Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாலியல் உறவுக்கான வயதெல்லை
#38
பாலியல் உறவுக்கான இணக்க உரிமை வயதெல்லை 13 ஆக குறைக்கப்பட மாட்டாதென அறிவிப்பு

சட்ட திருத்தம் எதுவுமில்லையென நீதியமைச்சு நிராகரிப்பு

பாலியல் உறவிற்கான இணக்க உரிமை வயதை 16 இலிருந்து 13 ஆக குறைக்கும் சட்டத் திருத்தம் எதுவும் கொண்டுவரப்பட மாட்டாது என நீதி மற்றும் நீதித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

பெண்களின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயதை 16 இலிருந்து 13 ஆக குறைக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நிமால் சிறிபால டி சில்வா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையடுத்து நீதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பாலியல் வல்லுறவிற்கான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சிகள்நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதியமைச்சு பாலியல் வல்லுறவிற்கான நியதி சட்ட வயதை குறைப்பதற்கான முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றது.

1995 இலிருந்து நீதியமைச்சுக்கு பல அறிக்கைகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான சம்பவங்களில் குற்றம் சாட்டப்படும் பையன் சிறு வயதுடையவனாகவும் சிறுமியின் விருப்பத்துடனேயே இவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும் குற்றம் சாட்டப்பட்ட பையன் மீதான விசாரணைகள் நீதியின் நோக்கங்களை நிறைவேற்றாதவையாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகள் நீதிக்கு புறம்பானவை எனக் கருதப்படுவதால் உத்தியோகபூர்வமற்ற சில நடவடிக்கைகளின் மூலம் குற்றவாளிக்கு தண்டனை தவிர்க்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் எப்போதும் நியாயபூர்வமானவை அல்ல என்பதுடன் சம்பந்தப்பட்ட தரப்பின் நலன்களையும் பூர்த்தி செய்வதில்லை.

18 வயதிற்கு உட்பட்ட குற்றவாளிகளுக்கு குறைந்தளவு தண்டனையை வழங்கலாம் என குற்றவியல் கோவையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பெண்ணின் சம்மதத்துடனேயே இவ்வாறான செயல்கள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களிலும் கூட பையனே குற்றவாளியாக கருதப்படுகின்றான். பெண் குழந்தையின் நலனைப் போல் ஆண் குழந்தையின் நலனும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

பருவம் எய்தாத வயதில் சம்மதத்துடன் நடைபெறும் பாலியல் செயற்பாடுகளை மன்னிக்கவோ அல்லது குற்றமாக கருதவோ முடியாத நிலைமை உள்ளது.

பையனை மாத்திரம் குற்றவாளியாக்கும் அதன் மூலம் அவனை விசாரணைக்குரியவனாகவும் தண்டனைக்குரியவனாகவும் மாற்றும் தற்போதைய நிலை குறித்தே எமது கவலை அமைந்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது நீதியமைச்சின் பொறுப்பும் கடமையுமாகும்.

பாலியல் வல்லுறவுக்கான நியதிச் சட்டப்படியான வயதெல்லையை 13 ஆக குறைப்பதற்கான யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை.

13 வயதிற்கு குறைவடையாத சிறுமியொருத்தியின் இணக்கத்துடன் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் பையனும் வயது குறைந்தவனாக உள்ளபோது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முயலும்போது சட்டமா அதிபரின் அனுமதியை பெறுவதே எமது யோசனைகளின் முக்கியமான விடயம்.

நீதிமன்ற விசாரணைகள் நீதியின் நோக்கத்தை நிறைவேற்றும் என கருதும் பட்சத்திலேயே இந்த அனுமதி வழங்கப்படலாம்.

இவை பாலியல் வல்லுறவை குற்றமாக்காமல் விடும் நோக்கத்துடனேயே வயதெல்லையை குறைக்கும் நோக்கத்துடனேயே கொண்டு வரப்படுபவையல்ல.

சட்டத்தின் எந்த அறிக்கையும் எமது சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட விழுமியங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சு உறுதியாகவுள்ளது.

சட்டங்கள் நீதியின் நோக்கத்தை நிறைவேற்றுபவையாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakural.com/New%20web%20site...Important-5.htm
Reply


Messages In This Thread
[No subject] - by inthirajith - 09-17-2005, 06:06 AM
[No subject] - by Mathan - 09-17-2005, 08:03 AM
[No subject] - by வெண்ணிலா - 09-17-2005, 08:16 AM
[No subject] - by narathar - 09-17-2005, 09:02 AM
[No subject] - by Thala - 09-17-2005, 09:07 AM
[No subject] - by வெண்ணிலா - 09-17-2005, 09:07 AM
[No subject] - by narathar - 09-17-2005, 09:17 AM
[No subject] - by வெண்ணிலா - 09-17-2005, 09:21 AM
[No subject] - by narathar - 09-17-2005, 11:03 AM
[No subject] - by Mathan - 09-17-2005, 05:38 PM
[No subject] - by Jude - 09-17-2005, 06:57 PM
[No subject] - by kurukaalapoovan - 09-17-2005, 07:25 PM
[No subject] - by cannon - 09-17-2005, 09:56 PM
[No subject] - by nallavan - 09-17-2005, 11:54 PM
[No subject] - by Vasampu - 09-18-2005, 12:17 AM
[No subject] - by Eelathirumagan - 09-18-2005, 02:59 AM
[No subject] - by iruvizhi - 09-18-2005, 11:10 AM
[No subject] - by Mathan - 09-18-2005, 12:11 PM
[No subject] - by Birundan - 09-18-2005, 12:22 PM
[No subject] - by Mathan - 09-18-2005, 12:31 PM
[No subject] - by Birundan - 09-18-2005, 12:42 PM
[No subject] - by Vasampu - 09-18-2005, 02:22 PM
[No subject] - by Eelathirumagan - 09-18-2005, 02:35 PM
[No subject] - by Birundan - 09-18-2005, 02:50 PM
[No subject] - by Vasampu - 09-18-2005, 03:02 PM
[No subject] - by cannon - 09-18-2005, 03:16 PM
[No subject] - by narathar - 09-18-2005, 03:52 PM
[No subject] - by cannon - 09-18-2005, 04:54 PM
[No subject] - by Vasampu - 09-18-2005, 04:59 PM
[No subject] - by cannon - 09-18-2005, 05:07 PM
[No subject] - by Vasampu - 09-18-2005, 05:34 PM
[No subject] - by Birundan - 09-18-2005, 05:38 PM
[No subject] - by Vasampu - 09-18-2005, 06:26 PM
[No subject] - by Birundan - 09-18-2005, 06:37 PM
[No subject] - by narathar - 09-18-2005, 07:30 PM
[No subject] - by narathar - 09-18-2005, 07:35 PM
[No subject] - by narathar - 09-20-2005, 07:39 PM
[No subject] - by iruvizhi - 09-21-2005, 09:18 AM
[No subject] - by iruvizhi - 09-21-2005, 09:22 AM
[No subject] - by Mathan - 09-27-2005, 07:07 AM
[No subject] - by Thala - 10-02-2005, 12:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)