09-25-2005, 07:31 AM
preethi Wrote:[b] இதை நேற்றுச் சொன்னவர் இன்று பண்டைத் தமிழரின் கப்பல் கட்டும் தொழில் நுட்பம் பற்றிக் கதை விடும் "தமிழன்" தலா தான், இவர் தன்னுடைய வாயின் இரண்டு பக்கத்தாலும் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு கதைக்கிறார். [/color]கோயில்கள் எல்லாம் தமிழரின் புகழைச் சாற்றுகின்றன எனச் சொல்லுகின்றீர்கள் கட்டடக்கலை ரீதியில் சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்கிறேன்.
பிரித்தி தமிழனின் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் என்பது வெறு கதையல்ல. உண்மையாகவே தமிழரிடம் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் இருந்ததென்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழர்கள் பெருள் தேடுவதற்காகவும், வணிக நோக்கத்திற்காகவும் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டதாக சங்க காலத்து இலக்கியங்களில் கூட குறிப்புக்கள் இருக்கின்றன.
[quote=preethi] கோயில்கள் எல்லம் தமிழனின் புகழைச் சாற்றுகிறது. ஆனால் எங்களின் தமிழ் முன்னோர்கள் கட்டிய கோயில்களை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழுக்கு உரிய உயர்ந்த இடந்தைக் கொடுக்க மறுக்கும் பிராமணர்கள் தான் தமிழனின் அடிமைத்தனத்தினதும், கையாலாகாத்தனத்தினதும் சின்னம்.
அதேவேளை தமிழ் முன்னோர்கள்தான் கோயிலைக் கட்டினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆரியர்கள் தமிழர் பகுதிகளில் நிலையெடுத்த காலப்பகுதியான பல்லவர் காலப்பகுதிக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் எங்காவது இருக்கின்றனவா??? பல்லவர் காலப்பகுதியில் இருந்தே இந்த கோவில்களின் கட்டும் சாபக்கேடு தமிழர்களிடம் ஆரம்பித்தது. பல்லவர் காலத்துடனேயே சைவ சமயம் என்பது நிலைபெறத் தொடங்கியது. அதற்கு முன்பு பௌத்தமும் சமணமும் தமிழர்களிடம் நிலையாக வேரூன்றி இருந்தன. இதற்கு ஐம்பெரும் காப்பியங்களே சான்றாக உள்ளன.
அதேவேளை தமிழரின் இலக்கியத்தில் பல்லவ காலத்திற்கு பின்னான பக்திக் காலத்திலேயே சைவசமயம் இந்து மதம் தொடர்பான இலக்கியங்கள் உருவாக ஆரம்பித்தன. இருந்தபோதும் தமிழ் இலக்கியங்களில் வெறும் 15வீதமானவையே சைவ-இந்து மதங்களிற்குரியவை.
சைவம் தமிழர்களின் மதம் என்று கூறுவதற்கு சரியான ஆதரங்கள் இல்லை. இருந்தால் முன்வையுங்கள்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

