09-24-2005, 12:14 AM
inthirajith Wrote:வெளியே எரிக்கின்ற கதிரவன். அறைக்குள்ளே குளிருட்டியின் தண்மையான குளிர் காற்று, அறை நண்பர்களின் சமையல் வாசம் மூக்கைத்துளைத்தபடி இருக்கின்றது...
படுக்கையில் இருந்தபடியே ரமணனின் மனசு சிறகடித்துக் கொண்டது.......
அன்றுவந்த அப்பாவின் கடிதம் மனசையும் உடலையும் அடித்து போட்டது போல் தளரப்பண்ணிவிட்டது. அருகில் இருந்த 'சிடி'யில் 'கண்பேசும் வார்த்தைகள் புரியவில்லை' என்ற அந்த பாடல் இதமாக ஒலித்து கொண்டு இருந்தது.. அவன் கண்களில் நீர்.. யாரும் அறியாதவாறு துடைத்து கொண்டான். கடிதத்தை விட்ட இடத்தில் இருந்து வாசிக்க தொடங்கினான்...
'அன்பான மகனுக்கு..!
சாமியின் சகோதரிக்கு கல்யாணம் முடிந்து விட்டது. அவர்கள் நலமாக கணவன் வீட்டுக்கு போய்விட்டார்கள். நீங்கள் அனுப்பிய பணம் தன் அந்த பெண்ணின் கல்யாணத்துக்கு துணை நின்றது...'
'ம்ம்'... பெரு மூச்சு விட்டான் ரமணன்...
பாலைவனத்தில் இருப்பவர்களுக்கு, வருகின்ற கடிதங்கள்தான் ஆறுதலும் அரவணைப்பும் தரும். சமயத்தில் இடி போல் செய்திகளையும் சுமந்து வருவதுண்டு. இந்த கடிதமும் அதில் ஒரு வகைதான்.
கண்ணை மூடிய ரமணனுள், அவன் வாழ்க்கை திசைமாறிய அந்த நினைப்பு ஓடியது...
தாயகத்தில் பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டு இருந்தபோது அவனுடன் படித்த ஒருவரும், அவனையும் தவிர எல்லோருமே சித்தியடையவில்லை. அன்று நிலவிய சூழல் அப்படி. அரசியல், போராட்டம் என்று பல காரணிகள். அவனும் அதிலே சேர்ந்துவிட்டான்.
ஒரு நாள் அதிகாலையில் சென்றீ காவல் முடிந்து, தூக்கம் இல்லா விழிகள் சிவந்து எரிச்சலுடன் வந்தவனுக்கு, வீட்டில் ஏதோ அசாதாரண நிலை போல் தென்பட்டது. அழுதபடி அம்மா, மூலையில் சகோதரிகள்..
வாய்பேசமுடியாத அம்மா, வாசலையே பார்த்தபடி அப்பா. ரமணனைக் கண்டதும்,
''தம்பி நல்லவேளை இப்போ வந்திங்களே.. இரவு இராணுவம் உங்களை தேடி எங்கள் வீட்டை வந்துவிட்டார்கள்'' என்று அப்பா கூறினார்.
அன்றுதான் அப்பாவுக்கும் புரிந்தது.. போராட்டமும் அவனுக்கு ஒருபக்கம் என்று..!
அப்பா யோசித்தபடி ரமணனுடன் பேசினார்..
''தம்பி அண்ணாக்கள் தான் குடும்பத்துக்கு உதவியில்லாமல் போய்விட்டார்கள். கல்யாணம் முடித்தபின் சகோதரிகள் அப்பா, அம்மா என்று வருவதில்லை. நீங்களாவது எங்களுக்கு முழுமையா வேணும். கொழும்பு போக ஆயத்தப்படுத்துங்கோ'' என்று மிகபணிவாக சொன்னார் அப்பா.
மறுக்கமுடியவில்லை அவனால்.. இன்றுவரை அவனை கடிந்து பேசியவரில்லை அவர்.
'ம்ம்' என்றுவிட்டு 'மதியம் நண்பன் சாமியின் அப்பாவை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லவேண்டும்..' எண்று நினைத்தபடி சிறிது உறங்க சென்றான்.
சகோதரியின் முகம் பார்க்காமலே அவ தந்த தேனீரை பருகிவிட்டு சரிந்தான் ரமணன். அப்போ சாமி அனுப்பிய மடலை அக்கா கொடுத்துவிட்டுப் போனார்..! 'ஓ ஓ' மனசு முழுக்க சந்தோசம். மடலை ஆவலுடன் பிரித்தான்...
'ரமணா, அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்தபோது நீதான் அப்பாவை காப்பாத்தினாய்.. என்று என் சிறியதங்கை எழுதி இருந்தா.
டேய் என் குடும்பத்தை உன்னை நம்பி தான் விட்டுவிட்டுவந்தேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை.. சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்ததுக்கு நீ செய்வது உண்மையிலே என்னால் திருப்பி செய்யமுடியாத கடன்..!'
வாசித்தபடியே உறங்கிவிட்டன் ரமணன்.....
திடுக்கிட்டு எழுந்தான் ரமணன். அவன் முகத்தில் ஐந்தாறு நீர்த்துளிகள்..! அவன் அருகே யாரோ அமர்ந்தபடி..
நித்திரை பறந்தோட முழித்துவிட்டான். மிக அருகில் கண்கள் கலங்கியபடி சாமியின் இளைய சகோதரி...
யாருமே அருகில் இல்லை.. அவனும், அழுதபடி சாமியின் தங்கை மதுவும் தான்.. அவன் கேட்டான்.
''என்ன உங்கள் அப்பாவுக்கு ஏதும் திரும்ப நெஞ்சுவலியே??''
'இல்லை' என்று தலையாட்டியபடி..
''உங்களுடன் பேசவேணும் வெளியே வாங்கோ'' என்று அழைத்தாள்.
''என்ன சாமி கடிதம் போட்டவனே? எதாலும் பிரச்சனையாமே சவூதியில?'' என்று கேட்டான்.
''இல்லை. உங்களிடன் தான் பேசவேணும் வாங்கோ''
அவனும் புரியாதவனாக குனிந்துவிட்டு, அமைதியாக அவளைப் பின்தொடர்ந்தான்.. அவனுடைய சகோதரிகளிடம் வைத்தியசாலைக்கு போய்வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
''நானும் உங்களுடன் சைக்கிளில் வரலாமா?''
என்று கேட்டாள் மது. அவனும் அரைகுறை மனத்துடன் சம்மதித்து சைக்கிளை மிதிக்க தொடங்கினான். சிறிது தூரம் போனதும் தான் அவனுக்கு மெதுவாக மது அழுவது புரிந்தது.
''ஏன் அழுகிறிங்க?''
''கோவில் மடத்துக்கு அருகில் நிப்பாட்டுங்க கதைக்கவேணும்'' என்று அழுதபடியே சொன்னாள். அவனும் 'அவளது தகப்பனுக்குத்தான் ஏதாவதோ..?' எனக் கலங்கிவிட்டான்.. சைக்கிளை விட்டு கீழே இறங்கிய மது,
''என்ன நீங்கள் செய்வது சரியா? உங்களை நம்பி இருப்பவங்க மனசு புரியாமல் இயக்கம் என்று போறிங்களே. எங்களையெல்லாம் விட்டுபிரிய மனசு வந்துவிட்டதே?\" என்று உடைந்து அழுதாள்.
அவனுக்கு தலையும் புரியவில்லை. எதுவும் புரியவில்லை.
''என்ன சொல்கிறிங்க. புரியவில்லை. வீட்டிலும் அப்பா கொழும்பு போக ஆயத்தபடுத்த சொல்கிறார்.. நீங்க வேறு புரியாமல் பேசுறீங்களே..'' என்று ஆதங்கத்துடன் கேட்டான்.
அப்போதுதான் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள் மது..!
''இத்தனை காலமும் உங்களைத்தானே நம்பி எங்களை விட்டுவிட்டுப் போனார் அண்ணா. இப்படி எங்களையெல்லாம் தவிக்கவிடலாமா??''
அவன் உறுதியோடு சொன்னான். ''யாருமே என்னை நம்பி இல்லை நாட்டுக்கு செய்யவேண்டியதுதான் நான் செய்வது''
அப்போ மது சொன்னாள் ''உங்களை நம்பித்தானே நான் இருக்கிறேன்'' என்று...
அப்போதுதான் அவனுக்கு அந்தப் பேதையின் கண்ணீருக்கும் அர்த்தம் புரிந்தது. அவன் எதுவுமே பேசவில்லை..
''முதல் வாங்கோ வீட்டை போவோம்.. யோசித்து சொல்கிறேன்..'' என்றபடி சைக்கிளில் ஏறினான் அவன்.
முதல் பின்னால் இருந்துவந்த மது இப்போது முன்னால் வந்து இருப்பதாக சொல்ல.. அவனோ,
''வேண்டாம். ஊரில் இருப்பவர்கள் தப்பாக பேசுவார்கள். வேண்டாம்'' என்று மறுத்து விட்டான்.
<b>-தொடரும்-</b>
வாழ்த்துக்கள்.. ஆரம்பம் யதார்த்தமாக உள்ளது. உரையாடல்களையும் ஓரளவு யதார்த்தமாக எழுத முயற்சியுங்கள். அதாவது முழுமையான பேச்சுத் தமிழில்.
.

