09-21-2005, 09:18 AM
சிறீலங்கா அரசாங்கமோ இல்லை சிங்கள இனவாதிகளோ என்றுமே சிறுவர்களை மனிதர்களாக கருதியது இல்லை. அது தமிழ் சிறுவர்கள் ஆயினும் சரி சிங்கள சிறுவர்களாயினும் சரி. சிறுவர்களை இந்த சிங்கள மேலாண்மை வாதிகள் எப்போதும் தங்களுக்கு பயன் படும் ஒரு சடப்பொருள் போன்றே பாவித்து வந்திருக்கின்றனர். தமிழ் சிறார்கள் பலர் பல படை எடுப்புகளாலும்இ குண்டுவீச்சு விமானங்களாலும் கொன்று குவிக்கப் பட்டு இருக்கின்றார்கள். இதனையும் விட பல தமிழ் சிறுமிகள் சிங்கள படையினரால் பாலியல் வல்லுற்வுக்கும் உட்படுத்தப் பட்டுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சிங்களச் சிறுமிகளும் பல மலையக தமிழ் சிறுவர்களும் பல மேலாண்மை போக்குடையவர்களால் இலங்கையில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு பின்னர் பாலியல் வல்லுறவிற்கும் ஈடுபடுத்தப் படுகின்றார்கள் என்பதனை நாம் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கேள்விப் படுகின்றோம். எனவே உலக நாடுகள் இவற்றினை கண்டும் காணாமலும் இனிமேலும் மௌனமாக இருந்துவிட முடியாது. இலங்கை அரசாங்கத்தினை கண்டிப்பதோடு. இலங்கையில் சிறுவர்களுக்கு பாதுகாப்பினையும் வழங்குவது அவசியம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

