09-19-2005, 08:18 PM
<span style='font-size:22pt;line-height:100%'><b>ஜெர்மனி பொதுத்தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை இல்லை</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050919141111050919_schroeder203credito.jpg' border='0' alt='user posted image'>
ஜெர்மனியில் நடந்த பொதுத்தேர்தலில் உறுதியான முடிவுகள் எதுவும் ஏற்படாத நிலையில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் உரிமை தமக்கே உண்டு என இரு முக்கிய கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
செயல்படக்கூடிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுவருவதாக அவை கூறியிருக்கின்றன.
இந்த தேர்தல்கள் கடந்த ஆண்டு நடந்திருந்தால், சமூக ஜனநாயகக் கட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கும். வேலையின்மையை ஐம்பது லட்சம் என்ற அளவிலிருந்து குறைக்க அவர்கள் செய்த ஒப்பீட்டளவில், மெலிதான தொழிலாளர் சீர்திருத்தங்கள் வாரந்தோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதுடன், பிராந்தியத் தேர்தல்களில் தொடர்ச்சியான பல தோல்விகளுக்கு வழிவகுத்தன.
ஆனால், ஏன்ஜெலா மெர்க்கல் முன்வைத்த , வேட் எனப்படும் பெறுமதி கூட்டப்பட்ட வரியின் மீது, அளவு குறிப்பிடப்படாத வரி உயர்வு உள்பட பல கூடுதல் தீவிரமான திட்டங்கள் , வாக்காளர்களை மேலும் கலவரமடைய செய்துவிட்டது போல் தோன்றுகிறது.
தற்போதுள்ள யாரலும் புரிந்துகொள்ள முடியாத வரி அமைப்புக்கு பதிலாக, ஒரே நிலையிலான வரி அமைப்பு தேவை என்று அவரது ஆலோசகர், பௌல் கிர்ஷோட் முன்வைத்த யோசனையை சமூக ஜனநாயகவாதிகள் பிடித்துக்கொண்டு இது பணக்காரர்களுக்கு லாபமளிக்கும், ஏழைகளைப் பாதிக்கும் என்று கூறினர்.
ஒரு பெண் நாட்டிற்கு தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பற்றி சில பழமைவாதிகளின் மத்தியில் வெளிப்படையான வெறுப்பு காணப்பட்டது.
கிழக்கு ஜெர்மனியிலிருந்து வரும், ஒரு குழந்தை பெறாத, பௌதிகப் பேராசிரியர் ஒரு உணர்ச்சிகளற்ற எதைப்பற்றியும் கவலைப்படாத சான்சலராகத்தான் இருக்க முடியும் என்று, ஷ்ரோடர் சூசகமாகக் கூறிக்கொண்டிருந்ததைப் பற்றி கட்சியின் விசுவாசிகளால் மறுத்து எதிர்ப்பிரச்சாரம் செய்ய முடியவில்லை.
தற்போதைய நிலையில் யார் ஆட்சியமைக்கப் போகிறார் என்பதை அடுத்த சில வாரங்களில் நடக்கும் அரசியல் பேரங்கள்தான் முடிவுசெய்யும்.</span>
-BBC tamil