09-21-2005, 08:51 AM
பிரீத்தி நீர் தானே இங்கே மதம்,மதம் எண்டு எழுதித் திரியிறீர் ,கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுமென்.ஏன் தனிப்பட்ட தாக்குதல்களிலேயே காலத்தைச் செலவழிக்கிறீர்.அப்படி உயரிய இந்துமதத்தைப் பற்றித்தானே நீர் பிராமணிகளின் மதம் எண்டு இவ்வளவு நாளும் வாதுட்டனீர்,இப்ப என்ன உயரிய இந்து மதம் எண்டு எழுதுறீர், நான் நினச்சன் நீர் எழுதினதுகளில இருந்து இந்து மதமும், நீர் எழுதுற சைவ மதமும் வேற எண்டு.எதோ மாயோன் ,சேயொன் எண்டு கடவுள் பேரெல்லாம் எழுதிணீர்,இப்ப பார்ப்பனீரின் மதம் தான் சிறந்து எண்டுறீர்.உமக்குள்ளயே தெளிவில்லை , நீர் முதலில ஒரு மூலயில இருந்து நீர் என்ன சொல்ல வாறீர் எண்டத் யோசிச்சுப் போட்டு எழுதும்.மேலும் நான் இந்துமதமோ,சைவ மத்மோ பற்றி மட்டும் எழுதேல்ல,மற்றதப் பற்றியும் எழுதி உள்ளேன்.இங்கே இசுலாமியச் சகோதரர்கள் எவரும் எழுதுவதாகத் தெரியவில்லை,ஆகவே பதில் அளிக்க ஒருவரும் இல்லாத இடத்து அது பற்றி எழுதுவது வெறும் பிரச்சாரமாகவே இருக்கும்.ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இரண்டு பக்கமும் வேணும்.

