09-18-2005, 04:39 PM
நன்றே விளங்குது நாரதா. ஆனால் எம்மத்தியில் பலதரப்பட்டவர்களும் இருப்பார்கள் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவாதத்திற்கு உதவ ஓரளவு தரப்படுத்த முயன்றேன் (http://www.yarl.com/forum/viewtopic.php?t=6393&start=45). ஆனால் முழுமையானது என கூறவில்லை.
சமுதாயத்தில் பெரும்பான்மையானவர்கள் 1 உம் 2 ஆம் தரப்பினரும் என நினைக்கிறேன். அவர்களிற்கு உதவ முயலும் 4 ஆம் 5 தரப்பு அதி சிறுபான்மையினருக்கு 3ஆம் வர்க்க சிறுபான்மையினர் தடையாக இருக்கிறார்கள். இதில் ஏமாற்றப்படுவது பெரும்பான்மையினரே.
தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் ஆட்ச்சிக்காலத்தில் கறுப்பினத்தவரின் சனத்தொகையை கட்டுப்படுத்த பல வழிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தினார்கள். அதனால் கறுப்பினத்தவர் மத்தியில் காப்புறை ஒரு இன அழிப்புக்கருவியாக பிரச்சாரிக்கப்பட்டது. இன்று இன அடக்குமுறை முடிவிற்கு வந்துவிட்டது. கறுப்பினத்தவிரின் உயிர்கொல்லியாக இருப்பது ஏயிட்ஸ். ஆனால் பெரும்பான்மையான கிராமத்து மக்கள் இன்றும் காப்புறைகளை வெள்ளையினத்தவரின் இன அழிப்புக்கருவியாக பார்க்கும் பரிதாப நிலை தெடர்கிறது. ஒரு குறுகிய காலத்தில் (1-2 சந்ததியில் அல்லது எமது வாழ்நாளில்) சந்தர்ப சூழ்நிலை காரணமாக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்திலிருந்து அந்த இனம் -சமுதாயம் விடுதலை பெறமுடியாமல் அவதியுறுகிறது. அந்தளவிற்கு அவை புரையோடி விட்டன பாமரமக்கள் மத்தியில்.
எமது சமுதாயத்திலுள்ள மூடநம்பிக்கைகள் கடவுளின் பெயரால் முன்னெடுக்கப்படும் சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் எத்தனை சந்ததியாக தொடரப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை நிர்வாக மயப்படுத்தப்பட்டவையும் கூட. ஏடு தொடக்கியதிலிருந்து பாடசாலையில் ஒவ்வெருவருடமும் இந்து சமயப்பாடம் என்று கா.பொ சாதாரண நிலை வரை எத்தனை கற்பனைக்கதைகளை புனித வரலாறாக எமது கலாச்சாரத்தின் அங்கமாக உள்வாங்கிறோம். இவற்றுக்கு மெருகூட்டி உளவியல்ரீதியில் உறுதிசேர்க்கும் வகையில்தான் சிறுவயதிலிருந்து எமது அன்றாடவாழ்வும் திருவிழாக்கள் புூசைகள் அருச்சனைகள் மேடையேற்றப்படுகிறது. இப்படியாக சந்ததி சந்ததியாக பாதிக்கப்பட்டவர்கள் விடுதலை பெறுவது என்பது இலகுவான காரியமா?