09-25-2005, 06:55 AM
Nitharsan Wrote:சாதிப்பிரிவினையை இந்து மதம் ஏற்ப்டுத்தியதா? மூட நம்பிக்கையை இந்து சமயம் கற்ப்பித்ததா? இந்து சமயத்தின் பெயரில் நீங்கள் (மனிதன்) செய்தவற்றுக்கெல்லாம் மதத்தின் மீது பழி போடுவது நியாயமா? புலத்தில் போட்டிக்கு கோவில் கட்டுவது இந்து சமயத்தில் தவறா? அல்லது கடவுளின் தவறா? மனிதர்களின் தவறு தானே!? சாதியத்தை கையில் வைதிருப்பது யார்? பிரம்மாவும் விஸ்னுவுமா? இல்லை விநாயகரும் முருகனுமா? நீங்களும் உங்கள் சமூதாயமும் தானே!? உ(எ)ங்கள் சமூதாயத்தை ஏன் திருத்த நீங்கள் விளைகின்றீர்கள் இல்லை? எழுத்திலே ஒன்றும் செயலிலே ஒன்றும் செய்யமால் எழுத்தில் எழுதியதை உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செய்ய முற்ப்படுங்கள். எந்த மதமும் மனிதனை தீய வழிக்கு கொண்டு செல்லவில்லை. அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு நெறியையே!
நிதர்சன் எல்லா மதங்களையும் மனிதனே உருவாக்கினான். எந்தவொரு மதமும் தானாக உருவாகவில்லை. அந்த வiயில் இந்து மதத்தையும் மனிதனே உருவாக்கினான் இந்து மதத்திற்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளையும் இந்து மதத்தைக் கடைக்பிடிக்கும், அதனால் வயிற்றை வளர்க்கும் பார்ப்பனர்களே (இந்து மொழியில் தேவர்கள்) உருவாக்கினார்கள்
சாதியத்தை இந்துமதம் உருவாக்கவில்லையென்றால் ஏன் இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர்களிடம் மாத்திரம் பல நு}ற்றுக்கணக்கான சாதிப்பிரிவுகள் இருக்க வேண்டும் (மற்றைய மதங்களைக் கடைப்பிடிப்பவர்களிடமும் சாதியம் இருக்கலாம் ஆனால் இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்களைப் போன்றில்லை)
மதம் என்பது மனிதனை நல்வழிப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதிகளில் மதங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்தியிருக்கலாம் ஆனால் தற்காலத்தில் உலகில் உள்ள முதன்மைப் பிணக்குகள் எல்லாம் மதத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நல்வழிப்படுத்த கொண்டுவரப்பட்ட மதங்கள் இன்று மனிதனை வன்முறை போன்ற தீய்வழி செயல்களிற்கு கொண்டு சென்றுள்ளன.
மதங்கள் உருவான காலப்பகுதியில் மதங்களை காரணம் காட்டி மனிதர்கள் தம்மை நல்வழிப்படுத்திக் கொண்டார் ஆதேபோன்றே இன்றும் மதங்களை காரணங்காட்டி மனிதர்கள் தீய செயல்களில் ஈடுபடுகின்றார்.
இந்துமதம் மூடநம்பிக்கையைக் கொண்டுவந்ததா? எனக் கேள்வி எழுப்புகிறீர்கள் நிதர்சன்
2000ம் ஆண்டுகளிற்கு முன்பு கிரேக்கம் மற்றும் இந்தியாவில் வசித்த மனிதர்களிடம் வானியல் தொடர்பாக இருந்த அறிவு கிட்டத்தட்ட ஒரே நேரத்திலேயே சோதிடம் என்ற மூடநிலைக்கு சென்றது.
கிரேக்கத்தில் ஒருபகுதியினரிடம் மூடநம்பிக்கை சோதிடம் என்ற பெயரில் போய்க்கொண்டிருந்தாலும் மறுபுறத்தில் மற்றொரு பகுதியினரிடம் வானியல் அறிவு மேலும் வளர்ச்சி பெறத்தொடங்கியது. அதுவே இன்றைய அறிவியல் உலகிற்கு வழிகோலியது என்றால் அது மிகையல்ல.
ஆனால் இந்து மதத்தைக் கடைப்பிடிக்கும் இந்தியர்கள் முழுமையாக வானியலறிவு சோதிடமாக மாறிய பின்னர் நவக்கிரகங்களிற்கு கோயில்களும் கட்டி வழிபாடுகளும் இன்றுவரை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வானியல் தொடர்பான ஆராட்சிகள் எதனிலும் இந்தியர்கள் ஈடுபடவில்லை.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

