09-18-2005, 03:10 PM
nallavan Wrote:மருதடிப்பிள்ளையார் திரும்பினதிலயிருந்து மடுமாதா ஆடினது வரைக்கும் உப்பிடி நிறையக் கதைகள் கேட்டாச்சு.
தேவாலயத்தைப் பாத்து பிள்ளையார் மூஞ்சையத் திருப்பினவரெண்டாஇ கடவுள்களுக்குள்ளயே எவ்வளவு பெரிய சண்டை நடந்திருக்க வேணும். இன்னொரு கடவுளின்ர முகத்தைப் பாக்கவே சகிச்சாக மூஞ்சையத் திருப்பிற கடவுளை வணங்கிற மனுசர் எப்பிடி இன்னொரு மனுசனை மதிப்பினமோ தெரியேல.
போரில இந்துஇ கிறிஸ்தவக் கோயிலெண்டு எல்லாம் தான் அழிக்கப்பட்டிருக்கு. அப்ப உந்தக் கடவுளெல்லாம் எங்கபோனவையெண்டு கேக்கிற கேள்வி நியாயமானதாத்தான் படுது.
எனக்கு கடவுள் இருக்கிறரோ இல்லயோ எண்டதப் பற்றிக் கவலையில்லை. கடவுள் உண்மையா இருந்தாக்கூட அந்தப் 'பரதேசிய' வணங்கமட்டும் எனக்கு விருப்பமில்ல. எங்கயேன் கண்டா நாலு சாத்துச் சாத்திக் கொல்ல வேணுமெண்டது தான் என்ர விருப்பம்.
கடவுளுக்காக வக்காலத்து வாங்கிற ஆக்களுக்கு ஒரு வேண்டுகோள். கடவுள்தான் மனுசனப் படைச்சாரெண்டால் என்ன காரணத்துக்காகப் படைச்சரெண்டு சொல்லுவியளோ. அதுக்குப்பிறகு ஏன் அவனைக் கொல்ல வேணுமெண்டு நான் விளக்கிறன்.
அவனை அடிக்கிறதுக்காகத் தேடியலையிறதிலயும் பாக்க அவன் இல்ல எண்டு இருக்கிறது எனக்கு நல்லதாப் படுது. நீங்கள் என்ன சொல்லிறியள்?
கடவுள்களின் கோட்பாடுகளையும் மதங்களின் கொள்கைகளையும் கூற்றுக்களையும் வச்சே கடவுளைக் கடுமையாக விமர்சிக்கலாம். கடவுள் ஓர் அயோக்கியன்இ சாடிஸ்ட்இ மனநோயாளி எண்டு நிறுவலாம்.
கடவுளை பரதேசி என்கிறீர்களா? இது முற்றிலும் உண்மை பரதேசி என்றால் பலதேசங்களிலும் சுற்றுபவர் அதாவது "ரூறிஸ்ட்" அது உண்மதானே, கடவுள் எங்கும் நிறைந்தவர் என்பதுதானே கடவுள் நப்பிக்கை உடையவர்களின் கருத்து. :wink:
.
.
.

