09-20-2005, 01:35 PM
lollu Thamilichee Wrote:தற்கொலை தற்கொலை தற்கொலை
எம்மவர்களுக் இந்த 4 எழுத்துதான் தெரியும்
ஒரு மனிதன் எவ்வளவு துடித்து வேதனைப்பட்டு
வேறுப்பு வந்து தற்கொலைக்கு போறான்???
கண்ணீர் கூட மனம் கசிந்து வருகிறது..
அதையே ஏற்றுக் கொள்ள முடியாத மனிதர்கள்..
தற்கொலை பற்றியா தெரிய போகுது???
தற்கொலை செய்வதற்கு என்ன தைரியம் வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை, வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்வதற்கு தான் தைரியம் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எத்தனையோ பிரைச்சனைகளை இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கின்றான் அந்த சமயங்களில் ஏதாவது ஒரு தருணத்தில் தற்கொலை செய்தால் என்ன என்று தோன்ற சாத்தியமிருகின்றது. அந்த நேரம் நடக்கும் மனப்போராட்டத்தில் ஒரு செக்கன் முடிவை தொடர்ந்து தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த கணத்தை அவர்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு வாழ முடிவு செய்துவிட்டால் தப்பித்து விடுவார்கள். நீங்கள் சொன்னபடி தற்கொலை செய்வதற்கு தான் தைரியம் வேண்டும் என்றால் அப்படி ஒரு தைரியம் யாருக்கும் வேண்டாம். அதுபோல ஒரு தைரியத்தால் நாம் ஏன் அன்புக்குரியவர்களை இழக்க வேண்டும். அதுதவிர இந்த தற்கொலை செய்பவர்கள் அதன்மூலம் சுற்றியிருக்கும் பலரை நோகடிக்கிறார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

