09-21-2005, 10:12 PM
Quote:பிரீத்தி நீர் தானே இங்கே மதம்,மதம் எண்டு எழுதித் திரியிறீர் ,கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுமென்.ஏன் தனிப்பட்ட தாக்குதல்களிலேயே காலத்தைச் செலவழிக்கிறீர்.அப்படி உயரிய இந்துமதத்தைப் பற்றித்தானே நீர் பிராமணிகளின் மதம் எண்டு இவ்வளவு நாளும் வாதுட்டனீர்,இப்ப என்ன உயரிய இந்து மதம் எண்டு எழுதுறீர், நான் நினச்சன் நீர் எழுதினதுகளில இருந்து இந்து மதமும், நீர் எழுதுற சைவ மதமும் வேற எண்டு.எதோ மாயோன் ,சேயொன் எண்டு கடவுள் பேரெல்லாம் எழுதிணீர்,இப்ப பார்ப்பனீரின் மதம் தான் சிறந்து எண்டுறீர்.உமக்குள்ளயே தெளிவில்லை , நீர் முதலில ஒரு மூலயில இருந்து நீர் என்ன சொல்ல வாறீர் எண்டத் யோசிச்சுப் போட்டு எழுதும்.மேலும் நான் இந்துமதமோ,சைவ மத்மோ பற்றி மட்டும் எழுதேல்ல,மற்றதப் பற்றியும் எழுதி உள்ளேன்.இங்கே இசுலாமியச் சகோதரர்கள் எவரும் எழுதுவதாகத் தெரியவில்லை,ஆகவே பதில் அளிக்க ஒருவரும் இல்லாத இடத்து அது பற்றி எழுதுவது வெறும் பிரச்சாரமாகவே இருக்கும்.ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இரண்டு பக்கமும் வேணும்.
[b]நாரதர்! நான் பார்ப்பனீயத்தையும், தமிழையெதிர்க்கும், தமிழைத் தமிழன் கட்டிய கோயிலுக்குள்ளேயே தமிழை அனுமதிக்க மறுக்கும் பார்ப்பனர்களையும், தமிழனின் அறிவையும், ஆற்றலையும் உலகிற்குப் பறை சாற்றும் பழம் பெரும் கோயில்களைக் கட்டிய எங்களின் தமிழ் முன்னோர்களைப் பழித்து ஆரியரின் தொழில் நுட்பம் தான் அந்தக் கோயில்களைக் கட்டியது, தமிழர் வெறும் அடிமைகள் தான் என்று ஆணித்தரமாகச் சொல்லித் தமிழனின் வரலாற்றைத் திரிக்கும், தமிழரின் பெருமையை இகழும் பார்ப்பனர்களைத் தான் வெறுக்கிறேனேயல்லாமல் இந்து மதத்தையல்ல.
நான் ஒரு போதும் பிராமணர்கள் மட்டும் தான் இந்து மதத்தின் முழு உரிமையாளர்கள் என்று கருதியதில்லை. நான் என்னை ஒரு இந்து என்று சொல்வதை விட ஒரு தமிழ்ச்சைவன் என்று சொல்வது தான் பொருந்தும் என்று நினைக்கிறேன், இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் சைவ சமயம் இந்து மதத்தின் ஒரு அங்கமாகத் தான் கருதப்படுவதால் எழுதும் போது இந்து என்று எழுதுகிறேன். உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் எங்கள் முன்னோர்கள் கூட சைவ சமயத்தைத் தான் கடைப்பிடித்தாலும், அவர்கள் கல்லூரிகளைக் கட்டி , இந்துக்கல்லூரி என்று தான் பெயரிட்டார்கள் அல்லவா? அது போலத் தான்.
யாராவது இந்துக்களைப் பழித்தாலோ, இகழ்ந்து பேசினாலோ அது சைவத்தையும் சேர்த்துத் தான். மாயோன், சேயோன் என்று பழந்தமிழர்களின் கடவுளரின் பெயரைக் குறித்தது, பார்ப்பனீயம் எப்படித் தமிழரின் சைவத்தையும் , வேதக்கடவுளரையும் இணத்தது என்பதைக் காட்டுவதற்காக. அதற்காக சங்க காலத்துக்குத் திரும்பிப் போய், சங்ககாலச் சமய நெறியைக் கொண்டு வருவோமென்பதல்ல என்னுடைய கருத்து.
இந்துசமயமும் அதாவது அதன் sub group சைவமும் தமிழும் பிரிக்க முடியாதனவையாகி விட்டன. அது பெரும்பாலான ஈழத் தமிழரின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. இந்து மதத்தைத் தாக்கும் பலரும், அது பெரும்பாலான தமிழரின் மனதைப் புண்படுத்தும் என்பதைச் சிந்திப்பதில்லை. உங்களுடைய மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் , நீங்களோ அல்லது இங்கு யாராவது கிறிஸ்தவ மதத்தை, இந்து மதத்தைத் தாக்கிய அளவுக்குத் தாக்கி எழுதுகிறார்களா?
PS: [size=9]இந்த இணையத்தளத்தில் என்னை யார் எப்படித் திட்டினாலும், எனக்கெதிரான கருத்துக்கள் எதுவும் தணிக்கை செய்யப் படுவதில்லை. ஆனால் அதற்கு நான் பதில் எழுதினால் முற்று முழுதாகக் கத்தரித்து விடுவது மட்டுமல்ல, தணிக்கை செய்ததாகவோ, வெட்டப்பட்டதாகக்
கூடச் சொல்வதில்லை. ஏன் இந்தப் பாரபட்சம், தனி மனித துவேசமா?

