11-08-2003, 09:04 PM
<span style='font-size:25pt;line-height:100%'>எங்கை இருந்தவையாம்....?</span>
(இன்றைய இலங்கை அரசியலின் மாற்றம் உலகின் கண்களை உறுத்தும் விடயம். அந்த உறுத்தலின் முன் தமிழர் பிரதேசங்கள் போரால் சிதைக்கப்பட்டுக் கிடந்த போதெல்லாம் வாய்மூடிக் கிடந்தோரெல்லாம் இன்று வாய்திறந்து தர்மம் பேசும் வார்த்தை கேட்டு எழுந்த கவியிது.)
குண்டுகள் எம் உச்சி கிழித்த போது
குறுக்காலை போவார்
தொண்டையிலை நிண்டதென்னவாம் ?
குஞ்சுகள் , குழந்தைகள்
என்றெலாம் எம்முயிர்களைக் குடித்தவர்
பசிக்கிவர் அள்ளிக் கொடுத்தல்லோ
அழகு பார்த்தனர்.
ஐயோ கடவுளே !
ஆண்டவர் முன்னாலுமல்லவா
அறுவார் திண்டவை.
அப்பவெல்லாம் அனான் மாமா
எங்கையாம் அடைகிடந்தார் ?
எத்தினை சீவனின் எதிர்காலம் தின்றவள்
கூட்டாய் இன்று உலகெலாம்
ஒண்டா வருகினமாம்.
உவையெல்லாம் இதுவரை
எங்கை இருந்தவையாம்....?
'வலுவாய் நாமெல்லாம் கவனிக்கிறோம்"
இந்த வாய்களுக்கு இதை விட
வேறுவார்த்தை இல்லைப்போலை....!
அட வெறுவாய்க் கெட்டவரே !
இதுவாயொரு சொல் இல்லையென்றால்
நீரெல்லாம் வெறுவாய் தான் போம்....!
வல்லோராய் இருந்திட்டால்
எச் சொல்லாயினும் அடுக்குமோ....?
வையத்தை ஆழுகின்ற நாயகனாய்
வாங்கிக் கட்டுறது காணாமல்
மற்றவன் வேலிக்குள்
ஏனாம் தலை நீட்டல்....?
வேலிக்குக் காவலாய்
ஓணானை வைக்க
இங்கெவரும் கூலிக்காயில்லை.
கோபி மாமா உங்களுக்கும் தான்
இது நோபல் பரிசு வெல்லும்
நு}தனமில்லை.
'ஆடுகள் நனைகிறது
ஓநாய்கள் அழுகிறதாம்"
எங்களுக்கும் தெரிஞ்சகதை.
கழுகுகளின் பார்வைகளில்
பயங்கரமாய் நாங்களெல்லாம்.
புறாக்களை யாருமே
கண்டு கொள்வதாயில்லை.
05.10.03.
(இன்றைய இலங்கை அரசியலின் மாற்றம் உலகின் கண்களை உறுத்தும் விடயம். அந்த உறுத்தலின் முன் தமிழர் பிரதேசங்கள் போரால் சிதைக்கப்பட்டுக் கிடந்த போதெல்லாம் வாய்மூடிக் கிடந்தோரெல்லாம் இன்று வாய்திறந்து தர்மம் பேசும் வார்த்தை கேட்டு எழுந்த கவியிது.)
குண்டுகள் எம் உச்சி கிழித்த போது
குறுக்காலை போவார்
தொண்டையிலை நிண்டதென்னவாம் ?
குஞ்சுகள் , குழந்தைகள்
என்றெலாம் எம்முயிர்களைக் குடித்தவர்
பசிக்கிவர் அள்ளிக் கொடுத்தல்லோ
அழகு பார்த்தனர்.
ஐயோ கடவுளே !
ஆண்டவர் முன்னாலுமல்லவா
அறுவார் திண்டவை.
அப்பவெல்லாம் அனான் மாமா
எங்கையாம் அடைகிடந்தார் ?
எத்தினை சீவனின் எதிர்காலம் தின்றவள்
கூட்டாய் இன்று உலகெலாம்
ஒண்டா வருகினமாம்.
உவையெல்லாம் இதுவரை
எங்கை இருந்தவையாம்....?
'வலுவாய் நாமெல்லாம் கவனிக்கிறோம்"
இந்த வாய்களுக்கு இதை விட
வேறுவார்த்தை இல்லைப்போலை....!
அட வெறுவாய்க் கெட்டவரே !
இதுவாயொரு சொல் இல்லையென்றால்
நீரெல்லாம் வெறுவாய் தான் போம்....!
வல்லோராய் இருந்திட்டால்
எச் சொல்லாயினும் அடுக்குமோ....?
வையத்தை ஆழுகின்ற நாயகனாய்
வாங்கிக் கட்டுறது காணாமல்
மற்றவன் வேலிக்குள்
ஏனாம் தலை நீட்டல்....?
வேலிக்குக் காவலாய்
ஓணானை வைக்க
இங்கெவரும் கூலிக்காயில்லை.
கோபி மாமா உங்களுக்கும் தான்
இது நோபல் பரிசு வெல்லும்
நு}தனமில்லை.
'ஆடுகள் நனைகிறது
ஓநாய்கள் அழுகிறதாம்"
எங்களுக்கும் தெரிஞ்சகதை.
கழுகுகளின் பார்வைகளில்
பயங்கரமாய் நாங்களெல்லாம்.
புறாக்களை யாருமே
கண்டு கொள்வதாயில்லை.
05.10.03.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

