Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
10 வேடங்களில் கமல் நடிக்கும் "தசாவதாரம்'
#9
தசாவதாரம் படத்தில் கமலஹாசன் ஜோடியாக அசின், புதுமுகம் வித்யா- மேலும் 3 நடிகைகளை தேடுகிறார்கள்
ரஜினியின் புதிய படமான `சிவாஜி' போலவே கமல் நடிக்க இருக்கும் `தசாவதாரம்' படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் 10 வேடங்களில் வந்து அசத்தப் போகும் இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 9 வேடங்களில் நடித்த `நவராத்திரி' படம் அவரது சாதனையில் மைல் கல்லாகவும், சிவாஜியின் திறமைக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகவும் இருந்தது. மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அது அமைந்தது.

இன்று நடிப்புலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்துக் கொண்டு, அதற்காக தன்னையே வருத்தி புதுப்புது அவதாரங்களை எடுத்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தமிழ்த் திரையுலகில் சிவாஜிக்குப் பிறகு நடிப்பில் சவால் விடும் சாதனைகளை செய்து வருகிறார். வெற்றி தோல்விகளைப்பற்றி கவலைப்படாமல் படத்துக்கு படம் புதுமைகளை புகுத்துவதில் கமலுக்கு நிகர் கமல்தான்.

`வேட்டையாடு விளையாடு' படத்துக்குப் பிறகு கமல் நடிக்க இருக்கும் `தசாவதாரம்' வித்தியாசமான கதையாக உருவாக இருக்கிறது. இதில் 10 விதமான `கெட்-அப்'புகளில் வரும் கமல் வித்தியாசமான நடிப்பால் அசத்த முடிவு செய்திருக்கிறார்.

இந்த படத்தில் வருடம் 10 கமல்களில் வயதான கமலும் உண்டு. இளைஞரும், நடுத்தர வயதுகாரரும் இருக்கிறார்கள். உடல் ஊனமுற்ற ஒரு கமலையும், பெண் வேடமிட்ட கமலையும் புகுத்துவது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது. நகைச்சுவை கலந்த கலகலப்பான கதை ஒன்று இதற்காக தயாராகி வருகிறது. வெளிநாட்டில் இருந்து மேக்கப் நிபுணர்களை வரவழைத்து கமலை கன்னாபின்னா வென்று மாற்றதிட்டமிட்டுள்ளனர்.

மொத்தம் உள்ள 10 கமல்களில் 5 பேருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகளை தேடி வந்தனர். இதில் ஒரு கமலுக்கு ஜோடியாக அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கலகலப்பான வேடம். மற்றொரு கமல் ஜோடியாக நடிப்பதற்கு புதுமுக நடிகை வித்யா பாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரும் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான் 30-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் `பரினிதா' என்ற இந்திப் படத்திலும் அறிமுகமாகி இருக்கிறார். இதற்குப் பிறகு பல படங்களில் நடிக்க வித்யாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளன.

இதற்கிடையே கமல் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, வித்யா பாலனை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. `கமலுக்கு ஈடு கொடுத்து நடிக்க முயற்சி செய்வேன். அவருடன் ஜோடி சேருவது என் அதிர்ஷ்டம்' என்கிறார் அவர்.

அசின், வித்யா தவிர மேலும் 3 நடிகைகளை கமலுடன் ஜோடியாக நடிக்க வைப்பதற்காக தேடுகிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதோ?.
----------
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 09-21-2005, 01:57 PM
[No subject] - by RaMa - 09-21-2005, 03:53 PM
[No subject] - by வெண்ணிலா - 09-21-2005, 03:55 PM
[No subject] - by RaMa - 09-21-2005, 04:28 PM
[No subject] - by கீதா - 09-21-2005, 07:47 PM
[No subject] - by SUNDHAL - 09-22-2005, 03:09 AM
[No subject] - by Mathan - 09-22-2005, 06:52 PM
[No subject] - by வெண்ணிலா - 09-24-2005, 04:48 AM
[No subject] - by Thala - 09-24-2005, 08:28 AM
[No subject] - by Vishnu - 09-24-2005, 09:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)