Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுடுகின்ற புதைமணல்கள் தொடர் - இந்திரஜித்
#16
<span style='font-size:25pt;line-height:100%'>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 2</span>

அவர்கள் வீட்டுக்கு போகும் வழியில் ரமணன் சொன்னான்

''மது படித்துவிட்டு வீட்டில் இருந்தால் மனசு அலை பாயும் எதாவது வேலைக்கு போகலாமே ??''

''என்னவேலைக்கு போகலாம் நீங்களே சொல்லுங்கோ....''

''ம்ம் தாதி வேலைக்கு போறீங்களா ?''

''எப்படி யாரை கேட்பது ?''

அதை தான் பார்த்துக்கொள்வதாக சொன்னான். சொன்னபடியே பயிற்சி மருத்துவத்தாதியாக யாழ் மருத்துவ வைத்தியசாலையில் சேர்த்துவிட்டான்.

காலம் போனது. ரமணன் அப்பா அங்கே இங்கே அலைந்து வெளி நாடு போவதற்கு ஏஜன்சிக்கு பணம் கட்டிவிட்டார். அதற்குள் மதுவும் மருத்துவதாதியாக கடல் கடந்த தீவு ஒன்றில் இடம் கிடைத்து வேலை ஆரம்பித்துவிட்டா.

சாமி எழுதும் எல்லா மடலிலும்

''ஏன்ட என் குடும்பத்துக்கு இப்படி உதவி செய்கிறாய் என்னடா கைம்மாறு செய்யபோகிறேன்''
என்று ஆதங்கத்துடன் எழுதுவான்.
அவனுக்கும் தெரியும் ரமணனின் குணம். நம்பியவர்களுக்கு உயிரையும் கொடுப்பான் என்று.

ஒரு நாள் மது அவ அம்மாவிடம் சொல்லிவிட்டு இருந்தா. ரமணனை வைத்தியசாலைக்கு வரும் படி.
அன்று மதுவுக்கு இரவு வேலை. 10.00 மணிக்குத்தான் முடியும் என்று சொல்லி அனுப்பியிருந்தா. 10.00 மணிக்கு ரமணன வைத்தியசாலைக்கு; போனபோது உடைமாற்றிய படி வந்த மது௪

"வங்கோ போவோம்..'' என்று சொன்னா.
'சரி போவோம்' என்று புறப்பட்டனர். மெல்லிய வாடைகாற்று அவர்களை தழுவி கொண்டு இருந்தது. சைக்கிலில் முன்னே வந்து நின்றா மது..

அவன் ''மது கரியரில் ஏறுங்கோ'' என்று,சொன்னான்.

''இல்லை குளிர்காற்று பலமாக இருக்கு 6 கி.மீ போகவேணும் இருட்டில் எனக்கு பின்னால் இருக்கப்பயம் முன்னால் ஏத்துங்கோ....''

அவனோ இக்கட்டான நிலையில் சம்மதிக்கவேண்டியதாகிவிட்டது.. முன்னால் இருந்தபடியே..

''எத்தனை நாட்கள் கனவு கண்டேன். இன்றுதான் என்னுடன் தனிமையில் வருகிறீங்க..''
என்று பாசமும் நேசமும் கலந்த குரலில் சொன்னா மது.
தனிமையும், அந்த மெல்லிய குளிரும், மௌனமான கடல் காற்றும், தண்ணெண்று மிளிர்ந்து கொண்டு இருந்த நிலவொளியிலும் மது தேவதையாக இருந்தா.

கடலின் உள்ளே லாம்பு வெளிச்சதில் மீன் பிடிப்பவர்களின் அசைவுகள். அவர்கள் தனிமைக்கு தேவதைகள் விளக்கு பிடிப்பதாக நினத்தாள் மது.

''மது'' என்று அழைத்தான்.

''என்ன'' என்று பின்பக்கம் திரும்பினா மது.
இருவர் முகமும் மிக அருகில்.. மூச்சுகாற்று அவன் கன்னத்தை தொட்டது. திடிரென்று சொன்னான்...
''இறங்குங்கோ காற்று சைக்கிள் மிதிக்க முடியவில்லை
நடப்போம்'' என்று இறக்கிவிட்டன்.

''பேசிக்கொண்டே நடப்போம்''

''சரி உங்க விருப்பம்'' என்று மனதின் ஏமாற்றம் குரலில் தெரியாமல் மது சொன்னா.

''இனிமேல் இரவு வேலை என்றால் என்னால் வரமுடியாது உங்களுக்கு ஒரு வீடு பார்க்கவா'' என்று ரமணன் கேட்டான்.
சரி என்று மதுவும் சம்மதித்தா. அவ மனசில் உள்ளது புரியாமல் அவன் வேறு வீடு வாடகைக்கு பார்த்துவிட்டான்.

அவன் நண்பனின் வீடுதான். அந்த நண்பன் காதலித்தபோது, உறவுகள் எல்லாம் எதிர்த்த போது, உற்ற துணையாக இருந்து௪ அவர்களை சேர்த்து வைத்து௪ குடும்பங்களையும் சேர்த்தவன் அவன் தான்.
அதனால் அவன் கேட்டதும் சம்மதித்து விட்டார்கள் அந்த உண்மையான காதல் தம்பதிகள்.
மதுவையும் அவர்களுக்கு நன்றாக தெரியும்

அப்போ நண்பனின் மனைவி சொன்னா...
'ரமணன் பிற்காலத்தில் எங்களின் உதவி தேவைபட்டால் இந்த வீடு உங்களை சந்தோசத்துடன் வரவேற்கும்'
என்று.
அப்போ அருகில் தனது புதிய அறையை பார்க்கவந்த மது சொன்னா 'உங்கள் வார்த்தை பலிக்கவேண்டும்' என்று..

ரமணனுக்கோ எதுவுமே புரியவில்லை.
''என்ன சொல்லுறிங்க'' என்று கேட்டான்.

''ம்ம் சுரைக்காய்யுக்கு உப்பில்லை'' என்று குறும்பாக பதில் அளித்தா மது.

ஒரு நாள் அவன் சாமிவீட்டுக்கு போனபோது அங்கே மதுவும் இருந்தா. வருகிற மாதத்தில் இருந்து தான் புதிய வீட்டுக்கு போவதாகவும், அவனையும் கூடவந்து 4 நாட்கள் கூடநின்று உதவி செய்ய சொல்லிக் கேட்க.. அப்போ அங்கே இருந்த சாமி. ''ரமணா அவகூட நின்று உதவி பண்ணு'' என்றான். அவனும் சாமி பேச்சைத் தட்டமுடியாமல் மது கூட போனான்.

அன்று இரவு சாப்பாடு நண்பனின் குடும்பத்துடன். சாப்பிடும் போது நண்பனின் மனைவி..
''ரமணன் படுக்கையை எங்கே போடுவது'' என்று கேட்க.. அப்போ மது குறுகிட்டு சொன்னா.. ''என் அறையில் போடுங்கோ'' என்று. நண்பனுக்கு சிரித்து புரையேறிவிட்டது. அவசரத்தை பாருங்கோ என்று நண்பனின் மனைவியும் சிரித்தா.

ரமணன் சொன்னான் ''இல்லை வெளியே விராந்தையில் போடுங்கோ அங்கே படுத்தால் தான் நித்திரை வரும்'' என்று. ''இல்லை உள்ளே வந்து என் அறைக்கு முன்னால் படுங்கோ'' மது கட்டளை இட்டா.
''சரி'' என்று சொன்னான்.

''நாளையில் இருந்து தனியா இருக்கவேணூம் மது'' என்று சொன்ன அவனை எரித்துவிடுவது போல் பார்த்தா மது. அந்த விளக்கொளியிலும் அவ கண்கள் கசிந்து இருந்தது தெரிந்தது. மனதினுள்ளே ஏதோ செய்தாலும், அந்த ஈரவிழிகளை பார்க்கமுடியாமல் சாப்பாடில் புலனை செலுத்தினான் அவன்.

அப்போ தான் நண்பனின் மனைவி கேட்டா
''மது என்ன இது அழுகை''

''மிளகாய் கடித்துவிட்டேன் அதுதான்''

''இன்று நான் மிளகாய் இல்லாதபடியால் போடவில்லையே'' என்ற நண்பனின் மனைவி தொடர்ந்து

"ம்ம் ம்ம் காதலித்தால் இப்படியெல்லாம் ஐடியா எல்லாம் வரும். உதவி செய்த ரமணனுக்கு எல்லாமே புரியும்'' என்று போட்டு உடைத்தா அந்த சகோதரி.

தலை குனிந்தபடி சாப்பிட்டு முடித்தான். சாப்பிட்டதும் எல்லோரும் நிலவொளியில் சுற்றி இருந்தபடி முற்றத்தில் கதைத்து கொண்டு இருந்தார்கள்.

<b>-தொடரும்-</b>
inthirajith
Reply


Messages In This Thread
[No subject] - by inthirajith - 09-23-2005, 02:58 PM
[No subject] - by RaMa - 09-23-2005, 07:28 PM
[No subject] - by shanmuhi - 09-23-2005, 08:09 PM
[No subject] - by Rasikai - 09-23-2005, 08:25 PM
[No subject] - by இராவணன் - 09-23-2005, 10:00 PM
[No subject] - by KULAKADDAN - 09-23-2005, 10:59 PM
[No subject] - by inthirajith - 09-24-2005, 06:07 AM
[No subject] - by sankeeth - 09-24-2005, 08:51 AM
[No subject] - by Thala - 09-24-2005, 09:04 AM
[No subject] - by sooriyamuhi - 09-24-2005, 09:14 AM
[No subject] - by Senthamarai - 09-24-2005, 09:52 AM
[No subject] - by ANUMANTHAN - 09-24-2005, 02:23 PM
சுடுகின்ற புதைமணல்கள் - by inthirajith - 09-24-2005, 02:30 PM
[No subject] - by inthirajith - 09-24-2005, 02:36 PM
[No subject] - by inthirajith - 09-24-2005, 02:38 PM
[No subject] - by அனிதா - 09-24-2005, 03:09 PM
[No subject] - by Nitharsan - 09-24-2005, 06:38 PM
[No subject] - by கீதா - 09-24-2005, 07:10 PM
[No subject] - by inthirajith - 09-24-2005, 09:38 PM
[No subject] - by shanmuhi - 09-25-2005, 12:42 PM
[No subject] - by hari - 09-25-2005, 01:33 PM
[No subject] - by inthirajith - 09-25-2005, 03:09 PM
[No subject] - by inthirajith - 11-07-2005, 12:50 AM
[No subject] - by Birundan - 11-07-2005, 01:42 AM
[No subject] - by Rasikai - 11-07-2005, 01:54 AM
[No subject] - by SUNDHAL - 11-07-2005, 02:57 AM
[No subject] - by tamilini - 11-07-2005, 10:16 PM
[No subject] - by அருவி - 11-08-2005, 12:02 AM
[No subject] - by shobana - 11-08-2005, 12:26 PM
[No subject] - by MUGATHTHAR - 11-08-2005, 01:04 PM
[No subject] - by tamilini - 11-08-2005, 02:31 PM
[No subject] - by tamilini - 11-08-2005, 02:47 PM
[No subject] - by inthirajith - 11-08-2005, 03:13 PM
[No subject] - by Mathan - 11-08-2005, 09:02 PM
[No subject] - by அனிதா - 11-09-2005, 11:53 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 12:01 AM
[No subject] - by selvanNL - 11-10-2005, 12:47 AM
[No subject] - by Rasikai - 11-10-2005, 12:47 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 12:53 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 12:56 AM
[No subject] - by Rasikai - 11-10-2005, 12:58 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 01:05 AM
[No subject] - by Rasikai - 11-10-2005, 01:07 AM
[No subject] - by inthirajith - 11-10-2005, 01:14 AM
[No subject] - by sri - 11-10-2005, 02:28 AM
[No subject] - by RaMa - 11-10-2005, 08:08 AM
[No subject] - by kuruvikal - 11-10-2005, 08:31 AM
[No subject] - by inthirajith - 11-12-2005, 12:07 AM
[No subject] - by sri - 11-12-2005, 02:51 AM
[No subject] - by RaMa - 11-12-2005, 03:20 AM
[No subject] - by SUNDHAL - 11-12-2005, 03:42 AM
[No subject] - by Rasikai - 11-12-2005, 05:35 AM
[No subject] - by ANUMANTHAN - 11-12-2005, 10:03 AM
[No subject] - by Mathan - 11-12-2005, 01:21 PM
[No subject] - by inthirajith - 11-12-2005, 03:20 PM
[No subject] - by shobana - 11-12-2005, 06:25 PM
[No subject] - by RaMa - 11-13-2005, 02:07 AM
[No subject] - by ANUMANTHAN - 11-13-2005, 11:24 AM
[No subject] - by inthirajith - 11-13-2005, 10:48 PM
[No subject] - by KULAKADDAN - 11-13-2005, 11:08 PM
[No subject] - by inthirajith - 11-13-2005, 11:18 PM
[No subject] - by inthirajith - 11-13-2005, 11:51 PM
[No subject] - by RaMa - 11-14-2005, 04:28 AM
[No subject] - by ANUMANTHAN - 11-14-2005, 06:10 AM
[No subject] - by sri - 11-16-2005, 12:46 AM
[No subject] - by vasisutha - 11-16-2005, 12:54 AM
[No subject] - by inthirajith - 11-16-2005, 09:27 AM
[No subject] - by inthirajith - 11-16-2005, 10:05 AM
[No subject] - by inthirajith - 11-16-2005, 08:36 PM
[No subject] - by inthirajith - 11-16-2005, 08:47 PM
[No subject] - by sri - 11-17-2005, 02:17 AM
[No subject] - by SUNDHAL - 11-17-2005, 04:21 AM
[No subject] - by inthirajith - 11-17-2005, 08:59 AM
[No subject] - by Niththila - 11-17-2005, 11:32 AM
[No subject] - by Rasikai - 11-17-2005, 06:26 PM
[No subject] - by அனிதா - 11-17-2005, 10:47 PM
[No subject] - by RaMa - 11-18-2005, 06:38 AM
[No subject] - by shanmuhi - 11-21-2005, 10:21 AM
[No subject] - by MUGATHTHAR - 11-21-2005, 10:42 AM
[No subject] - by inthirajith - 11-21-2005, 11:49 PM
[No subject] - by Mathan - 11-23-2005, 05:06 PM
[No subject] - by KULAKADDAN - 11-25-2005, 08:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)