09-23-2005, 05:58 AM
இனவழிப்புக்காய் சிறிலங்கா அரசினால் குறிவைக்கபட்ட இடம் வடமராட்சி கிழக்கின் மையப்பள்ளியான நாகர்கோவில் மகாவித்தியாலயம். 850 மாணவர்களையும் 30 ஆசிரியர்களையும் கொண்ட நாகர்கோவில் மாகவித்தியாலயம். மதிய வேளையில் சுடுகாடாகியது. மதியம் 12.45 மணியளவில் சிறீலங்கா விமானப்படைக்கு சொந்த மான புக்காரா விமானம் நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது குண்டு தாக்குதல் நடாத்தியது. செய்வதறியாது சிதியோடிய மாணவர்கள் இரத்த வெள்ளித்தில் மூழ்கினர். அச்சத்தில் புளிய மரத்தின் கீழ் மறைந்த சீருடை அணிந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. உடல்கள் சிதறி வெள்ளை சீருடை சிவப்பாக கையிலிருந்த புத்தககங்களும் இரத்தில் குளிக்க 25 மாணவர்கள் உட்பட 40 பொது மக்கள் சிங்கள அராஜகத்துக்கு பலியானார்கள். (இறந்தவர்கள் தொகை வெவ்வேறு ஊடககங்களில் கூடிக்குறைகின்றது அதை யாராவது உறுதிப்படுதவும்)
ஒளிப்படங்களை (வீடீயோ காட்சிகளை 1995 ம் ஆண்டு செப்ரம்பர் மாத ஒளிவீச்சில் பார்க்கலாம்
ஒளிப்படங்களை (வீடீயோ காட்சிகளை 1995 ம் ஆண்டு செப்ரம்பர் மாத ஒளிவீச்சில் பார்க்கலாம்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

