09-22-2005, 04:58 PM
உழைப்புத் துன்பம்
காலைப் போதனைக் கனலால் பொசுக்கிச்
சோலையும் கடந்து கசுடவந்த வெய்யில்
விரிபுனற் குளத்தையும் வெதுப்பிய தெண்ணினேன்
எண்ணும் போதென் கண்ணின் எதிரில்
வியர்வையும் அயர்வுமாய்ப் பண்ணை யாட்கள்
வந்து நின்று வணக்கம் செய்தனார்.
ஐயகோ நெஞ்சமே இந்த ஆட்கள்
தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினார்
காலைப் போதனைக் கனலால் பொசுக்கிச்
சோலையும் கடந்து கசுடவந்த வெய்யில்
விரிபுனற் குளத்தையும் வெதுப்பிய தெண்ணினேன்
எண்ணும் போதென் கண்ணின் எதிரில்
வியர்வையும் அயர்வுமாய்ப் பண்ணை யாட்கள்
வந்து நின்று வணக்கம் செய்தனார்.
ஐயகோ நெஞ்சமே இந்த ஆட்கள்
தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினார்

