09-18-2005, 07:55 PM
ஜெர்மனியில் பொதுத்தேர்தல்; ஷ்ரோடர் மெர்கெல் இடையே கடும் போட்டி
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40813000/jpg/_40813616_composite203i.jpg' border='0' alt='user posted image'>
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத்தேர்தலில் நாட்டின் 6 கோடி 20 லட்சம் வாக்காளர்கள் ஒரு புதிய அரசைத் தேர்தெடுப்பதற்காக வாக்களித்தனர்.
தற்போது வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஆளும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சி கூட்டணி பிராந்திய மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில் வரிசையாக தோல்வி அடையவே சால்சல்லர் கெர்ஹார்ட் ஷ்ரோடர் இயல்பாக தேர்தல் வருவதற்கு ஓராண்டு முன்பாகவே இந்த பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஷ்ரோடருக்கு போட்டியாளராக இருப்பது ஜெர்மனியின் முதல் பெண் சான்சலராகப்போகிறவர் என்று பத்திரிகைகள் எழுதிவரும் - கிருத்துவ ஜனநாயகக் கட்சியின் தலைவி அங்கெலா மெர்கெல்.
கடந்த ஏழு ஆண்டுகளாக ஷ்ரோடரின் சோஷலிஸ ஜனநாயகக்கட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் பசுமைக் கட்சியுடன் ஜெர்மனியில் கூட்டாட்சி நடத்திவருகிறது. இந்த கூட்டணி மீண்டும் தேர்வுசெய்யப்பட்டால்தான் தாங்கள் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களின் பலன்களை நாடு அனுபவிக்க முடியும் என்று ஷ்ரோடர் பிரச்சாரத்தின்போது வாதிட்டிருந்தார்.
ஆனால் ஜெர்மனியில் தற்போது 50 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளித்து கட்டுப்படுத்த தங்களால்தான் முடியும், ஜெர்மனியில் கட்டாயம் ஆட்சி மாற்றம் வருவதற்கான தருணம் இது என்று அங்கெலா மெர்கெல் கூறியிருந்தார்.
மெர்கெல் தலைமையிலான கிருத்துவ ஜனநாயகக் கட்சி தாராளவாத ஜனநாயகக் கட்சியுடன் அமைத்துள்ள கூட்டணிதான் அதிக இடங்களைப் பெறும் என்று எல்லா கருத்துக் கணிப்புகளும் காட்டியிருந்தாலும், தனியாக ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெற இக்கூட்டணி திணறும் என்றே தெரிகிறது.
-BBC tamil