09-17-2005, 07:30 PM
Mathan Wrote:jothika Wrote:அன்பானவனே உனக்கென்னாச்சு
காதலித்த மாதிரி நடித்தாயே
உன் மனதில் இடம் பிடித்த
என்னை ஒரு நிமிடத்தில்
தூக்கி எறிந்தாயே
உன் நினைவில் வாடும்
என்னை பலபெயர்கள்
மத்தியில் அவமானப்
பட விட்டாயே
சொந்தங்கள் வேண்டாம்
நீதான் வேணும் என்று
நின்ற என்னை தூக்கி
எறிந்தாயே
நன்றாக இருக்கு ஜோதிகா. தொடர்ந்து எழுதுங்கள்.
புலத்தில் இது போன்ற பல சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன். பெரும்பாலும் 16-18 வயது பெண்கள் காதலில் வீழ்ந்து பின்னர் காதலுனுக்காக சொந்தத்தை துறந்து வீட்டை விட்டு வெளியேற தயாராகிறார்கள் அல்லது வெளியேறுகின்றார்கள். பின்பு சில சமயங்களில் காதலன் பின்வாங்கும் போது காதலியின் நிலைமை நிர்க்கதியாகிவிடுகின்றது. ஆண் ஓரிரு நாட்களுக்கு பிறகு சகஜமாக அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்ற போதிலும் அந்த பெண்ணால் எங்கும் செல்ல முடிவதில்லை, அது அவளை தான் கூடுதாக பாதிக்கின்றது என்று சொல்ல வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடக்கும் போது அதன் பின்பு வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கை முற்று முழுதாக இல்லாமல் போய்விடுகின்றது, அத்துடன் அவள் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றும் சந்தேக கண்ணோடு பார்க்கப்படும். பெரும்பாலும் பாடசாலை கல்வியும் அத்துடன் நிறுத்தப்பட்டு அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கப்படுவது கூட நடக்கின்றது. ஏற்கனவே மனசு காயப்பட்டிருக்கும் நிலையில் ஒரு திடீர் திருமணமும் சமுதாய நெருக்குதல்களும் மனதை இன்னும் எந்த அளவிற்கு காயப்படுத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
ம்ம் நீங்கள் சொல்லுறதும் சரிதான் அண்ணா உலகில் எவளவோ வித்தியசாமாகத்தானே நடக்குது

