09-24-2005, 06:01 PM
ஜெயபாலனின் கவிதை
கொங்றீட் குளவிக் கூடுகளென
மாடித் தொகுதியில்
உலகம் விரியும்
சென்னைப் புற நகர்
தனித்துப் போன ஈழவன் எனக்காய்
பின் பனி பெய்யுமிக்கடைச் சாமத்தில்
சன்னலின் வெளியே
பசுமரம் சிலது இருளில் புலப்படும்
பறவைகள் சிலது இருந்து பூபாளம் பாடும்
இந்தப் பறவைகள்போல் என் நாட்டில்
நானும் வாழ்ந்தேன்.
மாரியின் பின்னே பூத்துக் குலுங்கும்
எனது காடுகள்
வசந்த நாளில் நாணற் புதரில்
முதுகு சொறியும் எனது ஆறுகள்.
கரைகள்தோறும் கற்களைத் தேடி
நீலமுந்தானை துவைக்கும் என் கடல்கள்.
எனக்கென நெல்மணி
அள்ளித் தந்தபின்
மந்தைகட்காகப்
பசும்புல் குவிக்கும் என்னரும் வயல்கள்.
எனது சுமைப் பொழுதினையும்
சுகம் செய் தென்றல்
உழைப்பிலும் களைப்பிலும் சளைத்திடாது
விளையாட்டாக வாழ்வினை வென்று
தேனிசை பாடுமென் தோழர் தோழியர்
இவையெல்லாம் இழந்து
அகதியாய் நானும் உயிர்திருப்பேனோ ?
மீண்டும்
என்னரும் தமிழீழத்தில்
உறுதியாய் இந்த வசந்தப் பொழுதை நுகர்வேன்.
றைபிள்களோடு
பூத்த மரத்தின் நிழலில் அமர்ந்தோ....
புல்லின் கீழே என்னரும் மண்ணுள் துயின்றோ....
எதிர்வரும் வசந்த பொழுதை நுகர்வேன் .
கொங்றீட் குளவிக் கூடுகளென
மாடித் தொகுதியில்
உலகம் விரியும்
சென்னைப் புற நகர்
தனித்துப் போன ஈழவன் எனக்காய்
பின் பனி பெய்யுமிக்கடைச் சாமத்தில்
சன்னலின் வெளியே
பசுமரம் சிலது இருளில் புலப்படும்
பறவைகள் சிலது இருந்து பூபாளம் பாடும்
இந்தப் பறவைகள்போல் என் நாட்டில்
நானும் வாழ்ந்தேன்.
மாரியின் பின்னே பூத்துக் குலுங்கும்
எனது காடுகள்
வசந்த நாளில் நாணற் புதரில்
முதுகு சொறியும் எனது ஆறுகள்.
கரைகள்தோறும் கற்களைத் தேடி
நீலமுந்தானை துவைக்கும் என் கடல்கள்.
எனக்கென நெல்மணி
அள்ளித் தந்தபின்
மந்தைகட்காகப்
பசும்புல் குவிக்கும் என்னரும் வயல்கள்.
எனது சுமைப் பொழுதினையும்
சுகம் செய் தென்றல்
உழைப்பிலும் களைப்பிலும் சளைத்திடாது
விளையாட்டாக வாழ்வினை வென்று
தேனிசை பாடுமென் தோழர் தோழியர்
இவையெல்லாம் இழந்து
அகதியாய் நானும் உயிர்திருப்பேனோ ?
மீண்டும்
என்னரும் தமிழீழத்தில்
உறுதியாய் இந்த வசந்தப் பொழுதை நுகர்வேன்.
றைபிள்களோடு
பூத்த மரத்தின் நிழலில் அமர்ந்தோ....
புல்லின் கீழே என்னரும் மண்ணுள் துயின்றோ....
எதிர்வரும் வசந்த பொழுதை நுகர்வேன் .
....

