09-18-2005, 03:02 PM
Birundan Wrote:சேலைகட்டிய மாதரை நம்பாததே
சேல் அகட்டிய மாதரை நம்பாதே
சேல் விழியாள், சேல் போன்ற அகண்டவிழியை உடைய பெண்கள், பெண்கள் கதைக்கும் போது பார்தால் தெரியும் எந்த சமயத்தில் அவர்கள் விழிகள் விரியும், கோபத்தில்,ஆச்சரியப்படும்போது,ஜாடைகாட்டி புறம் சொல்லும்போது. நாலைந்து பெண்கள் கதைத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சபையில் பேசிக்கொண்டு இருக்கும்போது பேசிக்கொண்டிருக்கும் பெண்ணை பிடிக்காதுவிட்டால் அல்லது அவரது கருத்து பிடிக்காதுவிட்டால் மற்றவருக்கு கண்களால் ஜாடைகாட்டுவார்கள், அதன் பொருள் (அவவின் அழகில்,அவவின் ஒசிலில்,அவவின் திறத்தில்) எனபொருள்பட விழியை அகட்டி அகட்டி ஜாடைகாட்டுவார்கள், இப்படிபட்ட ஜாடைகாட்டும் பெண்களை நம்பாதே இவர்கள்தான் குளப்பம் விளைவிப்பவர்கள்.
\"சேல் அகட்டிய மாதரை நம்பாதே\" இதுவே காலப்போக்கில் \"சேலைகட்டிய மாதரை நம்பாதே\" என திரிபுபட்டுவிட்டது,
எல்லா பெண்களையும் நம்பலாம் இப்படிப்பட்ட பெண்களை தவிர்த்து.
அப்படியே இருக்கலாம் பிருந்தன்... இப்படி திரிபுபட்ட இன்னுமொரு வாக்கியம்
மோகம் 30 நாள்.. ஆசை 60 நாள்.
மோகம் மூப்பது நாளை.... ஆசை அறுவது நாளை என்ற பழமொழியே பிற்பாடு மோகம் 30 நாள்.. ஆசை 60 நாள் என்று திரிபுபட்டதாக எங்கோ படித்த நினைவு.. அது போலத்தான் சேலை கட்டிய மாதரை நம்பாதே என்ற கூற்றும் திரிபடைந்து வந்திருக்கலாம்.... சேலை கட்டிய மாதரை நம்ப கூடாது என்றால் தமிழ் பெண்கள் எவரையுமே நம்பமுடியாதெல்லோ.. :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

