09-25-2005, 05:36 AM
Quote:தமிழன் இந்து மதத்தால் என்ன பெரிதாகப் பெற்று விட்டான் மனிதத்தின் ஒழுக்கங்களை வேண்டுமானால் இந்து மதம் போதித்திருக்கலாம். ஆனால் அதோடு சாதிகள். சடங்குகள் எண்டபேரில மூடநம்பிக்கைகள் தான் புகுத்தியது அதிகம். இன்றும் நிறையப் பேர் பிரிவினையைக் காட்ட கையில அந்த இந்துமத சாதியத்தைதான் கையில வைச்சிருக்கின்றனர். எனது தாய்மொழி தமிழ் எந்ததுன்பத்திலயும் நாம் அம்மா எண்டுதான் அழுகிறம். அதனால நான் தமிழன். சாதி வெறியை தூண்டி துண்டாட தூண்டும். இந்தச் சமயம் எனக்கு வேண்டாம்தமிழன் கனக்க பெற்று விட்டான் நண்பரே! ஆனால் நீங்கள் பெறததையிட்டு வருத்தப்படுகின்றேன். சாதிப்பிரிவினையை இந்து மதம் ஏற்ப்டுத்தியதா? மூட நம்பிக்கையை இந்து சமயம் கற்ப்பித்ததா? இந்து சமயத்தின் பெயரில் நீங்கள் (மனிதன்) செய்தவற்றுக்கெல்லாம் மதத்தின் மீது பழி போடுவது நியாயமா? புலத்தில் போட்டிக்கு கோவில் கட்டுவது இந்து சமயத்தில் தவறா? அல்லது கடவுளின் தவறா? மனிதர்களின் தவறு தானே!? சாதியத்தை கையில் வைதிருப்பது யார்? பிரம்மாவும் விஸ்னுவுமா? இல்லை விநாயகரும் முருகனுமா? நீங்களும் உங்கள் சமூதாயமும் தானே!? உ(எ)ங்கள் சமூதாயத்தை ஏன் திருத்த நீங்கள் விளைகின்றீர்கள் இல்லை? எழுத்திலே ஒன்றும் செயலிலே ஒன்றும் செய்யமால் எழுத்தில் எழுதியதை உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செய்ய முற்ப்படுங்கள். எந்த மதமும் மனிதனை தீய வழிக்கு கொண்டு செல்லவில்லை. அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு நெறியையே!
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

