09-24-2005, 05:42 PM
Jude Wrote:preethi Wrote:இந்துசமயமும் அதாவது அதன் sub group சைவமும் தமிழும் பிரிக்க முடியாதனவையாகி விட்டன.
லக்ஷ்மியையும், சரஸ்வதியையும், பிள்ளையாரையும் வழிபடும் தமிழர்கள் தங்களை சைவர்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் இந்துக்கள். பிள்ளையாரை கடவுளாக கொண்ட கணபதியம், சைவம் போல, ஆறு இந்து மதப்பிரிவுகளில் வேறு ஒன்றாகும்.
இந்து மதம், சைவம், மட்டுமல்ல கிறிஸ்தவமும், இஸ்லாமும், புத்த சமயமும் கூட தமிழுடன் பிரிக்கமுடியாதபடி கலந்துவிட்டன. ஏதோ சைவமும், இந்து சமயமும் தமிழுடன் சிறப்பான உறவு இன்றும் கொண்டிருப்பதாக காட்டுபவர்கள், மற்ற சமயத்தவரை இரண்டாம்தர தமிழர் என்று காட்டுவது போல அமைகிறது.
தமிழரிடம் சைவமும், இந்து சமயமும், காலத்தால் முற்பட்டு வந்திருந்தாலும், மற்ற சமயங்களும் இன்று தமிழுடன் கலந்து விட்டன. தமிழில் நாம் இன்று பயன்படுத்தும் குத்துக்கள், கால்தரிப்பு, அரைத்தரிப்பு, முழுத்தரிப்பு போன்றவற்றை ஐரோப்பிய மொழிகளில் இருந்து தமிழுக்கு அறிமுகப்படுத்திய வீரமாமுனிவர் எனப்படும் இத்தாலிய பாதிரி பெஸ்கி, முதல் தமிழ் கிறிஸ்தவ இலக்கியமான தேம்பாவணியை இயற்றினார்.
http://www.tamilnation.org/literature/veer...ramamunivar.htm
கண்ணதாசனின் யேசு காவியம் அண்மைக்கால கிறிஸ்தவ இலக்கியமாகும். தமிழின் ஐம்பெரும் இலக்கியங்களில் ஒன்றான மணிமேகலை, புத்தசமயத்து இலக்கியமாகும். மணிமேகலை ஒரு புத்த துறவியாவார். இதே போல தமிழில் இஸ்லாமிய இலக்கியங்களும் உள்ளன. உமறுப்புலவர் 13 ம் நு}ற்றாண்டில் இயற்றிய 5000 பாடல்களை கொண்ட சீறாபபுராணம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
தமிழர் பக்கம்
தமிழுடன் தமிழரின் சயமங்கள் எல்லாம் தான் இரண்டற கலந்து விட்டன. எப்படி இந்து தமிழர்கள் மத்தியில் சமஸ்கிருதமோ, அப்படியே இஸ்லாமியர்கள் மத்தயில் அரபு மொழியும், கிறிஸ்தவர்கள் மத்தியில் லத்தீன், ஆங்கிலம் போன்ற மொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
preethi Wrote:அது பெரும்பாலான ஈழத் தமிழரின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. இந்து மதத்தைத் தாக்கும் பலரும், அது பெரும்பாலான தமிழரின் மனதைப் புண்படுத்தும் என்பதைச் சிந்திப்பதில்லை.
ஈழத்து இந்துக்கள் ஐயர்களை ஐயா என்று மதிப்புடன் அழைப்பார்கள். அவர்கள் மனம் புண்படும்படி தாங்கள் எழுதியதெல்லாம் போதாதா என்று கேட்கிறீர்களா?
preethi Wrote:உங்களுடைய மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், நீங்களோ அல்லது இங்கு யாராவது கிறிஸ்தவ மதத்தை, இந்து மதத்தைத் தாக்கிய அளவுக்குத் தாக்கி எழுதுகிறார்களா?
இந்து மதத்தின் பெயரால் இடம்பெற்ற வழக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட பலரும் .இந்து மதத்தின் பெயரால் இடம்பெற்ற பாதிப்புகளை பற்றி எழுதுகிறார்கள். சாதிமுறையை இஸ்லாம் தமிழருக்கு அறிமுகப்படுத்தவில்லை. கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தவில்லை. புத்த சமயமோ, சமண சமயமோ அறிமுகப்படுத்தவில்லை. இந்து சமயம் அறிமுகப்படுத்தியது. சமயம் மாறியவர்களும் அவர்கள் வழித்தோன்றல்களும் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியவில்லை. அதனால் இந்து சமயத்தை குறை கூறுகிறார்கள். ஈழத்து இந்து சமய பெரியார்கள், சாதிமுறையை எதிர்த்து "அதை கைவிடுங்கள்" என்று கேட்கவில்லை. மாறாக ஆறுமுகநாவலர் போன்றவர்கள், வெளிப்படையாகவே முதலாம் சைவவினாவிடை போன்ற சமய நு}ல்களில், சாதிமுறை தீண்டாமையை ஆதரித்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களால் இந்து சமயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கிறிஸ்தவம் கேவலமான சமயம். அதன் அட்டகாசமெல்லாம் ஐரோப்பாவிலேதான் பெரும்பாலும் அரங்கேறியது. யாழ்ப்பாணத்திலும் தன்னினசேர்க்ககைக்கு சிறுவர்களை வன்புணர்வு செய்த பாதிரிகளும், ஆலயங்களில் பாட்டுப்பாட வந்த இளம் பெண்களுடன் ஓடிப்போன பாதிரிகளும் இருந்தார்கள். சலுகைகளுக்காக மதமாற்றம் நடந்தது. ஆனால் ஒழுக்கம் தவறிய பாதிரிகளை கிறிஸ்தவம் "இது எமது சமய பண்பாடு" என்று ( சாதி தீண்டாமையை இந்து பெரியார்கள் செய்தது போல) மூடி மறைக்கவில்லை. மக்கள் பாதிரிகளை கலைத்து விட்டார்கள். சமயம் அவர்களை ஒதுக்கி விட்டது.
சலுகைகளுக்காக மதம் மாறிவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதைக்கண்டுதான் இந்து போர்ட் உருவாக்கப்பட்டு இந்து கல்லு}ரி இந்துக்களுக்கு கட்டப்பட்டு இந்துக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. இதனால் மக்களுக்கு நன்மையே விழைந்தது. அதை ஏன் மக்கள் எதிர்க்க போகிறார்கள்?

