09-17-2005, 07:35 PM
<b>சுடலையில் ஆடிய பேய்</b>
இது நடந்தது 60 வருடங்களுக்கு முதல். துண்டி மயானம் கடற்கரை ஓரமாக காட்டுப்பகுதிக்குள் அமைந்திருந்தது. அதனை பார்த்தவாறு கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாசாலை.
ஆசிரியர்கள் அங்கு தங்கி பயிற்சி பெறுவதுதான் வழக்கம்.
இரவு சாப்பாட்டுக்கு பிறகு ஆசிரியர்களில் பலர் சுருட்டு புகைப்பர். அவர்களும் மற்ற ஆசிரியர்களும் கலாசாலையின் படிக்கட்டுகளில் அமர்ந்து கடற்கரைப்பக்கமாக இருண்டு கிடக்கும் காட்டை பார்த்தபடி பலதும் பேசிக்கொள்வர்.
சில நேரங்களில் சுடலைப்பக்கம் ஒன்று இரண்டு சிதைகள் எரிந்து புகை எழுவதையும் காணக்கூடியதாக இருக்கும். அந்த காலத்திலே மின்சாரம் கிடையாது. .இலாம்பு விளக்குகள் கலாசாலையில் தேவைப்படும் இடங்களில் எரியும். வீதிகள் இருண்டு கிடக்கும்.
இப்படியான ஒரு நாளில் ஆசிரியர் ஒருவர் சுருட்டை சப்பியபடி சுடலைப்பக்கம் திரும்பி பார்த்தார். அவருக்கு அவர் கண்களையே நம்ப முடியவில்லை. சுடலைப்பக்கம் சில சிதைகள் எரிந்து கொண்டிருந்தன. ஆனால் அவற்றில் ஒன்றுக்கருகில் தணல்கம்புகள் நடனம் ஆடுவது போல இருந்தது. தன் கண்களை நம்பமுடியாமல் அருகில் இருந்த ஆசிரியரையும் அழைத்து சுடலைப்பக்கம் பார்க்க சொன்னார். அவரும் பார்த்து அதிர்ந்து போனார். தணல் கம்புகளுடன் நடனமாடுவது பேய்தான் என்ற முடிவுக்கு வந்தனர். ஆசிரியர்களை பயம் பிடித்து கொண்டது.
சுடலைப்பக்கம் அமர்ந்து புகைபிடிக்கும் ஆசிரியர்கள் இப்போது அந்த பக்கம் வருவதில்லை. இப்படி மூன்று நாட்கள் ஆடிய பேய் அதற்கு பிறகு நடனம் ஆடுவதை நிறுத்தி விட்டது.
<img src='http://www.cqj.dk/Fotos/pashupatinath%20cremation.jpg' border='0' alt='user posted image'>
சுடலையில் ஆடிய பேய் வேறு யாருமல்ல. அந்த ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் மாணவர்களாக இருந்த எனது தந்தையாரும், அவரது நண்பரும் தான். சுருட்டு மணம் பிடிக்காத இவர்கள், ஆசிரியர்களை கலாசாலையின் மறுபக்கம் .இருந்து சுருட்டு புகைக்க வைக்க செய்த விளையாட்டு தான் அது. இருட்டுக்குள் துண்டி மயானத்தில் எரிந்து கொண்டிருந்த கட்டைகளை து}க்கிபிடித்தபடி இவர்கள் மூன்று நாட்கள் ஆடிய நடனம், கலாசாலையின் கடற்கரை பக்கத்து படிக்கட்டுகளில் இருந்து புகைக்கும் ஆசிரியர்களை மறுபக்கம் அனுப்பிவிட்டது.