பெரிதாக மாறி விடவில்லை. அக்கரைக்கு இக்கரைப் பச்சை அவ்வளவு தான்.
ஆறுமுக நாவலர் இருந்த கால கட்டம் வேறு, அதையறியாமல் அவரைச் சாடுவது அபத்தம். அவருக்கு சாதியை விடப் பெரிய எதிரியுடன் போராடி சைவத்தைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. மிஷனரிமாரின் மதமாற்றங்களிலிருந்து சைவத்தை காப்பாற்ற வேண்டியது தான் அவரது முக்கிய நோக்கம், அவர் அதில் ஒரளவு வெற்றியும் கண்டார். ஆறுமுக நாவலர் பைபிளை மொழி பெயர்த்தார், பைபிளில் உள்ள நம்பிக்கையில் இல்லை.
அவருடைய ஆங்கில திறமையைக் கண்ட பீட்டர் பேர்சிவல் பாதிரியார் அவரிடம் கேட்டுக் கொண்டார். பைபிளை மொழி பெயர்த்ததால் தான் அவருக்கு அதிலுள்ள மூடத்தனங்கள் தெரிய வந்தன
Quote:கிறிஸ்தவம் கேவலமான சமயம். அதன் அட்டகாசமெல்லாம் ஐரோப்பாவிலேதான் பெரும்பாலும் அரங்கேறியது. யாழ்ப்பாணத்திலும் தன்னினசேர்க்ககைக்கு சிறுவர்களை வன்புணர்வு செய்த பாதிரிகளும், ஆலயங்களில் பாட்டுப்பாட வந்த இளம் பெண்களுடன் ஓடிப்போன பாதிரிகளும் இருந்தார்கள். சலுகைகளுக்காக மதமாற்றம் நடந்தது. ஆனால் ஒழுக்கம் தவறிய பாதிரிகளை கிறிஸ்தவம் \"இது எமது சமய பண்பாடு\" என்று ( சாதி தீண்டாமையை இந்து பெரியார்கள் செய்தது போல) மூடி மறைக்கவில்லை. மக்கள் பாதிரிகளை கலைத்து விட்டார்கள். சமயம் அவர்களை ஒதுக்கி விட்டது.
[b]எந்த இந்துப் பெரியார்கள் இந்து மதக் குருமார்கள் செய்ததை மூடி மறைத்தார்கள். இந்து சமயம் ஒரு திறந்த சுதந்திரமான மதம். இந்து சமயத்தில் ஒரு பாப்பாண்டவரோ, பிஷப்போ இல்லை மூடி மறைப்பதற்கு. இந்து மதக்குருமார் ஏதும் பாதிரிமார் செய்யும் பாலியல் அட்டூழியம் போல் இங்கு செய்தால் கள்ளப் பிராமணியென்று கழுத்துக்குள் இரண்டு கொடுப்பதற்கும் இந்துக்கள் தயங்குவதில்லை.
கடந்த வருடம் BOSTON BISHOP அமெரிக்காவிலுள்ள homosexual and child molesting priests ஐ மூடி மறைத்து இறுதியில் தான் Resign பண்ணினாரே அது எப்படி. இலங்கையில் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் Child molestation and homosexuality வெளியே வருவதில்லை</b>.
Quote:சலுகைகளுக்காக மதம் மாறிவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதைக்கண்டுதான் இந்து போர்ட் உருவாக்கப்பட்டு இந்து கல்லு}ரி இந்துக்களுக்கு கட்டப்பட்டு இந்துக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. இதனால் மக்களுக்கு நன்மையே விழைந்தது. அதை ஏன் மக்கள் எதிர்க்க போகிறார்கள்.
<b>அன்னியர்கள் தமிழர்களைப் பாரபட்சமாக நடத்திய போது. எங்களுடைய பண்பாட்டுச் சின்னங்களாகிய கோயிலகளை இடித்தழித்த போது, தமிழர்களைக் கேவலமாக நடத்திய போது சலுகைகளுக்காக தங்களுடைய சமயம் மாறி அன்று அன்னியர்களுக்கு பந்தம் பிடித்தவர்களுக்கும் , இன்று சலுகைகளுக்காக சிங்கள அடிவருடிகளாக இருக்கும் தமிழர்களுக்குமிடையில் பெரிய வேறுபாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை</b>.

