![]() |
|
10 வேடங்களில் கமல் நடிக்கும் "தசாவதாரம்' - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: 10 வேடங்களில் கமல் நடிக்கும் "தசாவதாரம்' (/showthread.php?tid=3236) |
10 வேடங்களில் கமல் நடிக்கும் "தசாவதாரம்' - SUNDHAL - 09-21-2005 புதுமைக்கும் வித்தியாசமான முயற்சிகளுக்கும் மற்றொரு பெயர் கமல்ஹாசன் என்றால் அது மிகையாகாது. இந்தியத் திரையுலகில் இவர் அளவுக்கு "ரிஸ்க்' எடுத்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இவருடைய சில படங்களின் "ரிசல்ட்' வேறுமாதிரியாக இருந்தாலும் அது தன்னைப் பாதிக்காதவாறு அடுத்தடுத்துப் புது முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார். இன்று விக்ரம், சூர்யா போன்றோர் படத்துக்குப் படம் வித்தியாசமாய் நடித்து மக்களிடையே சிறப்பான வரவேற்பையும் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருப்பவர் கமல் தான். "வேட்டையாடு விளையாடு' படத்தையடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் பெயர் "தசாவதாரம்'. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இப்படத்தில் கமல் 10 வேடங்களில் நடிக்கிறார்! திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத, நினைத்திராத புதுமை இது. "நவராத்திரி' படத்தில் சிவாஜிகணேசன் 9 வேடங்களில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் என்கிறீர்களா? அதுசரி... கமலுக்கு முன்னோடியே சிவாஜிதானே! படத்தில் கமலுக்கு 5 ஜோடிகள்! அந்த ஐவரில் ஒருவர் அஸின் என்று கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. - Birundan - 09-21-2005 கதை வசனம் யாரு கிரேஷிமோகனா? அப்பிடி என்றா, தசாவதாரத்தை பத்து தடவ பாத்தாலும் புரியிறது கஷ்டம்தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 09-21-2005 தகவலுக்கு நன்றி சுண்டல் - வெண்ணிலா - 09-21-2005 Birundan Wrote:கதை வசனம் யாரு கிரேஷிமோகனா? அப்பிடி என்றா, தசாவதாரத்தை பத்து தடவ பாத்தாலும் புரியிறது கஷ்டம்தான். <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 09-21-2005 பத்து தரம் பார்ப்பதற்காத் தானே தசாவதாரம் என்று பெயர் வைத்திருக்கின்றது.... - கீதா - 09-21-2005 தகவலுக்கு நன்றி அண்ணா - SUNDHAL - 09-22-2005 கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் படம் என்றால் பார்க்க கூடியதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 09-22-2005 எனக்கு கடைசியாக வெளிவந்த கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படம் பிடிக்கவில்லை, இந்த படம் சுண்டல் சொன்னது போல கே எஸ் ரவிக்குமார் படம் என்பதால் ரசிக்க கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன், கிரேசிமோகன் வசனம் என்றால் ஒரு வசனம் புரிந்து சிரிப்பதற்குள் அடுத்த நகைச்சுவை வந்து விடுகிறது - வெண்ணிலா - 09-24-2005 தசாவதாரம் படத்தில் கமலஹாசன் ஜோடியாக அசின், புதுமுகம் வித்யா- மேலும் 3 நடிகைகளை தேடுகிறார்கள் ரஜினியின் புதிய படமான `சிவாஜி' போலவே கமல் நடிக்க இருக்கும் `தசாவதாரம்' படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் 10 வேடங்களில் வந்து அசத்தப் போகும் இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 9 வேடங்களில் நடித்த `நவராத்திரி' படம் அவரது சாதனையில் மைல் கல்லாகவும், சிவாஜியின் திறமைக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகவும் இருந்தது. மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அது அமைந்தது. இன்று நடிப்புலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்துக் கொண்டு, அதற்காக தன்னையே வருத்தி புதுப்புது அவதாரங்களை எடுத்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தமிழ்த் திரையுலகில் சிவாஜிக்குப் பிறகு நடிப்பில் சவால் விடும் சாதனைகளை செய்து வருகிறார். வெற்றி தோல்விகளைப்பற்றி கவலைப்படாமல் படத்துக்கு படம் புதுமைகளை புகுத்துவதில் கமலுக்கு நிகர் கமல்தான். `வேட்டையாடு விளையாடு' படத்துக்குப் பிறகு கமல் நடிக்க இருக்கும் `தசாவதாரம்' வித்தியாசமான கதையாக உருவாக இருக்கிறது. இதில் 10 விதமான `கெட்-அப்'புகளில் வரும் கமல் வித்தியாசமான நடிப்பால் அசத்த முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் வருடம் 10 கமல்களில் வயதான கமலும் உண்டு. இளைஞரும், நடுத்தர வயதுகாரரும் இருக்கிறார்கள். உடல் ஊனமுற்ற ஒரு கமலையும், பெண் வேடமிட்ட கமலையும் புகுத்துவது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது. நகைச்சுவை கலந்த கலகலப்பான கதை ஒன்று இதற்காக தயாராகி வருகிறது. வெளிநாட்டில் இருந்து மேக்கப் நிபுணர்களை வரவழைத்து கமலை கன்னாபின்னா வென்று மாற்றதிட்டமிட்டுள்ளனர். மொத்தம் உள்ள 10 கமல்களில் 5 பேருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகளை தேடி வந்தனர். இதில் ஒரு கமலுக்கு ஜோடியாக அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கலகலப்பான வேடம். மற்றொரு கமல் ஜோடியாக நடிப்பதற்கு புதுமுக நடிகை வித்யா பாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான் 30-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் `பரினிதா' என்ற இந்திப் படத்திலும் அறிமுகமாகி இருக்கிறார். இதற்குப் பிறகு பல படங்களில் நடிக்க வித்யாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளன. இதற்கிடையே கமல் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, வித்யா பாலனை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. `கமலுக்கு ஈடு கொடுத்து நடிக்க முயற்சி செய்வேன். அவருடன் ஜோடி சேருவது என் அதிர்ஷ்டம்' என்கிறார் அவர். அசின், வித்யா தவிர மேலும் 3 நடிகைகளை கமலுடன் ஜோடியாக நடிக்க வைப்பதற்காக தேடுகிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதோ?. - Thala - 09-24-2005 ம்ம்ம் .. எப்பிடியும் ஒரு கமல் சென்னைத்தமிழ் கதைப்பார் அதோட தென்னாலித்தமிழ் கதைச்சு உயிர வாங்காட்டால் சரி... :evil: - Vishnu - 09-24-2005 Thala Wrote:ம்ம்ம் .. எப்பிடியும் ஒரு கமல் சென்னைத்தமிழ் கதைப்பார் அதோட தென்னாலித்தமிழ் கதைச்சு உயிர வாங்காட்டால் சரி... :evil: ஓம் ஓம்.... தலா சொல்லுறது சரியாத்தான் இருக்குமெண்டு நான் நினைக்கிறன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |