09-18-2005, 12:27 AM
அவர்தாம் பெரியார் - பார்
அன்புமக்கள் கடலின் மீ தில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்...(அவர்)
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
வஞ்ச கர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலை பெரும் படையின் தொடுப்பு...(அவர்)
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்....(அவர்)
தமிழர் தவம்கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும்தலை மேடை
நமக்குத் தாண்டி அந்த வாட்படை
நமை அவரின் போருக் கொப்படை...(அவர்)
(குயில் :26.8.1958)
அன்புமக்கள் கடலின் மீ தில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்...(அவர்)
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
வஞ்ச கர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலை பெரும் படையின் தொடுப்பு...(அவர்)
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்....(அவர்)
தமிழர் தவம்கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும்தலை மேடை
நமக்குத் தாண்டி அந்த வாட்படை
நமை அவரின் போருக் கொப்படை...(அவர்)
(குயில் :26.8.1958)

