Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வலைப்பூ, நுகர்வும் சில சிந்தனைகளும்
#8
என்னக் கவர்ந்த இன்னொரு வலைப்பதிவாளர்,'பெட்டை'
தூள் கிளப்பிறா,இவ எழுதுறத இங்க போட்டா ,இராவணன் இல்லாட்டி யாழினின்ட கத்திதான் வரும் இங்க போய் படியுங்க

http://peddai.blogspot.com/2004/10/blog-post_18.html

<span style='font-size:25pt;line-height:100%'>காத்திருப்புக்களும் கனடாப் பெட்டையளும் </span>
ஒரு சில பந்திகள் கீழே,

<b>ஆனா? சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தான் என்னவோ எண்டிற மாதிரி ஏன் எங்கள வம்புக் கிழுக்கோணும்?

இந்த ஈரோப் முழுக்கிலும் தம்பட்டம் அடிச்ச வச்சிருக்கிறாங்கள் எங்களப் பற்றி (அதுதான் கனடாப் பெட்டையளப்பற்றி). முந்தியொருக்கா எனக்கு மின்னஞ்சல்ல ஒண்டு வந்தது லண்டன்ல புலிகளத் தடை செய்ததப்பற்றி. “கனடாப் பெட்டையள் -புலிகள் தடை தொடர்பாக” (Canada Girls' Opinion on Tigers' Ban” எண்டொரு அறிவார்ந்த தலைப்போட. ரொம்ப கௌரதையா இருந்திச்சு, கொஞ்சம் பெருமையா இருந்திச்சு. அதோட, கொஞ்சம் அசந்துபோய் என்னடா சொல்லுறாளுகள் எண்டு போய்ப் பாத்தா அங்க புல்லில மூண்டு பெட்டையள் குந்தியண்டு இருக்கினம். அவையளுக்குமேல வட்டம்போட்டு அந்த வட்டத்துக்குள் அவையள் கதைக்கிற மாதிரி வசனம் போட்டிருக்கு. ஒருத்தி சொல்றா ‘என்னடி பசுமதி அரிசியை (<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo-->பான் பண்ணிப்போட்டங்களாம்” எண்டு. எப்பிடி? இதென்ன நக்கல்! (சிரிப்பு வந்ததுதான்).
பெடியள் சிலபேர் ரைம் செலவளிச்சி இப்பிடி எங்கள பரிசுகேடாக்கோணுமா? பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லையெண்டிறத எவ்வளவு அழகா சொல்லுறாங்கள்? அதிலும் சமையலோட முடிச்சுப் போட்டாங்கள் பாருங்க அதுதான் ஆகிலும் ehhhhhh (நற! நற!) !
இப்படியெல்லாம் ஒரு பின்புலத்தில ஒரு மாதிரி வாழ்க்கை போகேக்க (அது தா...னாப் போகும்), என்ர தூரத்து சொந்த அண்ணாப் புள்ளையார் ஒருத்தர் ஈரோப்பில எங்கையோ ஒரு நாட்டில இருந்து என்னோட கதைக்கிறார். அவருக்கு பிடிச்ச சிநேகா, அவருக்க பிடிச்ச மும்தாசு, ... கூடவே “கனடாவில பெட்டையள் அவ்வளவு செரியில்லையாம் என?”. என்னட்டயே அபிப்பிராயம் வேற கேட்டா எனக்குள்ள இருக்கிற பெட்டைக்கு எப்பிடி இருக்கும்? அவள் பாட்டுக்கு நாசமே எண்டு பறையாமக் கிடக்கிறாள். அவளிட்டப்போய் இப்பிடி ஒரு கேள்வி கேட்டா...?
பெடியங்கள் மட்டும் திறமோ எண்டு சுதி ஏறிச்சு அவளுக்கு. அவர் அதுக்குத்தான் “எங்கட தங்கச்சியாக்களப் பற்றித் தெரியும்தானே, ஆனா” எண்டார். இதுக்குப் பேர்தான் பிரிச்சு வைச்சு கதை எடுக்கிறதெண்டிறது. நான் நல்லமெண்டா எனக்கு வாறப் புளுகில அடுத்தவளவையப் பற்றி சொல்லுவன் எண்டு! இந்த தந்திரத்தையெல்லாம் ஒரு புத்திசீவியா உருவாகிக்கொண்டு வாற (தெரியும்தானே) ஒரு பெட்டையிட்ட விட்டா எப்பிடி? “ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல இங்க ஒரு பெட்டையளும் ஒருத்தரையும் துவக்கால சுடையில்ல” எண்டன். அதுக்குப்பிறகு அண்ணை ஒண்டும் பறையேல்ல.
இப்பிடி ஆளாளுக்கு வருவாங்கள். கனடாப் பெட்டையளைப்பற்றி ஒரு “மாதியான” அபிப்பிராயம் (நீங்கள் ஏதும் கேள்விப்பட்டனிங்களா?)-
கனடாப் பெட்டையள் பாலியல் தொழில் செய்யினம் (2000 ஆம் ஆண்டு ஒரு பெரிய பிரச்சினை வந்ததென்னெண்டா ரொறன்ரோவில இருக்கிற ஒரு துவேசப் பத்திரிகை ஒண்டு தமிழீழ.விடுதலைப்.புலிகள் காசு சேக்கிறது தமிழ் பெட்டையள தொழிலுக்கு அமத்தித்தான் எண்டு எழுதிப்போட்டுது. பெட்டையும் பஸ் பிடிச்சு எதிர்ப்புச் கோசம் போடப் போனவதான், ஆனா போய் முடியிறக்கிடல கூட்டம் முடிஞ்சுது (உண்மையா)); கனடாப் பெட்டையள் நீலப் படம் நடிச்சிருக்கினம் (சோபாசக்தியின்ர பகுத்தறிவு பெற்ற நாள் சிறுகதையில பொடிப்பிள்ளையார் ஒராள் போய் கேப்பர், அண்ணை கனடாப் பெட்டையள் நடிச்ச படம் ஏதும் வந்திருக்கோ எண்டு); கனடாப் பெட்டையள் கனபேரோட சுத்திறாளவை. அட! அட! அட! ஒவ்வொரு ஒவ்வொரு நாடுகள்ள இருந்து வாற தொலைஅழைப்புகளுக்குள்ளாலதான் எனக்கு இதெல்லாம் தெரிய வந்ததே (அதென்னமோ சமூக நலன்களத் தவிர வம்பெண்டிற சாமனே பெட்டைக்குப் பிடிக்கிற இல்ல).
-மொத்தத்தில அண்ணைமாற்ற பிரச்சினை எங்கையிருந்தாலும் தங்கட இனப் பெண்ணோட கற்புப் பற்றித்தான். அவையள் தங்கட விருப்பத்துக்கு ஒரு பக்கம் மும்தாசுவையும் தங்கட பொண்டாட்டி சிநேகமா மாரி எண்டும் ஒரு போமிலா வச்சிருப்பினம். ஆனா தங்கட பெண்களோட கற்பப்பற்றி ஒரு பக்கத்தில நடக்கும் ஆராய்ச்சி. இதெல்லாம் பெட்டைக்கு ரென்சன்தாற விசயம் (இப்ப வந்து எனக்கு கார்ட் கொஞ்சம் வீக்).
உண்மையா ஒரு பெட்டை அல்லது ஒரு பெடியன் அல்லது யாரோ அவையன்ர சொந்த வாழ்க்கையை வாழ்றதில (அல்லது வாழாம இருக்கிறதில) யாருக்கு என்ன வந்தது? ஒரு மகாகவிஞன் அவன் தோண்டாட்டி என்ன, தோண்டினா என்ன? ஜே.ஜே.க்கு ஒரு விமர்சகன் வந்து விமர்சிச்சாப் பிறகு என்ன நடக்கும்? கனடாவில பெட்டையள் எப்பிடி இருந்தா உங்களுக்கு என்ன?
(கேட்டாளே ஒரு கேள்வி! போட்டாளே ஒரு போடு!)</b>
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 09-21-2005, 06:45 PM
[No subject] - by vasisutha - 09-21-2005, 06:46 PM
[No subject] - by sinnakuddy - 09-21-2005, 08:17 PM
[No subject] - by kuruvikal - 09-23-2005, 04:16 AM
[No subject] - by narathar - 09-23-2005, 05:21 AM
[No subject] - by nallavan - 09-23-2005, 06:45 AM
[No subject] - by kuruvikal - 09-23-2005, 06:56 AM
[No subject] - by narathar - 09-23-2005, 10:41 AM
[No subject] - by KULAKADDAN - 09-23-2005, 12:12 PM
[No subject] - by KULAKADDAN - 09-23-2005, 12:14 PM
[No subject] - by narathar - 09-23-2005, 01:12 PM
[No subject] - by vasisutha - 09-23-2005, 02:34 PM
[No subject] - by KULAKADDAN - 09-24-2005, 09:10 PM
[No subject] - by sinnakuddy - 09-24-2005, 09:38 PM
[No subject] - by kurukaalapoovan - 09-24-2005, 11:25 PM
[No subject] - by narathar - 09-25-2005, 07:53 AM
[No subject] - by narathar - 09-25-2005, 07:56 AM
[No subject] - by kuruvikal - 09-25-2005, 08:31 AM
[No subject] - by tamilini - 09-25-2005, 09:07 AM
[No subject] - by narathar - 09-25-2005, 12:34 PM
[No subject] - by kuruvikal - 09-25-2005, 05:26 PM
[No subject] - by narathar - 09-25-2005, 06:27 PM
[No subject] - by kuruvikal - 09-25-2005, 08:14 PM
[No subject] - by narathar - 09-26-2005, 08:07 AM
[No subject] - by vasisutha - 09-26-2005, 07:09 PM
[No subject] - by Muthukumaran - 09-28-2005, 02:10 PM
[No subject] - by Mathan - 09-28-2005, 05:04 PM
[No subject] - by narathar - 09-28-2005, 07:14 PM
[No subject] - by kuruvikal - 09-28-2005, 07:39 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 06:19 PM
[No subject] - by narathar - 09-29-2005, 06:35 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 06:46 PM
[No subject] - by kuruvikal - 09-29-2005, 06:56 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 07:52 PM
[No subject] - by kuruvikal - 09-29-2005, 08:32 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 02:01 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 02:09 PM
[No subject] - by tamilini - 10-21-2005, 03:49 PM
[No subject] - by Eelavan - 10-22-2005, 01:14 AM
[No subject] - by இளைஞன் - 10-22-2005, 05:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)