Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வலைப்பூ, நுகர்வும் சில சிந்தனைகளும்
#1
ஒரு வருடத்திற் முன் உருப்பெற்ற தமிழ் மணத்தில் மலர்ந்த வலைப் பூக்கள் பற்றி கள உறுப்பினர்கள் என்ன நினைக்கிறீங்க.இது தகவல் இணய யுகம் தந்த புதிய இலக்கிய வடிவமா அல்லது கணணி முன் நேரத்தைச் செலவிடும் , தமக்கென ஒரு அடயாளத்தைத் தேடும் சுய புராணிகளின் புலம்பலா, ம் ம்ம் என்கின்ற வலைப் பதிவை இலங்கையில் இருந்து எழுதும் மு.மயூரன்......


தமிழ் வலைப்பதிவுகள், சிற்றிதழ் மேட்டிமையையும், வணிக இதழ் அதிகாரத்தையும் உடைத்துச் சாதித்தது இதனைத்தான்.
அதாவது,

ஒருவரின் கருத்து, எந்த விதமான வடிகட்டலுக்கும், தேர்வுக்கும், தரப்படுத்தலுக்கும் நேரத்தாமதத்துக்கு ஆளாகாமல் பொது வாசிப்புக்கு காட்சிப்படுத்தப்படுவது.

எல்லாத்தரப்பு வாசர்களுக்கு முன்னாலும், எல்லாத்தரதிலுள்ள எழுத்துக்களும் ஒரேவரிசையில் காட்சிப்படுத்தப்படும் பெரும் சனநாயக மாற்றத்தினை தமிழ்மணம் சாதித்தது.


என்று கூறுகிறார்.இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதையும்,மேலும் வலைப் பதிவை இடும் ஈழவர்களையும் இத் தலைப்பில் மற்றவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் விமர்சனமாகவும் முன் வையுங்களே......

மயூரனின் முழு பதிவும் இங்கே பதியப்படுகிறது,ஆள் மற்றவை எழுதப் பின் நிக்கிற விசயங்களையும் எழுதுறார் போய் இங்க படித்துப் பாருங்க......


http://mauran.blogspot.com/2005/08/blog-post_27.html


<span style='color:red'>அச்சிதழ்களின் அதிகாரம் -வலைப்பதிவுகளின் வருகை



[தமிழ் மணம் தனது முதல் அகவையை கடந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் வலைப்பதிவுகளின் வருகை , அதன் வகிபாகம், காலமாற்றத்தில், தமிழ் எழுத்துப்படைப்புக்களின் வரலாற்றுப்போக்கில் எப்படி இருக்கிறது என்பது பற்றிய சில குறிப்புக்களை இப்பதிவு முன்வைக்கிறது. விரிவான ஆய்வுகளுக்கு இவை பயன்படலாம்]


அதிகாரங்களுக்கெதிரான இடையறாத போராட்டமாக வரலாறு நகர்கிறது.

தமிழ் கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் வரலாறும் இவ்வாறுதான்.

போதாமைகளும், அதிகாரங்களும் அதற்கான மாற்றுக்களும் கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் படிநிலை வளர்ச்சிப்போக்கை தீர்மானித்தன.
எழுதத்தொடங்கியதும், காகிதத்தில் அச்சிடத்தொடங்கியமையும் எல்லாமே இவ்வாறான போகக்கில் தான் அறிமுகமாகின.

கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் தொழிநுட்ப சாத்தியங்கள், அவ்வூடகத்தின் உள்ளடக்க வடிவத்தில் பலமான தாக்கத்தினை ஏற்படுத்தியது.

நல்ல உதாரணம் எழுத்தறியாக்காலத்து செய்யுள்கள். அச்சறியாக்காலத்து காவியங்கள்.
அச்சோடு வந்த உரைநடை இலக்கியம்.
பேசாப்படங்கள்
வானொலி நாடகம்

கருத்து தெரிவிப்பு பல வடிவங்களையும் எட்டி விட்டதால், எழுத்து ஊடகங்கள் என்ற தனிக்கிளை பற்றியே பேசவேண்டியிருக்கிறது.

குறித்த கால இடைவெளியில் வெளிவரும் அச்சு வெளியீடுகள் அறிமுகமானதோடு இதழியல் ஆரம்பிக்கிறது.

தமிழில் இதழியலை ஆரம்பகாலத்தில் உள்வாங்கிக்கொண்டவர்கள் பெருந் தனவந்தர்களே. ஏனெனில் அவர்கள்தான் அச்சுச்சாதனங்களை, அந்த உற்பத்திக்கருவிகளை கொள்வனவு செய்யக்கூடியவர்களாய் இருந்தார்கள்.

ஆனால், அக்காலத்தில் அச்சுக்கு நூல்களை தயார்படுத்தக்கூடியவர்களாக இருந்தவர்கள், "பெரும் படிப்பாளிகளே"
இந்த படிப்பாளிகள், தத்தமது கருத்துக்களை பரப்பவும், பிடித்தவற்றை அச்சேற்றவும் மிகுந்த ஆர்வத்துடன் இயங்கியமையால், அச்சுத்துறை வர்க்கச்சாயலை விடவும், படிப்பாளிகளின் கருத்தியல் சாயலை கொண்டிருந்தது.

நாவலர்
திருக்கோணமலை த கனகசுந்தரம்பிள்ளை
வ.வே.சு ஐயர்
அகிலேசபிள்ளை
கிறிஸ்தவ வெளியீடுகள்
பாரதியார்

எழுத்தறிவும், எழுதும் பழக்கமும் மேன்மேலும் பரவலானதோடு,
சாதாரண மக்களால், இந்த அச்சிதழை ஆளும் படிப்பாளிகளது அதிகாரத்தை உணர முடிந்தது.

அச்சியந்திர சாலைகளின் உரிமையாளர்கள், இத்தகைய பரவலான மக்கள் கூட்டத்துக்கான வெளியீடுகளை செய்ய ஆரம்பித்தனர்.
படிப்பாளிகளின் அதிகாரம் இங்கே மாற்றீட்டுக்குள்ளானது.
அச்சு வெளியீடுகளின் நோக்கம் இயந்திர சாலைகளின் முதலாளிகளது வர்க்கச்சாயலை பெற ஆரம்பித்தது,

வெகுமக்கள் பரப்பில் எது அதிகம் விலைபோகுமோ, அதுவே அச்சியந்திரங்கள் உமிழ அனுமதிக்கப்பட்ட வெளியீடுகளாக பெரும்பாலும் இருந்தது.


இந்த மாற்றம், பிரபல இதழ்களின் வருகைக்கு, பின்னர் வணிக மயபடுத்தப்பட்ட இதழ்களின் வருகைக்கு காரணமானது.

இது புதிய அதிகாரத்தை வெளியீட்டுத்துறையில் ஏற்படுத்தியது.

வணிக இதழ்களின் முதலாளிகள், விலைபோகாச்சரக்குகளை, விளிம்புநிலை கருத்துக்களை, தீவிரமான ஆக்கங்களை நிராகரிக்கத்தொடங்கினர்.

இவ்வணிக இதழ்களின் அதிகாரத்தை உடைத்துக்கொண்டு சிற்றிதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. அச்சியந்திரங்கள் பரவலானமை, அச்சுச்செலவில் ஏற்பட குறைவுகள் இதற்கு உதவியாயிற்று.

மேசை வெளியீடுகளை சாத்தியப்படுத்திய கணிப்பொறியின் வருகையோடு இதழியல் அதிகமாக பரவலானது.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு சிறுதொகை வாசகர்களை மட்டுமே இலக்காக கொண்டு, குறித்த கருத்துப்போக்கு தொடர்பான உரையாடல்களை மட்டுமே செய்துகொண்டு ஏராளம் சிற்றிதழ்கள் வரவாரம்பித்தன.

வணிக இதழ்கள், மேம்போக்கு ரக பிரபலத்தன்மையையும், நாயக வழிபாட்டையும், மேலோட்டமான எழுத்துக்களையும் வைத்துக்கொண்டு பகட்டாய், ஒளி வெள்ளமாய் வெளிவந்து அத்தகைய மனநிலையை பலதளங்களிலும் கட்டமைக்க,
இதற்கு மாற்றாய் வந்த சிற்றிதழ்கள், ஒரு வித மேட்டிமைத்தனத்தையும், இன்னொரு விதமான பிரபல வழிபாட்டையும், உருவாக்கியது.

இந்த மேட்டிமைத்தனத்தின், அறிவு அதிகாரத்தின், அறிவுச்சாதி (உயர்சாதி?) ஆதிக்கத்தின் பிரபலத்தன்மை, தன்னை ஒரு trend ஆக நிலைப்படுத்தி, புதுவித குழுமவாதத்தையும், "பிரபலசிற்றிதழ்" போக்கையும் கொண்டுவந்து சேர்த்தது.
சிற்றிதழ்களும், நவகாலனிய, பின் முதலாளிய அமைப்புக்களுக்கு வளைந்து கொடுத்து காலச்சுவடு போன்ற, பிரபலத்தை, வணிகத்தை மையமாகக்கொண்ட பிரபலசிற்றிதழ்களாக வடிவெடுத்தது.

குழுமவாதத்தின் பயனாக (கருத்து வேறுபாடு என்ற மாயத்தோற்றத்தோடு) இவ்வாறான "பிரபல" சிற்றிதழ்கள் உடைந்து பெருகின.
இவை பிரபல அறிவாளிகளது பெயர்களை, அவர்களது அந்தரங்கங்கள் பற்றிய அலசல்களை, அவர்களது குடுமிப்பிடி சண்டைகளை பெரிது படுத்தி அதுவே சீரிய இலக்கிய சூழல் என்ற மாயத்தோற்றத்தினை உண்டு பண்ணி, பணத்தையும், பிரபலத்தைய்ம் உழைத்துக்கொண்டன.

மூன்றாவது மனிதன் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு,
இத்தகைய இதழ்களை படிப்பவர்கள் சந்தித்துக்கொண்டால், மு.பொ வுக்கும் சிவசேகரத்துக்குமான சண்டைற்றி அலசுவர்.
இவ்விரு எழுத்தாளருக்கு இடையான கருத்து மோதலை மூன்றாவது மனிதன் தனது பரபரப்புக்கு பயன்படுத்தியது.

சீரிய எழுத்துச்சூழலில் சிற்றிதழ்கள் இத்தகைய பரபரப்பை பரப்பி, தமது "நாயகத்" தன்மையை நிலை நிறுத்திக்கொண்டன. பெயர்களை வைத்து வியபாரம் பண்ணின.

இலக்கிய சந்திப்புக்களில் இத்தகைய சீரிய இலக்கிய "நாயகர்" களின் பெயரை எடுத்து விளாசுபவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.

இந்நாயகர்களின் பெயர்களை மனப்பாடம்பண்ணி அதிகமதிகம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளும் ஆர்வக்கோளாறுகளை அனைவருமே அடிக்கடி சந்திப்பீர்கள்.
இது, காலச்சுவடு போன்ற போக்குகளின் விளைவு.

இது நடப்பிலுள்ள எழுத்துலகத்தை ஆட்டிப்படைக்கும் புதிய அதிகாரம்.
அதிகார வர்க்கம்.

ஒரு பொடிச்சி என்ற வலைப்பதிவர் தனது வலைப்பதிவை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்-

"

<b>ஒரு Columnist (பத்தி எழுத்தாளினி) உருவாகுகிறார்! பராக்! பராக்! எல்லாவிடங்களிலும் பார்த்தால் அரசியல். இலக்கிய அரசியல். அவன் இவன், எக்ஸில் உயிர்நிழல், பின்நவீனத்துவம், செயமோகன், அ.மார்க்கஸ்சு, விடியல், அடையாளம், ரவிக்குமார், காலச்சுவடு உயிர்மை குழப்பமோ குழப்பம்! என்னதான் செய்யிறது? பதிப்பு வசதி இருக்கெண்டிறாங்கள், பதியுங்கோவன் உங்கட எழுத்தையெண்டிறாங்கள். பாவி மக்கள் ஒன்று புரிஞ்சுக்கிறாங்கள் இல்ல, அதுகளுக்கெல்லாம் ஒரு சின்னப் பெட்டை காசுக்கு எங்க போவாள்? இதுகளை எல்லாம் எவங் யோசிக்கிறாங்? 2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள.... ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாதுசிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்க ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல."</b>புதிதாய் ஏற்பட்ட இவ்வதிகாரத்தையும், அதற்கெதிரான ஆயுதத்தையும், அதிகாரத்துடனான மோதலையும், உடைப்பையும் இதவிட இயல்பாய் விளக்க முடியாது.


ஆங்கிலத்தில் வலைப்பதிவுகள் தோன்றியமைக்கு பல காரணங்கள் கற்பிகப்படுகின்றன.

ஆனால் தமிழில் வலைப்பதிவுகளின் (blogs) அதிவேக பரவலுக்கு இந்த அதிகார உடைப்புத்தான் காரணம்.
இவ்வுடைப்பினை செய்வதில் வலைத்தளங்கள்(web sites) தோற்றுப்போனது.

எல்லா அதிகார உடைப்புக்களும் புதிய தொழிநுட்ப போக்கினை கையிலெடுத்துக்கொள்ளும்.
நீராவி எந்திரங்களை முதலாளியப்புரட்சி பயன்படுத்தியதைப்போல.
இணையத்தின் பாய்ச்சலை, தளையறு மென்பொருள் புரட்சி பயன்படுத்திக்கொண்டதைப்போல.

இணையத்தையும், அதன் தெரிவுச்சுதந்திரத்தையும், முடிவுறா கொள்ளளவையும், வேகத்தையும், rss feed எனப்படும் செய்தியோடை தொழிநுட்பத்தையும் தமிழ் பெற்றுக்கொண்ட யுனிகோட் குறிமுறை எனும் வரப்பிரசாதத்தையும் இந்த வலைபதிவுப்புரட்சி கையிலெடுத்துக்கொண்டது.

தமிழ் மணம் போன்ற திரட்டி ஒன்றின் வருகையோடு இவ்வதிகார உடைப்பு மேலும் கூர்மையடைகின்றது.

தமிழ் வலைப்பதிவுகள், சிற்றிதழ் மேட்டிமையையும், வணிக இதழ் அதிகாரத்தையும் உடைத்துச் சாதித்தது இதனைத்தான்.
அதாவது,

ஒருவரின் கருத்து, எந்த விதமான வடிகட்டலுக்கும், தேர்வுக்கும், தரப்படுத்தலுக்கும் நேரத்தாமதத்துக்கு ஆளாகாமல் பொது வாசிப்புக்கு காட்சிப்படுத்தப்படுவது.

எல்லாத்தரப்பு வாசர்களுக்கு முன்னாலும், எல்லாத்தரதிலுள்ள எழுத்துக்களும் ஒரேவரிசையில் காட்சிப்படுத்தப்படும் பெரும் சனநாயக மாற்றத்தினை தமிழ்மணம் சாதித்தது.

இதழ்களது, இதழாசிரியர்களது தேர்வுகள் இல்லை.
பிரபல பெயர்களின் ஆதிக்கம் குறைவு.

தலைப்புக்களும், உள்ளடக்கமுமே நாம் ஒரு ஆக்கத்தை படிக்கச்சொடுக்குவதற்கு காரணமாயிற்று.

ஒவ்வொரு ஆளுமையும், ஒவ்வொரு தனிமனித தேடலும் ரசனையும், எல்லாத்தரப்பு கருத்துக்களும்,
இன்னொரு மனித இடையீடு இன்றி வாசகருக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.
இது எல்லாவிதமான மேட்டிமைத்தனங்களையும் குழுவாதங்களையும் உடைக்கிறது.

எழுத்தின் தரம், என்ற மாயத்தோற்றம் உடைந்து தகவலும், செய்திகளின் உடனடித்தன்மையும், முக்கியத்துவம் பெறுகிறது.
எழுத்தின் தரம், தேடலின் செறிவு தெரிவுக்கான ஒரு கூறாக மாத்திரமே மாறிப்போகிறது.

முகுந்த் fire fox இன் அண்மைய தமிழ் படுத்தலைப்பற்றி எழுதினால், அங்கே எனக்கு தகவல்களே தேவை.
இன்னொருவருக்கு தேவைப்படாமல் போகலாம்.
ஆனால் முகுந்த்து நான் ஒரு வாசகன் அதிகமாக கிடைத்துள்ளேன்.

மைக்ரோசொப்டின் மிகப்பிந்திய நேர்மையீன நகர்வைப்பற்றிய வெங்கட்டின் பதிவை நான் ஆவலோடு காத்திருப்பேன். சுந்தர ராமசாமிக்கு அது தேவையற்றதாக இருக்கலாம்.

குர் ஆனின் ஒரு சுலோகத்துக்கு இப்படி ஒரு அர்த்தப்படுத்தலும் இருக்கிறதா என்று ஆர்வத்தோடு நான் நல்லடியாரைப்படிப்பேன்.
ஆனால் மானுஷ்யபுத்திரன் எனும் அப்துல் ஹமீது தனது உயிர்மை எனு பிரபல இதழில் அதை போடமாட்டார். அவர் அதை கடந்துவிட்டிருப்பார். நான் எதை வாசிக்கவேண்டும் எனும் அதிகாரத்தை கையிலெடுத்துவிட்டிருப்பார்.

ஷ்ரேயா அக்கா எழுதும் வாழ்வின் அன்றாட சம்பவங்களை ஆசையாய் படிக்கும் வாய்ப்பு காலச்சுவட்டில் எனக்கு கிட்டப்போவதில்லை.

சிற்றிதழ்கள், பல்வேறு போதாமைகளை கொண்டிருக்கிறது.
அச்சுச்செலவு. மட்டுப்பாடான பக்க எண்ணிக்கை போன்றன தாண்ட முடியாத சிக்கல்க்ளாகிப்போகின்றன.
குறித்த வடிவ எழுத்துக்களே, குறித்த கருத்து நிலைகள் சார் எழுத்துக்களே மறுபடி மறுபடி வருகின்றன.
வடிவ உடைப்பு என்பது அங்கே குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுவதுபோலத்தான்.
("கவிதையில்" உடைப்பு, "சிறுகதையில்" புதுமை தான் நடக்கிறது)



(G)கூகிள் ட்டோக் பற்றி நான் எழுதி அனுப்பினால், இலங்கையில் தயாராகும் லினக்ஸ் வழங்கல் பற்றி அறிமுகக்கட்டுரை அனுப்பினால் எந்த சிற்றிதழும் அதை மினக்கட்டு அச்சடிக்க வேண்டும் என்ற அவசியமிலை.

ஆனால் அந்த தகவல்கள் தேவைப்படும் வாசகர்கள் இருக்கின்றனர்.

எல்லோருடைய எல்லா எழுத்துக்களும் எல்லோருக்கும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
இடையில் நின்று தடுக்கவும் தேர்வுசெய்யவும் ஆளில்லை.
ஒருசெக்கன் நேரம் கூட பிந்துவதற்கு வாய்ப்பில்லை.( சரீங்க ஒரு மணித்தியாலம்...! இப்பசரியா?)
ஆக்கத்தின் அளவுபற்றி கணக்கில்லை.
வழங்கப்பட்ட தொடுப்புக்களூடாக மேலும் விரிகிறது தேடல்
பல்லூடக வழங்குகை, தெரிவிப்பு சாத்தியங்களை அதிகரிக்கிறது.


எல்லாவற்றுக்கும் மேலாக வாசகர்களின் உடனடியான துலங்கல் பின்னூட்டமாய், நேரப்பிந்துகை ஏதுமற்று எழுத்தாளரை வந்தடைகிறது.
கெட்ட வார்த்தையாகக்கூட.

வாசகர் எழுத்தாளரை தனிப்பட உடனடியாக தொடர்புகொள்கிறார்.
எழுத்தாளர் வாசகரோடு இணையத்தில் மடலாடுகிறார்.
அணுக முடியா எழுத்தாள "நாயகர்" கள் மறைந்துபோய், வாசக- படைப்பாளி உறவு மேலும் நெருக்கமாகிறது.


எழுத்தாளரின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு வாசக ஊடாட்டம் அதிகரிக்கிறது.
இது இன்னுமொரு உடைப்பு.

வரலாற்றுப்போக்கில் இடைமாறுகட்டம் தெளிவாய் தெரிகிறது.
வேகம் குறைந்ததாய், பழைய அதிகாரமாய் இதழ்கள் பின்னுக்குப்போகின்றன.
அதிவேக தொழிநுட்பத்தோடு எழுத்துக்கள் கைகோர்த்து தளைகளை அறுக்கின்றன.

கூடவே, புதுத்தளையறுப்பு, வலைப்பதிவுத்தலைமுறை, தனது அதிகாரங்களை தன்னோடு உருவாக்கி, வளர்க்கிறது.
தனது உடைவுக்காக.

அடுத பதிவில்...</span>
Reply


Messages In This Thread
வலைப்பூ, நுகர்வும் சில சிந்தனைகளும் - by narathar - 09-21-2005, 06:32 PM
[No subject] - by narathar - 09-21-2005, 06:45 PM
[No subject] - by vasisutha - 09-21-2005, 06:46 PM
[No subject] - by sinnakuddy - 09-21-2005, 08:17 PM
[No subject] - by kuruvikal - 09-23-2005, 04:16 AM
[No subject] - by narathar - 09-23-2005, 05:21 AM
[No subject] - by nallavan - 09-23-2005, 06:45 AM
[No subject] - by kuruvikal - 09-23-2005, 06:56 AM
[No subject] - by narathar - 09-23-2005, 10:41 AM
[No subject] - by KULAKADDAN - 09-23-2005, 12:12 PM
[No subject] - by KULAKADDAN - 09-23-2005, 12:14 PM
[No subject] - by narathar - 09-23-2005, 01:12 PM
[No subject] - by vasisutha - 09-23-2005, 02:34 PM
[No subject] - by KULAKADDAN - 09-24-2005, 09:10 PM
[No subject] - by sinnakuddy - 09-24-2005, 09:38 PM
[No subject] - by kurukaalapoovan - 09-24-2005, 11:25 PM
[No subject] - by narathar - 09-25-2005, 07:53 AM
[No subject] - by narathar - 09-25-2005, 07:56 AM
[No subject] - by kuruvikal - 09-25-2005, 08:31 AM
[No subject] - by tamilini - 09-25-2005, 09:07 AM
[No subject] - by narathar - 09-25-2005, 12:34 PM
[No subject] - by kuruvikal - 09-25-2005, 05:26 PM
[No subject] - by narathar - 09-25-2005, 06:27 PM
[No subject] - by kuruvikal - 09-25-2005, 08:14 PM
[No subject] - by narathar - 09-26-2005, 08:07 AM
[No subject] - by vasisutha - 09-26-2005, 07:09 PM
[No subject] - by Muthukumaran - 09-28-2005, 02:10 PM
[No subject] - by Mathan - 09-28-2005, 05:04 PM
[No subject] - by narathar - 09-28-2005, 07:14 PM
[No subject] - by kuruvikal - 09-28-2005, 07:39 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 06:19 PM
[No subject] - by narathar - 09-29-2005, 06:35 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 06:46 PM
[No subject] - by kuruvikal - 09-29-2005, 06:56 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 07:52 PM
[No subject] - by kuruvikal - 09-29-2005, 08:32 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 02:01 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 02:09 PM
[No subject] - by tamilini - 10-21-2005, 03:49 PM
[No subject] - by Eelavan - 10-22-2005, 01:14 AM
[No subject] - by இளைஞன் - 10-22-2005, 05:06 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)